மனோஜ் குமார் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன்

மனோஜ் குமார் பாண்டே

Lieutenant M K Pandey statue at Param Yodha Sthal Delhi.jpg
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்புசூன் 25, 1975(1975-06-25)
சீதாபூர், சீதாபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு3 சூலை 1999(1999-07-03) (அகவை 24)
பங்கர் ரிட்ஜ், கலுதார், பட்டாலிக் செக்டார், கார்கில், லடாக்
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளைFlag of Indian Army.svg இந்திய இராணுவம்
தரம்Captain of the Indian Army.svg கேப்டன்
படைப்பிரிவு11-வது கோர்க்கா ரைபிள்ஸ்
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர்
குகார்தன்B
கலுதார் சண்டைகள்
விருதுகள்Param-Vir-Chakra-ribbon.svg பரம் வீர் சக்கரம்[1]

கேப்டன் மனோஜ் குமார் பாண்டே (பரம் வீர் சக்கரம்) (Manoj Kumar Pandey), (25 சூன் 1975 – 3 சூலை 1999) இந்திய இராணுவ அதிகாரியும், இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருதை பெற்றவரும் ஆவார்.[2] கோர்க்கா ரைபிள்ஸ் படையணியில் அதிகாரியான கேப்டன் மனோஜ் குமார் பாண்டே 1999 கார்கில் போரில் வீரதீரத்துடன் போராடியமைக்காக 1999-இல் இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது. இவர் புனேவில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் பட்டப்படிப்பு பயின்றவர்.[3] இவர் 1997-இல் கோர்க்கா ரைபிள்ஸ் படையணியின், 11-வது பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றவர்.[4]

கார்கில் போர்[தொகு]

1999-ஆம் ஆண்டு மே மாத துவக்கத்தில் கார்கில் மலைகளில் பாகிஸ்தானியப் படைகளின் நடமாட்டம் அறியப்பட்டது.[5] அவ்வமயம் கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவின் கோர்க்கா ரைபிள்ஸ் அணியின் 11-வது படையணி, கார்கில் போர்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.[6][7] இவரது படையணி கார்கில் மலையில் ஜுபார் சிகரத்தைக் கைப்பற்றியது.[8] பாகிஸ்தானிய படைகளின் குண்டு வீச்சால் பலத்த காயம் அடைந்த கேப்டன் மனோஜ் குமார், தன் படையணிகளுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டே தீரமுடன் போராடி பாகிஸ்தானிய நிலைகள் மீது மீது குண்டு வீசி பாகிஸ்தானியப் படைகளை கொன்றழித்தார். இறுதியில் போரின் போது பலத்த காயங்களால் வீரமரணமடைந்தார்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. 18 October 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "LT MANOJ KUMAR PANDEY, PARAM VIR CHAKRA (Posthumous)". 2020-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. mike squadron (Mustangs)
  4. May 31, TNN. "'He died the most glorious death' | Pune News - Times of India". The Times of India (ஆங்கிலம்).
  5. "The Tribune, Chandigarh, India - Opinions". www.tribuneindia.com.
  6. "Captain Manoj Kumar Pandey PVC | Honourpoint".
  7. "20 years after Kargil: The Gorkha Rifles' Pune-to-Kargil about turn, a move for the nation". Hindustan Times (ஆங்கிலம்). 26 July 2019.
  8. The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது "Profile" and "Citation" tabs.

மேற்கோள்கள்[தொகு]

  • Bellamy, Chris (2011), The Gurkhas: Special Force, Hodder And Stoughton, ISBN 978-1848543423

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_குமார்_பாண்டே&oldid=3566986" இருந்து மீள்விக்கப்பட்டது