சாவித்திரி கனோல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவித்திரி கனோல்கர்
பிறப்புEve Yvonne Maday de Maros
(1913-07-20)20 சூலை 1913
நியுசாட்டெல், சுவிட்சர்லாந்து
இறப்பு26 நவம்பர் 1990(1990-11-26) (அகவை 77)
புது தில்லி, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
வாழ்க்கைத்
துணை
மேஜர் ஜெனரல் விக்கிரம் ராம்ஜி கனோல்கர்

சாவித்திரிபாய் கனோல்கர் (Savitri Bai Khanolkar) (இயற்பெயர் Eve Yvonne Maday de Maros, 20 சூலை 1913 – 26 நவம்பர் 1990)[1] இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்கரம் மற்றும் பிற உயர்ந்த விருதுகளின் வடிவமைப்பாளர் ஆவார்.[2] சாவித்திரி கனோல்கர் ஒரு ஓவியரும் ஆவார்.

கேப்டன் விக்ரம் இராம்ஜி கனோல்கர் சுவிட்சர்லாந்தில் இராணுவப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, 1932-இல் சாவித்திரிபாயை மணந்து கொண்டார்.[3] 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், மேஜர் ஜெனரல் ஹிரா லால் அடல் வேண்டுகோளின் பேரில், போர்க் காலத்தில் மற்றும் அமைதிக் காலத்தில் இராணுவத்தினரின் வீர தீர செயல்களுக்காக வழங்கும் பரம் வீர் சக்கரம், அசோகச் சக்கரம் போன்ற விருதுகளை வடிவமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டார். [1][4]

தற்செயலாக இவர் வடிவமைத்த முதல் பரம் வீர் சக்கரம் விருது, இவரது மூத்த மகள் குமுதினியின் கணவரின் அண்ணனான சோம்நாத் சர்மாவிற்கு 1947-இல் வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Satyindra Singh (20 June 1999). "Honouring the Bravest of the Brave". The Tribune, Chandigarh. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  2. "Param Vir Chakra & its Designer Savitri Bai Khanolkar". Archived from the original on 2021-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  3. http://pibarchive.nic.in/archive/ArchiveSecondPhase/DEFENCE/1952-JULY-DEC-MIN-OF-DEFENCE/PDF/DEF-1952-08-29_219.pdf
  4. Sumit Walia (Jan 23, 2009). "The first Param Vir Chakra". Sify.com. Archived from the original on 2010-10-27. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்திரி_கனோல்கர்&oldid=3553600" இலிருந்து மீள்விக்கப்பட்டது