உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் ஹமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவில்தார்

அப்துல் ஹமித்

2000-இல் இந்திய அஞ்சல் தலையில் அப்துல் ஹமித்
பிறப்பு(1933-07-01)1 சூலை 1933
தாமுபூர், காசிப்பூர் மாவட்டம், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 செப்டம்பர் 1965(1965-09-10) (அகவை 32)
சிமா, கேம் கரண், தரண் தரண் மாவட்டம் பஞ்சாப், இந்தியா
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1954–1965
தரம் ஹவில்தார்
படைப்பிரிவு4-வது கிரெனேடியர் படையணி
போர்கள்/யுத்தங்கள்இந்திய சீனப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1965
அசல் உத்தர் சண்டை
விருதுகள் பரம் வீர் சக்கரம்[1]
சமர் சேவா மெடல்
ரக்‌ஷா மெடல்
சைனிக் சேவா மெடல்
உறவினர்ரசூலான் பீவி (மனைவி; ?-1965)
பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட எம்-48 பேட்டன் டாங்கி, அகமதுநகர் கவச வாகன அருங்காட்சியகம்
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் அப்துல் ஹமீதின் மார்பளவுச் சிற்பம்

ஹவில்தான் அப்துல் ஹமிது (Abdul Hamid), PVC (1 சூலை 1933 – 10 செப்டம்பர் 1965), இந்திய இராணுவத்தின் எறிகனை வீச்சு படையணியினைச் சேர்ந்த அப்துல் ஹமீத், 1965 இந்திய பாகிஸ்தான் போரின் போது, பஞ்சாபில் நடைபெற்ற அசல் உத்தர் சண்டையின் போது, இவர் தனியொருவராக பாகிஸ்தானின் நான்கு பேட்டன் டாங்குகளை வீழ்த்தினார், மேலும் இவரது படையணி 13 பாகிஸ்தான் டாங்குகளை வீழ்த்தியது.. வீரதீரத்துடன் போராடிய அப்துல் அமிது, 10 செப்டம்பர் 1965 அன்று போரில் வீர மரணமடைந்தார். போரின் போது இவரது வீர தீர செயல்களைப் பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர், இவரது மறைவிற்குப் பின்னர் 1967-இல் பரம் வீர் சக்கரம் விருது வழங்கினார்.

மரபுரிமைப் பேறுகள்

[தொகு]

1988 பரம் வீர் சகக்ரம் எனும் தொலைக்காட்சித் தொடரின் பத்தாம் பகுதியில் அப்துல் ஹமிதின் வீர தீர செய்ல்களை காட்டுகிறது.[2]

ஆவணப்படம்

[தொகு]

அசல் உத்தர் சண்டை – டாங்குகள் போர் (2018) எனும் டிஸ்கவரி தொலைக்காட்சித் தொடரில் அப்து ஹமித்தின் வீர தீர செயல்களை எடுத்துக்காட்டியுள்ளது.[3][4]

இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள ஹவில்தார் அப்துல் ஹமிதின் கதையில் போர் நிகழ்வுகளையும், போரில் அப்துல் ஹமிதின் வீர தீர செயல்களையும், வீர மரணத்தையும் விரிவாக எடுத்துரைத்துள்ளது.[5]

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]
  1. Rajat Pandit (updated 12 August 2018) "National War Memorial to miss August 15 deadline". Times of India (). Retrieved on 26 November 2018.
  2. Cheena Kapoor (10 September 2017). "Army Chief to keep promise made to 1965 martyr's wife". Daily News and Analysis. Archived from the original on 17 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 February 2018.
  3. "Battle of Asal Uttar – Largest Tank Battle Since World War II Mission & Wars". Veer by Discovery. Archived from the original on 6 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2018.
  4. "This R-Day, get ready for Discovery channel's 'Battle Ops'". The Hindu. 25 January 2018 இம் மூலத்தில் இருந்து 6 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180806152611/https://www.thehindu.com/society/discovery-channels-new-series-battle-ops-on-indias-iconic-military-operations/article22520490.ece. பார்த்த நாள்: 22 April 2018. 
  5. ADGPI. "Story of CQMH Abdul Hamid". Youtube. Indian Army. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ஹமித்&oldid=3811153" இலிருந்து மீள்விக்கப்பட்டது