உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியா-பாகிஸ்தான் போர், 1965

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய-பாகிஸ்தான் போர், 1965 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய-பாகிஸ்தான் போர், 1965
இந்திய-பாகிஸ்தான் போர்களின் பகுதி
நாள் ஆகஸ்ட் - செப்டம்பர் 23, 1965
இடம் இந்திய உபகண்டம்
தாஷ்கெண்ட் ஒப்பந்தம்
பிரிவினர்

இந்தியா

பாகிஸ்தான்
தளபதிகள், தலைவர்கள்
ஜொயந்தோ நாத் சவுத்திரி
ஹர்பாக்ஷ் சிங்
அயூப் கான்
முசா கான்
இழப்புகள்
3,264 பேர் கொல்லப்பட்டனர்[1]
8,623 பேர் காயம்[1]
(ஜூலை முதல் போர்நிறுத்தம் வரை)
4,000 - 8,000 பேர் கொலை அல்லது கைப்பற்றப்பட்டனர்[2][3][4]
(ஜூலை முதல் செப்டம்பர் 6) 3,800 பேர் கொலை[5]
(செப்டம்பர் 6 - 22)

இந்திய-பாகிஸ்தான் போர், 1965 (Indo-Pakistani War of 1965) ஏப்ரல் 1965 முதல் செப்டம்பர் 1965 வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இது இருநாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் குறித்து உருவான இரண்டாவது காஷ்மீர் போர் என அழைக்கப்படுகிறது. முதலாவது காஷ்மீர் போர் 1947 இல் இடம்பெற்றது. ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஜிப்ரால்ட்டர் நடவடிக்கை என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானியப் படைகள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இந்நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது போர் தொடங்கியது. மொத்தம் ஐந்து வாரங்கள் நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். ஐக்கிய நாடுகளின் அமைதி முயற்சிகளை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டு அதன் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் தாஷ்கெண்ட் நகரில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

போரின் பெரும் பகுதி தரைப்படைகளினால் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்னாட்டு எல்லைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டது. 1947 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்போரின் போதே காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் விமானப் படைகள் தரைப் படைக்கு உதவியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏனைய இந்திய-பாகிஸ்தான் போர்களைப் போலவே இப்போர் நிலவரங்கள், மற்றும் விவரங்கள் பெருமளவு வெளியில் தெரிய வரவில்லை.

போரின் தொடக்கத்தில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவின் டித்வால், ஊரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானின் மூன்று முக்கிய இராணுவத் தளங்களை இந்தியா கைப்பற்றியது. செப்டம்பர் 1 இல் ஜம்மு பகுதிக்குள் அக்நூர் பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியா விமானப் படையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியது.

செப்டம்பர் 6, 1965 இல் பன்னாட்டு எல்லையைக் கடந்து லாகூர் நகரை அண்டினர்[6]. ஒரு மணி நேரத்தில் லாகூரைக் கைப்பற்றுவோம் என இந்தியா அறிவித்தது. அதே நாளில் பாகிஸ்தான வான் படையினரின் தாக்குதலில் பத்து இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 10 ஆம் நாளில் இந்தியாவில் அம்ரித்சர் நகரை பாகிஸ்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

போர் நிறுத்தம்

[தொகு]

செப்டம்பர் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதனை அடுத்து சோவியத்தின் தாஷ்கெண்ட் நகரில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப் கானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்குத் திரும்ப அழைக்க முடிவு செய்தனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கானோர் ஊடுருவியுள்ளதை உறுதிப்படுத்திய ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் திணைக்களத்தின் ஆவணம்.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]