இந்தியத் துணை இராணுவப் படைகள்
இந்தியத் துணை இராணுவப் படைகள் (Paramilitary forces of India) என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படைப் பிரிவுகள் ஆகும். இப்படைகள் உள்நாட்டு பாதுகாப்புப் பணிகள் செய்வதுடன் இந்தியாவின் பன்னாட்டு எல்லைகளையும் மற்றும் பன்னாட்டு கடல் எல்லைகளையும் கண்கானித்து காக்கிறது. கீழ்கண்ட படைகள் துணை இராணுவப்படைகள் ஆகும்:
- மத்திய பின்னிருப்பு காவல் படை (CRPF) [1] [2] - 3,13,678 படை வீரர்கள்
- எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) - 2,57,363 வீரர்கள்
- இந்திய - திபெத் எல்லைக் காவல்படை - (ITBP) - 89,432 வீரர்கள்
- மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF) - 1,44,418 வீரர்கள்
- சிறப்பு எல்லைப்புறப் படை - (SFF) - 10,000 வீரர்கள்
- இரயில்வே பாதுகாப்புப் படை - (RPF)
- சசசஸ்த்திர சீமை பலம் (SSB) - 76,337 வீரர்கள்
- தேசிய பாதுகாப்புப் படை - (என். எஸ். ஜி) - 14,500 வீரர்கள்
- சிறப்பு எல்லைப்புறப் படை - (எஸ் எஸ் எப்) - 5,000 - 10,000 வீரர்கள்
- அசாம் ரைப்பிள்ஸ் (AR) - 63,747 வீரர்கள் [3]
- ராஷ்டிரிய ரைபிள்ஸ்