மலைப்பாம்பு நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலைப்பாம்பு நடவடிக்கை
இந்திய-பாகிஸ்தான் போரின்(1971)த்தின் ஒரு பகுதி
தேதி டிசம்பர் 8/9, 1971
இடம் அரபிக்கடல், கராச்சி துறைமுகம் அருகே, பாகிஸ்தான்
முடிவு இந்திய கடற்படைக்கு வெற்றி
மோதியவர்கள்
இந்தியா
இந்தியா
பாக்கித்தான்
பாகிஸ்தான்
பலம்
1 ஏவுகணை படகு
2 பல்நோக்கு ப்ரிகேட்ஸ்
இழப்புகள்
இல்லை [1] வளைகுடா நட்சத்திரம் மூழ்கடிக்கப்பட்டது[1]
பிஎன்எஸ் டாக்கா, எஸ்எஸ் ஹர்மட்டன் சேதப்படுத்தப்பட்டது [1]

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரின் பொழுது இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற மலைப்பாம்பு நடவடிக்கை. படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக கராச்சி துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலை அடுத்து,பாகிஸ்தான் அதன் கடற்கரையை வான்வழியாக கண்காணித்தது. மேலும் இந்தியாவின் பெரிய கடற்படை கப்பல்களை கண்டப்பின் மேலுமொரு நடவடிக்கை அரங்கேறும் என எண்ணியது[1]. கடல்சார் வணிக கப்பல்களுடன் பாகிஸ்தான் கலந்து இந்திய கடற்படையை ஏமாற்ற நினைத்தது. பாகிஸ்தானின் இந்த செயல்களை தொடர்ந்து , டிசம்பர் எட்டு மற்றும் ஒன்பதாம் தேதி இரவுகளில் மலைப்பாம்பு நடவடிக்கை கட்டவிழ்க்கபட்டது[1].

போர் பின்னணி[தொகு]

பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் மற்றும் அனைத்து கப்பற்படைத் தொகுதிகளும் கராச்சி நகரிலே அமைந்திருந்தது. கடல்சார்ந்த வணிகத்தின் முதன்மை மையமாகவும் கராச்சி விளங்கியதால், அதனை முற்றுகையிட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் நாசம் விளைவிக்கும்வழி அமையும். ஆகையால், பாகிஸ்தானின் மேலிடத்துக்கு கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பு முதன்மையாக இருந்தது மற்றும் ஏதேனும் வான்வழி அல்ல கடல்வழி தாக்குதலில் இருந்து பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. படைநடவடிக்கை திரிசூலம் இந்திய கப்பற்படைக்கு ஓர் மாபெரும் வெற்றியாக அமைந்தது, ஏனெனில் இந்திய கப்பற்படை பணிக்குழுவிற்கு[1] எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தெரிந்த பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு இது ஒருதிட்டமிட்ட மற்றும் முன்னதாகவே பயிற்சி எடுக்கப்பட்ட நடவடிக்கை என அறிந்தனர்[2]. இந்த படை நடவடிக்கையின் வெற்றியை அடுத்து பாகிஸ்தானிய கடலெல்லை மீது மலைப்பாம்பு நடவடிக்கை என்று மற்றொமொரு தாக்குதலை இந்தியா நடத்தியது[3].

மலைப்பாம்பு நடவடிக்கை[தொகு]

1971-ஆம் ஆண்டு டிசம்பர் 8 இரவில், ஏவுகணை படகு ஐஎன்எஸ் வினாஷ் மற்றும் இரு பல்நோக்கு ப்ரிகேட்ஸ் ஐஎன்எஸ் தல்வார்,ஐஎன்எஸ் த்ரிஷுல் [3], கராச்சியை நெருங்கி, நான்கு ஏவுகணைகளை இலக்கு தவறாமல் தாக்கின. கெயமாரி எண்ணெய் கிடங்கை முதல் ஏவுகணை தாக்கியது. மற்ற மூன்று ஏவுகணைகள் பனாமிய கலன் வளைகுடா நட்சத்திரம் மற்றும் பிஎன்எஸ் டாக்கா மற்றும் பிரிட்டனின் எஸ்எஸ் ஹர்மட்டன் கப்பல்களுக்கு பலத்த சேதம் விளைவித்தது[1]. மகரன் கடற்கரை அருகே ஒரு பாகிஸ்தானிய கப்பல் கைப்பற்றப்பட்டது[4].

கராச்சி மண்டலத்தின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் எரிந்து நாசமாயின.இதனால் பாகிஸ்தானின் பொருளாதரத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது[2]. முன்னூறு கோடி நட்டம், கிட்டத்தட்ட அனைத்து எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஆயுதங்கள் அழிப்பு, சேமிப்புகிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் நாசம் மற்றும் பிஏஎப் வாங்கிய அடி, இதனால் போரில் கராச்சியே மிகுந்த பாதிப்படைந்தது[2].

மலைப்பாம்பு நடவடிக்கை மேலும் ஒரு பிரம்மாண்ட வெற்றி. பாகிஸ்தானின் எண்ணெய் கிடங்கு எரிந்தது அறுபது மைல் அப்பாலும் தெரிந்தது. பாரசீக வளைகுடாவிலிருந்து பாகிஸ்தானிய துறைமுகத்துக்கு செல்லும் எண்ணெய் வழியை இந்தியா முழுமையாக தன் வசம் கொண்டு வந்தது[4]. பாகிஸ்தானின் ஒரே முதன்மை துறைமுகமான கராச்சிக்கு கப்பல் போக்குவரத்து நின்றது. பாகிஸ்தான் கடற்படையின் முக்கிய கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டன அல்லது அழிந்து போயிருந்தன. இந்திய ஏவுகணை படகுகள் நிறுத்திவைக்கப்பட்டதாக கருதப்பட்ட ஒக்ஹா துறைமுகத்தின் மீதி பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஆனால் இதனை முன்னறிந்த இந்திய கப்பல்கள் வேறெங்கோ நகர்ந்ததால் இந்த தாக்குதல் பயனற்று போனது.

மூலங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]