உள்ளடக்கத்துக்குச் செல்

சோ லா மோதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோ லா மோதல்

ஆசியாவின் இரு மிகப்பெரிய சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1967 ஆம் ஆண்டு சிறு போர் மூண்டது
நாள் 1 அக்டோபர் — 10 அக்டோபர், 1967
இடம் சோ லா, சிக்கிம்
இந்திய ராணுவம் வெற்றிகரமாக சீனப் படைகளை முறியடித்தது
பிரிவினர்
 இந்தியா  சீனா
தளபதிகள், தலைவர்கள்
சாகிர் ஹுசைன்
கே. பி. ஜோஷி
மா சே துங்
இழப்புகள்
88 பலி
163 படுகாயம்[1][2]
340 பலி
450 படுகாயம்[3]

சோ லா மோதல் (Cho La clash) எனப்படுவது, இந்திய ராணுவத்திற்கும் சீன மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையே 1967 ஆம் ஆண்டு மூண்ட சிறு போராகும். சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிக்கிம் மாநிலத்திற்குள் அக்டோபர் 1, 1967 அன்று ஊடுருவியது. இந்தியாவின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான சர்தார் சுவரன் சிங், இந்திய அரசு எல்லை நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகிறது என்று கூறினார். இச்சம்பவத்தின்போது இந்தியத் தரப்பில் 83 பேர் மரணமடைந்தனர்; 163 பேர் படுகாயமடைந்தனர். சீன தரப்பில் 300 பேர் மரணமடைந்தனர்; 450 பேர் நாதூ லாவிலும், 40 பேர் சோ லாவிலும் படுகாயமடைந்தனர்.[4] இச்சம்பவத்தின் முடிவில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் சிக்கிம் மாநிலத்தில் இருந்து பின்வாங்கியது.

இடம்[தொகு]

சோ லா சம்பவம், பின்னாளில் இந்தியாவின் மாநிலமாக இணைந்த சிக்கிம் பகுதியில் நடைபெற்றது. இச்சம்பவத்தின் போது சிக்கிம், இந்தியாவின் பாதுகாப்பில் தன்னாட்சி பெற்ற பகுதியாகத் திகழ்ந்தது. மலைப்பாங்கான இப்பகுதியில் உயரத்தில் இருந்து போரிடுவது சாதகமான ஒன்று. அவ்வகையில், சிக்கிம் மலைகளின் உயரம் இந்தியப் படைகளுக்கு உதவியது. உயர்ந்த மலைகளில் இருந்த இந்தியப் படையினரை எதிர்த்துப் போரிட சீன ராணுவத்திற்கு அதிகப் படைபலம் தேவைப்பட்டது.

பின்புலம்[தொகு]

பிரிட்டனின் வடகிழக்கு எல்லை நிறுவனத்தால் உருவாக்கப்ட்ட மக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஏற்க மறுத்தது. இறுதியில், சிக்கிமை இந்தியாவின் மாநிலமாக சீனா அங்கீகரித்தது. அதேபோல் இந்தியா, திபெத் தன்னாட்சிப் பகுதியை சீனாவின் ஆட்சிக்குட்பட்டதாக அங்கீகரித்தது.[5] இந்த பரஸ்பர ஒப்பந்தம், இந்திய-சீன உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட வழிவகுத்தது.[6]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rapprochement Across the Himalayas: Emerging India-China Relations Post Cold"[1] பக்கம். 40
  2. "India-China relations", by Bidanda M. Chengappa, பக்கம். 63
  3. "Rapprochement Across the Himalayas: Emerging India-China Relations Post Cold"[2] பக்கம். 40
  4. "Rapprochement Across the Himalayas: Emerging India-China Relations Post Cold"[3] பக்கம். 40
  5. BBC செய்தி: இந்தியா-சீனா இடையே திபெத் குறித்த உடன்பாடு
  6. பரோ, அமித் (2005-04-12). "ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துக்கான இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆதரவு". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2005-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050414013354/http://www.hindu.com/2005/04/12/stories/2005041210160100.htm. பார்த்த நாள்: 2009-03-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ_லா_மோதல்&oldid=3246528" இலிருந்து மீள்விக்கப்பட்டது