உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவப் பாதுகாப்பு புலனாய்வு முகமை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவப் பாதுகாப்பு முகமை
புலனாய்வு அமைப்பு மேலோட்டம்
அமைப்பு1 மார்ச்சு 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-03-01)
ஆட்சி எல்லை இந்தியா
தலைமையகம்அமைச்சரவை செயலகம், புது தில்லி
குறிக்கோள்தனக்கு முன் சேவை (Service Before Self)
பணியாட்கள்வகைப்படுத்தப்பட்டது.
ஆண்டு நிதிவகைப்படுத்தப்பட்டது.
அமைச்சர்
புலனாய்வு அமைப்பு தலைமை
  • லெப்டிண்ட் ஜெனரல் டி. எஸ். இராணா, தலைமை இயக்குநர்
மூல நிறுவனம்ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை

பாதுகாப்பு புலனாய்வு முகமை (Defence Intelligence Agency (DIA), இந்தியப் பாதுகாப்பு படைகள் இடையே இராணுவப் புலனாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் முகமை ஆகும். [1][2]

இம்முகமை மார்ச் 2002ல் நிறுவப்பட்டது. இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ்[2] ஒரு லெப்டிண்ட் ஜெனரல் தலைமையில் இயங்குகிறது.

முப்படைகளின் தனித்தனி புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளால் இம்முகமை 1 மார்ச் 2022 அன்று நிறுவப்பட்டது.

பாதுகாப்பு புலனாய்வு முகமை உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் ஆயுதப்படைகளின் இராணுவ புலனாய்வு பிரிவுகள் மற்றும் சேவைகளின் தனி உளவுப் பிரிவுகள் மட்டுமே இருந்தது. பின்னர் ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இந்திய உளவுத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளுடன் பாதுகாப்பு புலனாய்வு முகமை செயல்பட்டது.

வான்படை நுண்ணறிவு இயக்குநரகம், கடற்படை உளவுத்துறை இயக்குநரகம் மற்றும் இராணுவ உளவுத்துறை இயக்குனரங்கள் இந்த முகமையின் கீழ் செயல்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ministry of Defence, Govt. of India". National Informatics Centre. Archived from the original on 2009-07-13. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  2. 2.0 2.1 "Defence Intelligence Agency (DIA)". Global Security.org. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  3. "Defense Intelligence Agency to Start in February 2002". Federation of American Scientists. 2002-01-30. Archived from the original on 26 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.