உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா)

ஆள்கூறுகள்: 28°36′54″N 77°12′21″E / 28.61500°N 77.20583°E / 28.61500; 77.20583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுவண் தலைமைச் செயலகம்
அமைவிடம்புது தில்லி
புவியியல் ஆள்கூற்று28°36′54″N 77°12′21″E / 28.61500°N 77.20583°E / 28.61500; 77.20583
நியமன முறைநிர்வாகத் தேர்வு (தகுதிகள் வரையறுப்பு)
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
இருக்கைகள் எண்ணிக்கை32
வலைத்தளம்http://cabsec.nic.in/
அமைச்சரவை செயலாளர்
தற்போதையஅஜித் சேத்
பதவியில்சூன் 14, 2011
வடக்கு வளாகம் முக்கிய அரசு அலவலகங்களைக் கொண்டுள்ளது
புது தில்லியிலுள்ள தலைமைச் செயலக கட்டிடம். இடதுபுறத்தில் வடக்கு வளாகமும் வலதுபுறத்தில் தெற்கு வளாகமும் அமைந்துள்ளன. கிழக்குப் புறத்தில் இந்தியா கேட் வளைவைக் காணலாம்.
வடக்கு வளாகம்
தெற்கு வளாகம்

நடுவண் தலைமைச் செயலகம் இந்திய அரசு செயற்படுவதற்கான பொறுப்பு வகிக்கிறது.[1] இது புது தில்லியிலுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திலிருந்து இயங்குகிறது. இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பெரும்பான்மையான அமைச்சர்கள் செயல்படுகின்றனர். இரைசினாக் குன்றில் இராஜ்பத்தின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள இரு கட்டிடத் தொகுதியாக இது அமைந்துள்ளது. இச்செயலகம் அமைச்சரவை செயலாளர் தலைமையில் இயங்குகிறது. இந்திய அரசின் அமைச்சகங்கள் நடுவண் தலைமைச் செயலகததில் செயல்படுகிறது.

சுருக்கமாக[தொகு]

இந்திய அரசு (அலுவல் நடவடிக்கை) விதிகள் 1961 மற்றும் இந்திய அரசு (அலுவல் ஒதுக்கீடு) விதிகள் 1961 சட்டங்களின்படி நிர்வாகம் புரிய நடுவண் தலைமைச் செயலகம் பொறுப்பேற்கிறது. இச்செயலகம் அமைச்சரகங்கள்/துறைகளிடையே தடங்கலற்ற பரிமாற்றங்கள் நிகழவும் இந்த விதிகளின்படி செயலாற்றவும் வழி செய்கிறது. அமைச்சரகங்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைந்து, சரியான ஒருங்கிணைப்பை உறுதி செய்து இந்திய அரசு முடிவுகள் எடுக்க உதவுகிறது. இதற்குத் துணைபுரியவும் இணக்க முடிவுகள் எட்டவும் துறைச் செயலர்கள் அடங்கிய நிலைக்குழுக்கள் அல்லது இடைக்கால குழுக்களை அமைக்கிறது.

தலைமைச் செயலக கட்டிடத்தில் கீழ்வரும் அமைச்சரகங்கள் இடம் பெற்றுள்ளன:

தலைமைச் செயலக கட்டிடம் இரு கட்டிடங்களைக் கொண்ட தொகுதியாகும்: வடக்கு வளாகம் மற்றும் தெற்கு வளாகம். இவ்விரு கட்டிடங்களும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இருபுறங்களில் உள்ளன.

  • தெற்கு வளாகத்தில் பிரதமரின் அலுவலகம், பாதுகாப்புத் துறை அமைச்சரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரகங்கள் அமைந்துள்ளன.
  • வடக்கு வளாகத்தில் நிதித்துறை அமைச்சரகமும் உள்துறை அமைச்சரகமும் அமைந்துள்ளன.

பொதுவழக்கில் 'வடக்கு வளாகம்' நிதித்துறை அலுவலகங்களையும் 'தெற்கு வளாகம்' வெளியுறவுத் துறை அலுவலகங்களையும் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன.

அமைச்சரவை செயலாளர்[தொகு]

தலைமைச் செயலகம் பிரதமரின் நேரடிப் பொறுப்பில் உள்ளது. தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தலைவராக அமைச்சரவை செயலர் செயலாற்றுகிறார். இவரே அலுவல் முறையில் படைத்துறை சாரா அரசுப்பணியாளர் வாரியத் தலைவரும் ஆவார்.

மரபுப்படி தலைமைச் செயலராக மிகவும் மூத்த குடிசார் அரசுப் பணியாளரே நியமிக்கப்படுகிறார். இவர் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராக இருப்பார். இவரது பதவிக்காலம் பொதுவாக இரண்டிலிருந்து மூன்றாண்டுகள் இருக்கும். இந்திய அரசின் அலுவல்முறை அதிகார வரிசையில் பதினொன்றாவது நிலையில் உள்ளார்.

தலைமைச் செயலகம் மூன்று அங்கங்களை உடையது: குடிசார், படைத்துறை மற்றும் புலனாய்வு. தலைமைச் செயலரின் கீழே பல துறைகளில் செயலர்கள் பணி புரிகின்றனர். செயலர் (ஒருங்கிணைப்பு), தலைமைச் செயலக நிர்வாக அதிகாரி, செயலர் (செயற்றிறன் மேலாண்மை), செயலர் (பாதுகாப்பு), செயலர் (ஆய்வும் பகுப்பாய்வும் பிரிவு) (ரா) ஆகியோர் சிலராவர்; மக்கள் குறைதீர்ப்பு இயக்குநரகமும் தலைமைச்செயலகத்தின் பொறுப்பில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Cabinet Secretariat". இந்திய அரசு வலைத்தளம். பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.

வெளி இணைப்புகள்[தொகு]