உள்ளடக்கத்துக்குச் செல்

தீவிர மோசடி விசாரணை அலுவலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீவிர மோசடி விசாரணை அலுவலகம்
गंभीर कपट अन्वेषण कार्यालय
விசாரணை அலுவலகத்தின் முத்திரை
விசாரணை அலுவலகத்தின் முத்திரை
சுருக்கம்SFIO
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்2003
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyஇந்தியா
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
ஆட்சிக் குழுஇந்திய அரசு
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்புது தில்லி, இந்தியா
துறை நிருவாகி
  • கேசவ சந்திரா, இயக்குநர், 17 திசம்பர் 2022 வரை
அமைச்சுபெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
மண்டல அலுவலகங்கள்sபுது தில்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை
இணையத்தளம்
sfio.nic.in

தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (Serious Fraud Investigation Office -SFIO) என்பது இந்தியாவில் உள்ள ஒரு சட்டப்பூர்வ பெரு நிறுவனங்களின் நிதி மோசடிகளை விசாரணை செய்யும் அமைப்பாகும். இது பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

விளக்கம்

[தொகு]

தீவிர மோசடி விசாரணை அலுவலகம் 2 சூலை 2003 அன்று இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் அமைக்கப்பட்டது மற்றும் பழைய நிறுவனங்கள் சட்டம், 1956, பிரிவு 235 முதல் 247 வரை இருக்கும் சட்ட கட்டமைப்பிற்குள் விசாரணைகளை மேற்கொண்டது. பின்னர் நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 211இன் கீழ் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்திற்கு சட்டரீதியான தகுதி வழங்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய பெரு நிறுவன சட்ட சேவை, இந்திய வருவாய்ப் பணி மற்றும் பிற மத்திய சேவைகளின் அதிகாரிகளால் இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு நிதித் துறை களங்களில் நிபுணர்களைக் கொண்டுள்ளது. தீவிர மோசடி விசாரணை அலுவலகம் பெருநிறுவனங்களி நடைபெறும் நிதி மோசடிகள் பற்றிய பல-ஒழுங்கு விசாரணைகளை நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.[1]

இது நிதித் துறை, மூலதனச் சந்தை, கணக்கியல், தடயவியல் தணிக்கை, வரிவிதிப்பு, சட்டம், தகவல் தொழில்நுட்பம், நிறுவனச் சட்டம், சுங்கம் போன்றவற்றில் விசாரணை நிபுணர்களைக் கொண்ட ஒரு பல்துறை நிறுவனமாகும். வங்கிகள், பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் மற்றும் செபி, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் மற்றும் பெரு நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களிலிருந்து இந்த அலுவலகததின் விசாரணை அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.[2]நரேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைப்படி, 9 சனவரி 2003 அன்று இந்த விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டது. மேலும் பங்குச் சந்தை மோசடிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தோல்வியின் பின்னணியில் பொதுமக்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியது விளைவாக வாஜ்பாய் அரசாங்கம் இந்த விசாரணை அமைப்பை அமைக்க முடிவு செய்தது.[3]

அமைப்பின் கட்டமைப்பு

[தொகு]

இந்த முகமை ஒரு இயக்குநர் தலைமையில் புது தில்லியில் தலைமையகம் உள்ளது.[4] தலைமை இயக்குநருக்கு உதவியாக கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்று துணை இயக்குநர்கள் உள்ளனர்.[5] இதன் மண்டல அலுவலகங்கள் புது தில்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், சென்னை நகரங்களில் உள்ளது.[6][7] இதன் அதிகாரிகள் பெரும்பாலும் ஏஜென்சியின் தலைமையகம் இந்திய தலைநகர் புது தில்லியில் உள்ளது, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கள அலுவலகங்கள் உள்ளன. SFIO அதன் பெரும்பாலான அதிகாரிகளை இந்திய நிறுவனச் சட்ட அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், இந்தியக் காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி, அரசு கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் வங்கிகள் மற்றும் பிற மத்திய சேவைகளில் இருந்து ஈர்க்கிறது.

அதிகாரங்கள்

[தொகு]

பெரு நிறுவனங்களுக்கிடையேயான நடைபெறும் தீவிர மோடிசகளை மட்டும் விசாரிக்கிறது. பொதுநலனுக்கு இடையூறு ஏற்படுத்தும் பண முறைகேடுகளை விசாரணை செய்கிறது.

செயல்முறைகள்

[தொகு]

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் உத்தரவு பெற்ற பின்னரே இந்த அமைப்பு பெரு நிறுவனங்களில் நடைபெறும் தீவிர மோசடிகளை விசாரணை துவக்கிறது. இந்திய நிறுவனங்கள் சட்டம், 2013ன் கீழ் ஒரு வழக்கு விசாரணைக்காக இந்த அமைப்பிற்கு மத்திய அரசால் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டவுடன், மத்திய அரசின் அல்லது எந்த மாநில அரசாங்கத்தின் வேறு எந்த விசாரணை நிறுவனமும் அத்தகைய வழக்குகளில் விசாரணையைத் தொடங்க முடியாது. அத்தகைய விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், அதை மேலும் தொடர முடியாது, மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அத்தகைய குற்றங்கள் தொடர்பான தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை தீவிர மோசடி விசாரணை அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்.

கைது செய்ய முடியுமா?

[தொகு]

நிறுவனச் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய தீவிர மோசடி விசாரணை அலுவலகத்திற்கு அதிகாரம் உள்ளது. கைது தொடர்பான அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பான அதிகாரம் இதன் இயக்குனருக்கு மட்டுமே உண்டு. விசாரணையில் அரசு அல்லது வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவர் பிடிபட்டால், மத்திய அரசின் முன் அனுமதி இந்த அமைப்பிற்கு வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 14 March 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Chit funds: SC notices to Centre, SEBI, ED". 20 November 2013.
  3. "Serious Fraud Investigation Office".
  4. Organization Structure
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Organisation Behaviour". sfio.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.
  7. "SFIO Home Page". sfio.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.