தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம்
Agency மேலோட்டம்
அமைப்பு2004; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2004)
தலைமையகம்புது தில்லி, இந்தியா
குறிக்கோள்எல்லாத் திசைகளிலிருந்தும் உன்னத எண்ணங்கள் என்னிடம் வரட்டும்
Let noble thoughts come to me from all directions
பணியாட்கள்1,081
ஆண்டு நிதிவகைப்படுத்தப்பட்டது.
அமைச்சர்
Agency தலைமை
  • அணில் தஸ்மனா[1]
மூல Agencyஅமைச்சரவை செயலாளர்
வலைத்தளம்ntro.gov.in

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (National Technical Research Organisation (NTRO), இந்தியாவின் தொழில்நுட்ப நுண்ணறிவுஅறிவு முகமையாகும்.[2]இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.[3] இது 2004-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[4] இந்த அமைப்பில் 1081 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகளான இந்திய உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு போன்று "நடத்தை விதிமுறைகள்" கொண்டுள்ளது.[5][6]

நிறுவனத்தின் பணிகள்[தொகு]

இம்முகமை அனைத்து சிறப்புத் தொழில்நுட்ப நுண்ணறிவு மற்றும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும், பொறியாளர்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக தொலையுணர்வு, சிக்னல் நுண்ணறிவு, குறியாக்கவியல், புவிசார் தரவுகள், சைபர் பாதுகாப்பு, தரவுகள் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்தல், கணினி மென்பொருள், வன்பொருள் மேம்பாட்டு யுக்திகளை கண்காணித்தலில் முழுக்கவனம் செலுத்துகிறது.[7]

செயற்கைக்கோள்கள், கடல் நீரடி மிதவைகள், ஆளிள்ளா வானூர்திகள், விஎஸ்ஏடி-டெர்மினல் லொக்கேட்டர்கள் மற்றும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள் நோடல் டாப் பாயிண்டுகள் உள்ளிட்ட சென்சார்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட நுண்ணறிவு மூலம் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பிற முக்கிய நிறுவல்களுக்கான அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கவும், இடைமறித்து மதிப்பிடவும் செய்யும் தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் மற்றும் தேசிய குறியாக்கவியல் ஆயுவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்நிறுவனத்த்ன் கீழ் செயல்படுகிறது.[8] இந்நிறுவனம் தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு செயற்கோள்களையும் ஏவுகிறது.[9] இந்நிறுவனம் இந்திய வான்படையுடன் இணைந்து தொலையுணர்வு ரேடார்களை இயக்குகிறது.[10] மேலும் இந்நிறுவனம் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஐஎன்எஸ் துருவ் உளவுக் கப்பலை வடிவமைப்பதற்கும், செயல்படுவதற்கும் உதவுகிறது.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anil Dhasmana is new chief of NTRO, spy agency that keeps an eye from the sky". Hindustan Times. 18 September 2020. https://www.hindustantimes.com/india-news/anil-dhasmana-is-new-chief-of-ntro-spy-agency-that-keeps-an-eye-from-the-sky/story-rTvVl6VH7NG3pukNyXUExH.html. 
  2. RS Bedi VrC (23 April 2015). "NTRO: India's Technical Intelligence Agency". Indian Defence Review. http://www.indiandefencereview.com/spotlights/ntro-indias-technical-intelligence-agency. 
  3. Special Correspondent (6 May 2007). "Technical research agency planned in State". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070508182210/http://www.hindu.com/2007/05/06/stories/2007050609000400.htm. 
  4. Sandeep Unnithan (7 September 2007). "Spy versus spy". India Today. http://indiatoday.digitaltoday.in/content_mail.php?option=com_content&name=print&id=1067. 
  5. Vijaita Singh (18 May 2017). "NTRO now under Intelligence Act". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/ntro-now-under-intelligence-act/article18476787.ece. 
  6. Rahul Tripathy (18 May 2017). "National Technical Research Organisation to have same powers as IB, R&AW". The IndianExpress. https://indianexpress.com/article/india/national-technical-research-organisation-to-have-same-powers-as-ib-raw-4661388/. 
  7. "National tech research body to be housed in Hyderabad". The Hindu Business Line. 8 May 2007. http://www.thehindubusinessline.com/2007/05/08/stories/2007050802822100.htm. 
  8. Syed Amin (5 May 2007). "Top tech body to come up in Hyderabad". Rediff.com. http://im.rediff.com/news/2007/may/05tech.htm. 
  9. "'ISRO successfully launches 'spy satellite' RISAT-1'". ndtv. 26 April 2012 இம் மூலத்தில் இருந்து 10 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510142554/http://www.ndtv.com/article/india/isro-successfully-launches-spy-satellite-risat-1-202464?pfrom=home-otherstorieso. 
  10. "MAJOR ACHIEVEMENTS OF MINISTRY OF DEFENCE FROM MAY 2014 TO PRESENT" (PDF).
  11. Bedi, Rahul (27 July 2018). "India's ocean surveillance ship starts harbour trials". Jane's Information Group. http://www.janes.com/article/82048/india-s-ocean-surveillance-ship-starts-harbour-trials?from_rss=1. 
  12. Manu Pubby (19 July 2018). "India to get own nuclear missile tracking ship in December". The EconomicTimes (India). https://economictimes.indiatimes.com/news/defence/india-to-get-own-nuclear-missile-tracking-ship-in-december/articleshow/65047417.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]