உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய பாதுகாப்பு மன்றம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசியப் பாதுகாப்பு மன்றம்
राष्ट्रीय सुरक्षा परिषद्
Rāṣṭrīya Surakṣā Pariṣad
வார்ப்புரு:IPA-hi
துறை மேலோட்டம்
அமைப்பு19 நவம்பர் 1998; 26 ஆண்டுகள் முன்னர் (1998-11-19)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்தேசியப் பாதுகாப்புக் குழு செயலகம், சர்தார் படேல் பவன், சன்சத் வீதி, புது தில்லி - 110 001[1]
அமைப்பு தலைமைகள்
கீழ் அமைப்பு
  • தேசியப் பாதுகாப்பு சட்டப் பிரிவு

தேசியப் பாதுகாப்பு மன்றம் (National Security Council) இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் உத்திப்பூர்வமான பாதுகாப்பு குறித்த விடயங்களை நிர்வகிக்கும் உச்ச நிறுவனம் ஆகும். முதன் முதலில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் 19 நவம்பர் 1998 அன்று நிறுவப்பட்டது. இது இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின்கீழ் செயல்படுகிறது. இது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படுகிறது. இதன் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இதன் தற்போதைய தலைவர் அஜித் தோவல் ஆவார்.

கட்டமைப்பு

[தொகு]

தேசியப் பாதுகாப்பு மன்றம் மூன்று அடுக்குகள் கொண்டது. அவைகள் மூலோபாயக் கொள்கை வகுக்கும் வகுக்கும் குழு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழு மற்றும் செயலகம் ஆகும்.[4][5]

மூலோபாயக் கொள்கைக் குழு

[தொகு]

தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையில் இக்குழுவில் கீழ்கண்டவர்கள் அங்கம் வகிப்பர்:

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு

[தொகு]

2025 பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு 1 மே 2025 நடைபெற்ற அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின்படி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு திருத்தி அமைக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.[6][7] [8][9]

இராணுவ அதிகாரிகள்

[தொகு]
  • ஏர் மார்ஷல் பி. எம். சின்கா (மேற்கு மண்டல வான் படை முன்னாள் கமாண்டர்)
  • லெப். ஜெனரல் ஏ. கே. சிங் (தென் மண்டல தரைப்படை முன்னாள் தலைவர்
  • ரியர் அட்மிரல் மோண்டி கண்ணா (இந்தியக் கடற்படை)

காவல்துறை அதிகாரிகள்

[தொகு]
  • இராஜீவ் ரஞ்சன் வர்மா (இகாப) - (பணி ஓய்வு)
  • மன்மோகன் சிங் (இகாப) -(பணி ஓய்வு)

வெளிநாட்டு தூதுவர்கள்

[தொகு]
  • பி. வெங்கடேஷ் வர்மா (இவெப - (பணி ஓய்வு)

கூட்டுப் புலனாய்வுக் குழு

[தொகு]

இந்திய அரசின் கூட்டுப் புலனாய்வுக் குழுவானது இந்திய உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இராணுவப் புலனாய்வு இயக்குநரகம், இந்தியக் கடற்படை புலனாய்வு இயக்குநரகம் மற்றும் இந்திய வான்படை புலனாய்வு இயக்குநரகம் ஆகியவைகளிடமிருந்து வரும் முக்கியமான உளவு மற்றும் புலனாய்வுத் தரவுகளை பரிசீலித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தில் சேர்க்கிறது. கூட்டுப் புலனாய்வுக் குழுவின் செயலகம் நடுவண் தலைமைச் செயலகத்தில் செயல்படுகிறது.

உசாத்துனைகள்

[தொகு]
  1. "Contact Us". National Security Advisory Board. Archived from the original on 27 February 2017.
  2. "India's revamped security set-up gets IPS, intelligence influx". 2018-01-05.
  3. "Former Maharashtra DGP Dattatray D Padsalgikar appointed as deputy NSA".
  4. "About NSAB". National Security Advisory Board. Archived from the original on 16 April 2017. Retrieved 15 January 2017.
  5. "National Security Council". ALLGOV INDIA.
  6. After Pahalgam terror attack, govt revamps National Security Advisory Board; Ex-RAW chief Alok Joshi to lead
  7. Former RAW chief to head revamped national security advisory board - The Times of India
  8. Government revamps National Security Advisory Board, appoints ex-RAW chief Alok Joshi as chairman - The Hindu
  9. Centre revamps National Security Advisory Board days after Pahalgam terror attack