நிதி அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதி அமைச்சகம் (இந்தியா)
वित्त मंत्रालय
Emblem of India.svg
North Block, Central Secretariat.jpg
வடக்கு பிரிவு, மத்திய செயலகம்
துறை மேலோட்டம்
அமைப்பு29 அக்டோபர் 1946
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்வடக்குப் பிரிவு
ரய்சினா குன்று, புது தில்லி
அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
கீழ் அமைப்புகள்
  • பொருளாதார விவகாரங்கள் துறை
  • செலவினத் துறை
  • வருவாய்த் துறை
  • நிதிச் சேவைகள் துறை
  • அரசு முதலீடுகளை விலக்கும் துறை
முக்கிய ஆவணங்கள்
வலைத்தளம்finmin.nic.in

நிதி அமைச்சகம் (Ministry of Finance) என்பது நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய அமைச்சகங்களுள் ஒன்று. இதன் தலைவர் நிதியமைச்சர் எனப்படுவார். இந்த அமைச்சகத்தின் பணியானது, வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாகும். இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. மேலும் நிதி சார்ந்த புலனாய்வு, விசாரணை, சட்ட அமலாக்கம் செய்வதற்கு வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம், மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் செயல்படுகிறது. மேலும் வரிகள் தொடர்பான பிணக்குகளை தீர்வுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் செயல்படுகிறது.

நிதியமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் குடியியல் பணிகளின் உட்பிரிவுகளான (இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service), இந்திய பொருளாதாரப் பணி (Indian Economic Service , இந்திய செலவு கணக்குகள் சேவை (Indian Cost Accounts Service) மற்றும் இந்தியன் சிவில் கணக்குகள் பணி (Indian Civil Accounts Service) உட்பட) வருகின்றது.

வரலாறு[தொகு]

[1] விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் ஆவார். இவர் 1947 நவம்பர் 26 அன்று விடுதலை இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.

நிர்வாக அமைப்பு[தொகு]

நிதி அமைச்சகம் ஐந்து பிரிவுகளை கொண்டது.

  • வருவாய்த் துறை
  • பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
  • செலவு துறை (Department of Expenditure)
  • நிதி சேவைகள் துறை (Department of Financial Services)
  • பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "முதலாம் நிதி அமைச்சர்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.