நிதி ஆயோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிதி ஆயோக்
மேலோட்டம்
அமைப்பு 1 சனவரி 2015; 4 ஆண்டுகள் முன்னர் (2015-01-01)
முன்னிருந்த திட்டக் குழு
ஆட்சி எல்லை இந்திய அரசு
தலைமையகம் புது டெல்லி
தலைமைs நரேந்திர மோடி, தலைவர்
ராஜீவ்குமார், துணை தலைவர்
பிபேக் தீப்ராய், உறுப்பினர்
விகே. சரசுவத், உறுப்பினர்
ரமேசு சந்த், உறுப்பினர்
வினோத் பவுல், உறுப்பினர்
அமிதாப் கந்த், சி இ ஒ
தினேஷ் ஆரோரா, இயக்குனர்
மூல இந்திய அரசு
இணையத்தளம்
www.niti.gov.in

நிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி (NITI - National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இதன் தற்போதைய துணைத் தலைவராக ராஜிவ் குமார் உள்ளார்.[1]

வரலாறு[தொகு]

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார். இதன்படி 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.[2]

அமைப்பு[தொகு]

இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.[2]

செயல்பாடுகள்[தொகு]

  • தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamani.com/latest_news/2015/01/05/திட்டக்குழுவிற்கு-மாற்றான-/article2604871.ece
  2. 2.0 2.1 http://economictimes.indiatimes.com/news/economy/policy/niti-aayog-being-decked-up-to-welcome-top-functionaries/articleshow/45807941.cms

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதி_ஆயோக்&oldid=2789262" இருந்து மீள்விக்கப்பட்டது