லிபரான் ஆணையம்
Appearance
அயோத்தி பிரச்சினை |
---|
Organizations |
லிபரான் ஆணையம்(லிபரான் அயோத்தி விசாரணை ஆணையம்) , பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமாகும்.பாபர் மசூதி இடிக்கபட்ட 10ஆவது நாளில்( 1992 டிசம்பர் 16ஆம் தேதி ) ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு , 2009 இல் தனது அறிக்கையை வழங்கினார்.[1]
அறிக்கையின் சாராம்சம்
[தொகு]- பாபர் மசூதி இடிப்பில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளின் தலைவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.[2][3]
- உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதி மொழிக்கு மாறாக மசூதியை இடிக்க அன்றைக்கு இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு அனுமதித்தது என்று அந்தக்குழு குற்றம்சாட்டியது.
- வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே, அசோக் சிங்கால், கோவிந்தாச்சார்யா, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், பிரவீன் தொகாடியா, சுவாமி சின்மயானந்தா, உமா பாரதி, விஷ்ணு கரி டால்மியா ஆகிய ஆர்எஸ்எஸ் பரிவார தலைவர்கள் மட்டுமின்றி, 11 அதிகாரிகளும் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ayodhya attack report submitted". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8125927.stm. பார்த்த நாள்: 30 June 2008.
- ↑ Agarwal, Vibhuti (24 November 2009). "Indian Parliament in Uproar Over Babri Masjid Report". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB125906324450462205?mod=googlenews_wsj. பார்த்த நாள்: 24 November 2009.
- ↑ "17 years on, Commission says Babri demolition was planned". தி எகனாமிக் டைம்ஸ். 24 November 2009 இம் மூலத்தில் இருந்து 27 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091127054602/http://economictimes.indiatimes.com/news/politics/nation/17-years-on-Commission-says-Babri-demolition-was-planned/articleshow/5264974.cms. பார்த்த நாள்: 24 November 2009.
வெளியிணைப்புகள்
[தொகு]- Report Of The Liberhan Ayodhya Commission of Inquiry – Full Text in PDF format (126 MB)
- Report of the Liberhan Ayodhya Commission of Inquiry – Full Text in PDF format (Can be downloaded as a single 80MB file or as 5 smaller files), The Hindu (November 24 2009)
- முழு அறிக்கை – TCN News
- அறிக்கையை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- இந்திய உள்துறை அமைச்சக வலைத்தளத்தில் - பகுதிகளாக அறிக்கை