தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) 2005 திசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பாகும். இது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பானது, 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் செயல்படத் துவங்கியது.

குறிக்கோள்[தொகு]

ஐக்கிய நாட்டு சபையின் குழந்தைகள் உரிமைகள் மாநாடு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள குழந்தைகளின் உரிமைகள் சட்டங்கள், கொள்கைகள், ஆட்சியமைப்புகள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுதலை உறுதிசெய்தல் இதன் குறிக்கோளாகும்[1]. 18 வயது வரையுள்ள அனைவரையும் குழந்தைகளாக இந்த ஆணையம் வரையறுக்கிறது. சுடுதிநரைய்ன்காக்கர் இதன் தற்போதைய தலைவராவார்.[2].

பணிகள்[தொகு]

பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க தனி குழுக்கள் அமைக்கப்பட வலியுறுத்துகிறது. இக்குழு குழந்தைகளுக்குத் தரப்படும் உடல் மற்றும் மன அளவிலான துன்புறுத்தல்களை விசாரித்து, 48 மணி நேரத்திற்குள் அவை பற்றி உள்ளூர் அல்லது மாவட்ட சட்ட அமைப்புகளில் புகார் செய்ய நடவடிக்கை எடுக்கிறது.[3].

தெரியவந்தவை[தொகு]

பாதிக்கப்பட்ட 6632 குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில்,ஆசிரியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக அனைவரும் தெரிவித்தனர். 75 விழுக்காட்டினர் தாங்கள் அடிக்கப்பட்டதாகவும், 69 விழுக்காட்டினர் கன்னத்தில் அறையப்பட்டதாகவும், 0.4 விழுக்காட்டினர் மின்னதிர்ச்சி தரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய பரிந்துரைகள்[தொகு]

ஆசிரியர்களுக்கு அவர்களது கற்பித்தல் உத்திகளை மேம்படுத்த பயிற்சிகள் தரப்படவேண்டும். குழந்தைகளின் திறமைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையாதல், தேர்வில் முறைகேடு, வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். மாநில அளவிலும் இந்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]