உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women(NCW), சனவரி 1992இல் உருவான இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும்.[1]மகளிர் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளை உருவாக்கி இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இவ்வாணையத்தின் தற்போதைய தலைவர் விஜயா கிஷோர் ரஹத்கர் (2024)ஆவார்.

பணிகள்

[தொகு]

அரசியல், சமயம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சனை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் போன்றவற்றில் மகளிரை காத்திட தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.[2]

மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மகளிர் (Rashtra Mahila) எனும் மாதாந்திர செய்தி இதழை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடுகிறது.[3]

மகளிர் ஆணைய தலைவர்

[தொகு]


எண். பெயர் படம் முதல் வரை
1 ஜெயந்தி பட்நாயக் 3 பெப்ரவரி 1992 30 சனவரி 1995
2 வி. மோகினி கிரி 21 சூலை 1995 20 சூலை 1998
3 விபாகா பார்த்தசாரதி

18 சனவரி 1999

17 சனவரி 2002
4 பூர்ணிமா அத்வானி 25 சனவரி 2002 24 சனவரி 2005
5 கிரிஜா வியாஸ் 16 பெப்ரவரி 2005 15 பெப்ரவரி 2008
6 கிரிஜா வியாஸ் 9 ஏப்ரல் 2008 8 ஏப்ரல் 2011
7 மம்தா சர்மா[4] 2 ஆகத்து 2011 1 ஆகத்து 2014
8 லலிதா குமாரமங்கலம் 29 செப்டம்பர் 2014 28 செப்டம்பர் 2017
9 ரேகா சர்மா 7 ஆகத்து 2018[5] 6 ஆகத்து 2021
10 ரேகா சர்மா 7 ஆகத்து 2021[6]

மாநில மகளிர் ஆணையம்

[தொகு]
வ. எண் மாநிலம் மகளிர் ஆணையம்
1 ஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம்
2 அருணாச்சலப் பிரதேசம் அருணாச்சலப்பிரதேச மாநில மகளிர் ஆணையம்
3 அசாம் அசாம் மாநில மகளிர் ஆணையம்
4 பீகார் பீகார் மாநில மகளிர் ஆணையம்
5 சத்தீசுகர் சத்தீசுகர் மாநில மகளிர் ஆணையம்
6 கோவா கோவா மாநில மகளிர் ஆணையம்
7 குசராத்து குசராத்து மாநில மகளிர் ஆணையம்
8 அரியானா அரியானா மாநில மகளிர் ஆணையம்
9 இமாச்சலப் பிரதேசம் இமாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்
10 சம்மு காசுமீர் சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம்
11 சார்க்கண்டு சார்க்கண்டு மாநில மகளிர் ஆணையம்
12 கருநாடகம் கருநாடக மாநில மகளிர் ஆணையம்
13 கேரளம் கேரள மகளிர் ஆணையம்
14 மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்
15 மகராட்டிரம் மகாராட்டிர மாநில மகளிர் ஆணையம்
16 மணிப்பூர் மணிப்பூர் மாநில மகளிர் ஆணையம்
17 மேகால மேகாலய மாநில மகளிர் ஆணையம்
18 மிசோரம் மிசோரம் மாநில மகளிர் ஆணையம்
19 நாகாலாந்து நாகாலாந்து மாநில மகளிர் ஆணையம்
20 ஒடிசா ஒடிசா மாநில மகளிர் ஆணையம்
21 பஞ்சாப் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம்
22 இராஜஸ்தான் இராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையம்
22 சிக்கிம் சிக்கிம் மாநில மகளிர் ஆணையம்
23 தமிழ்நாடு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
24 தெலங்காணா தெலங்காணா மாநில மகளிர் ஆணையம்
25 திரிபுரா திரிபுரா மாநில மகளிர் ஆணையம்
26 உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேச மாநில மகளிர் ஆணையம்
27 உத்தராகண்டம் உத்தராகண்டம் மாநில மகளிர் ஆணையம்
28 மேற்கு வங்கம் மேற்கு வங்க மகளிர் ஆணையம்
29 தில்லி தில்லி மகளிர் ஆணையம்
30 புதுச்சேரி புதுச்சேரி மகளிர் ஆணையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NCW :: About NCW". ncw.nic.in. National Commission for Women. Archived from the original on 16 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  2. http://www.indiatogether.org/2006/may/wom-ncw.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
  4. "Mamta Sharma is NCW chief". The Hindu (New Delhi). 3 August 2011. http://www.thehindu.com/news/national/mamta-sharma-is-ncw-chief/article2316551.ece. 
  5. "Rekha Sharma Is New National Commission for Women Chairperson". NDTV.com. https://www.ndtv.com/india-news/rekha-sharma-is-new-national-commission-for-women-chairperson-1897965. 
  6. "Rekha Sharma Is New National Commission for Women Chairperson". NDTV.com. https://www.ndtv.com/india-news/rekha-sharma-is-new-national-commission-for-women-chairperson-1897965. 

வெளி இணைப்புகள்

[தொகு]