கேரள மகளிர் ஆணையம்

ஆள்கூறுகள்: 8°30′44″N 76°56′51″E / 8.512233°N 76.947432°E / 8.512233; 76.947432
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள மகளிர் ஆணையம்
Kerala Women's Commission
കേരള വനിതാ കമ്മീഷന്‍
Commission மேலோட்டம்
அமைப்பு14 மார்ச்சு 1996; 28 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
ஆட்சி எல்லைகேரளம்
தலைமையகம்பட்டோம், திருவனந்தபுரம்
8°30′44″N 76°56′51″E / 8.512233°N 76.947432°E / 8.512233; 76.947432
Commission தலைமைகள்
  • எம்.சி. யோசபின், (தலைவர்)
  • வழக்கறிஞர் தார எம்.எசு., வழக்கறிஞர் சிபி சிவாஜி, இ.எம். ராதா, சாகிதா கமல், (உறுப்பினர்கள்)
  • உஷா ராணி பி, (உறுப்பினர் செயலர்)
  • வி யு குரியக்கோசு, (இயக்குநர்)
வலைத்தளம்keralawomenscommission.gov.in

கேரள மகளிர் ஆணையம் (Kerala Women's Commission) இந்தியாவின் கேரள மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. [1] கேரள 1990 ஆம் ஆண்டு மகளிர் ஆணையச் சட்டம் 5 ஆவது பிரிவின் கீழ் ஒரு சட்டரீதியான அமைப்பாக இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற இந்த மசோதா ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கேரள மகளிர் ஆணையச் சட்டம் 15-9-1995 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது. பெண்களைப் பாதிக்கும் நியாயமற்ற நடைமுறைகள் குறித்தும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான சம்பவங்களையும் ஆணையம் விசாரிக்கும் என்று உறுதியளிக்கிறது. தேவைப்பட்டால் பின்னர் ஆணையம் அரசாங்கத்திற்கு பரிந்துரையும் செய்யும். மாநில பொதுச் சேவை மற்றும் மாநில பொது நிறுவனங்களில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை பெறுவதற்கும் மகளிர் ஆணையம் உறுதி செய்கிறது. [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala Women's Commission". keralawomenscommission.gov.in.
  2. "The Kerala Women's Commission Act 1990" (PDF). The Kerala Women's Commission. Government of Kerala. Archived from the original (PDF) on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_மகளிர்_ஆணையம்&oldid=3551424" இலிருந்து மீள்விக்கப்பட்டது