இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு
Unique Identification Authority of India | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | பிப்ரவரி 2009 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | புது தில்லி |
ஆண்டு நிதி | 3000 கோடிகள் (2010) |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | uidai.gov.in |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), என்பது இந்திய நடுவண் அரசின் ஆணையமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக பிப்ரவரி 2009இல் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு நுண்ணறி அட்டை எதுவும் வழங்காது. இவ்வமைப்பின் மூலம் சேகரிக்கப்படும் உயிரியளவுகள் முதலியத் தகவல்கள் இவ்வாணையத்திற்கே சொந்தமாகும். இத்தகவல்களைத் தரவுத்தளத்தில் சேகரித்து அதனைப் பராமரிக்கும் பொறுப்பும் இவ்வாணையத்தினுடையது ஆகும்.
இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்களின் உயிரியளவுகளை பதிவு செய்து கொண்டு, பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள எண் கொண்ட அட்டை ஒன்று வழங்கப்படும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பின் அதிகாரப்பூர்வ தளம் பரணிடப்பட்டது 2011-12-16 at the வந்தவழி இயந்திரம்
- ஆதார் அட்டை தொடர்பான தமிழ் இணையதளம் http://uidai.gov.in/ta/
- ஆதார் அட்டை தொடர்பான விவரங்களை அறிய http://resident.uidai.net.in/check-aadhaar-status பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம்
- ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றிட http://resident.uidai.net.in/update-data பரணிடப்பட்டது 2014-03-27 at the வந்தவழி இயந்திரம்
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம்: மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர் பரணிடப்பட்டது 2015-03-15 at the வந்தவழி இயந்திரம்
- விடுபட்டோருக்கு சிறப்பு ஆதார் முகாம்; பொதுமக்கள் வலியுறுத்தல்