உள்ளடக்கத்துக்குச் செல்

தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (National Commission for Backward Classes) 1993 ஆம் ஆண்டில் ஆகத்து 14 ஆம் நாளில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993 விதிகளின் படி உருவாக்கப் பட்டது.

வரலாறு

[தொகு]

பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைமையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் சட்டப் பிரிவு 340 இல் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேனாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978 இல் பி.பி.மண்டல் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் எல்லா மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி பல வேறு தரப்பினரையும் மாநில அரசுகளையும் விசாரித்து ஒரு அறிக்கையைத் திசம்பர் 31 1980 இல் தாக்கல் செய்தது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த அவ்வறிக்கையை நாடு முழுவதும் நடந்த பெரிய போராட்டங்களுக்குப் பின்னர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் 1989 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வி.பி.சிங் 1990 இல் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஒதுக்கவேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தார். இவ்வாணையை எதிர்த்து இந்திரா சகானி என்பவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்பொழுது தேசிய அளவில் ஒரு ஆணையமும் அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் ஆணையங்களும் அமைக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது. இதற்குப் பிறகு உருவாக்கப்பட்டதுதான் தேசியப் பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் ஆகும்.

பணிகள்

[தொகு]

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய வகுப்பினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும் பிழையாகச் சேர்க்கப் பட்டதாகப் புகார்கள் வந்தால் விசாரித்து அவ்வகுப்பினரை நீக்குவதும் தாம் இந்த ஆணையத்தின் பணிகள். இது வரை 2418 சாதியினரை பட்டியலில் சேர்த்துள்ளது

ஆணையத்தின் உறுப்பினர்கள்

[தொகு]
  • தலைவர்—நீதிபதி வீ. ஈசுவரையா
  • செயலாளர்—ஏ கே மங்கோத்ரா
  • உறுப்பினர் --ச. கு. கார்வேந்தன்
  • உறுப்பினர்—ஏ. கே. சைனி
  • உறுப்பினர்—சகீல்-உஸ்-சமன்-அன்சாரி

மேற்கோள்

[தொகு]

http://www.ncbc.nic.in/Home.aspx?ReturnUrl=%2f