இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
சுருக்கம் | டிராய்/TRAI |
---|---|
உருவாக்கம் | 1997 |
சட்ட நிலை | தன்னாட்சி நிறுவனம் [1] |
நோக்கம் | தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தல் |
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
சேவை பகுதி | இந்தியா |
முக்கிய நபர்கள் | தலைவர் 4 உறுப்பினர்கள் செயலாளர் |
வலைத்தளம் | www |
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) (Telecom Regulatory Authority of India (TRAI), இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.[2]
வரலாறு
[தொகு]இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997இன் படி, இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளையும், கட்டணங்களையும் ஒழுங்குபடுத்த, பிப்ரவரி 20, 1997ஆம் ஆண்டில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது..
அமைப்பு
[தொகு]தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் ஒரு தலைவரும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும், இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் கொண்டுள்ளது. ஆணைய முடிவுகளைச் செயல்படுத்த ஒரு முழு நேர செயலர் தலைமையில் செயலகம் செயல்படுகிறது.
செயலகம்
[தொகு]டிராய் அமைப்பின் அன்றாட நிர்வாகம் ஒரு செயலாளரின் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது. சிக்கலான நேரங்களின் தகுந்த ஆலோசகர்களின் யோசனைப்படி, செயலர் செயல்படுவார். மேலும் ஆணையக் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை (அஜண்டா-Agenda) ஆணையத் தலைவரைக் கலந்து தயாரிப்பார். ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவார். .[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Telecom Regulatory Authority of India Act, 1997
- ↑ "TRAI website". பார்க்கப்பட்ட நாள் 2008-08-19.
- ↑ "TRAI Manual" (PDF).