இந்தியத் தேர்தல் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்1951(Representation of People Act, 1951) ஆகும்.

தேர்தல் ஆணையர்கள்[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பர். அவருக்கு உதவிட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இந்தியத் தலைமை ஆணையர் மற்றும் பிற இரண்டு ஆணையர்களையும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் 65 வயது நிரம்பும் வரை ஆகும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்[1][தொகு]

வரிசை எண் தேர்தல் ஆணையர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899) மார்ச் 21, 1950 டிசம்பர் 19, 1958
2 கே.வி.கே. சுந்தரம் டிசம்பர் 20, 1958 செப்டம்பர் 30, 1967
3 எஸ். பி. சென் வர்மா அக்டோபர் 1, 1967 செப்டம்பர் 30, 1972
4 நாகேந்திர சிங் அக்டோபர் 1, 1972 பெப்ரவரி 6, 1973
5 தி. சுவாமிநாதன் பெப்ரவரி 7, 1973 ஜூன் 17, 1977
6 எஸ். எல். ஷக்தர் ஜூன் 18, 1977 ஜூன் 17, 1982
7 ஆர். கே. திரிவேதி ஜூன் 18, 1982 டிசம்பர் 31, 1985
8 ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி ஜனவரி 1, 1986 நவம்பர் 25, 1990
9 வி. எஸ். ரமாதேவி நவம்பர் 26, 1990 டிசம்பர் 11, 1990
10 டி. என். சேஷன் டிசம்பர் 12, 1990 டிசம்பர் 11, 1996
11 எம். எஸ். கில் டிசம்பர் 12, 1996 ஜூன் 13, 2001
12 ஜே. மை. லிங்டோ ஜூன் 14, 2001 பெப்ரவரி 7, 2004
13 த. சு. கிருஷ்ணமூர்த்தி பெப்ரவரி 8, 2004 மே 15, 2005
14 பி. டாண்டன் மே 16, 2005 ஜூன் 29, 2006
15 என். கோபாலசுவாமி ஜூன் 29, 2006 ஏப்ரல் 20, 2009
16 நவீன் சாவ்லா[2][3] ஏப்ரல் 20, 2009 ஜூலை 29, 2010
17 ச. யா. குரேசி ஜூலை 30, 2010 ஜூன் 6, 2012
18 வீ. சு. சம்பத் ஜூன் 11, 2012 ஜனவரி 15, 2015
19 அரிசங்கர் பிரம்மா ஜனவரி 15 2015 ஏப்ரல் 18 2015
20 சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி ஏப்ரல் 19 2015 சூலை 5, 2017
21 அச்சல் குமார் ஜோதி சூலை 6, 2017 சனவரி 22, 2018
22 ஓம் பிரகாஷ் ராவத் சனவரி 23, 2018 டிசம்பர் 1, 2018
23 சுனில் அரோரா டிசம்பர் 2, 2018 ஏப்ரல் 12, 2021
24 சுசில் சந்திரா ஏப்ரல் 13, 2021 மே 14, 2022
25 ராஜிவ் குமார் மே 15, 2022 பதவியில்

தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு[தொகு]

மாநிலத்தின் அளவு, தொகுதியின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் மக்களவை தொகுதிக்கு ரூ.70 இலட்சமும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ.29 இலட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று மத்தியத் தேர்தல் ஆணையம் வரம்பு விதித்துள்ளது.[4]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்". இந்தியத் தேர்தல் ஆணையம். 2008-11-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. http://www.indianexpress.com/news/navin-chawla-takes-over-as-cec-on-tue/449165/ |இந்தியன் எக்சுபிரசில் வந்த செய்தி
  4. "போலித்தனமான புரிதல்!". தினமணி. 6 பெப்ரவரி 2014. 6 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.