சுசில் சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசில் சந்திரா
அலுவலின் போது
24வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
13 ஏப்ரல் 2021 – 14 மே 2022
முன்னையவர்சுனில் அரோரா
பின்னவர்ராஜிவ் குமார்
இந்திய தேர்தல் ஆணையாளர்
பதவியில்
15 பிப்ரவரி 2019 – 12 ஏப்ரல் 2021
முன்னையவர்சுனில் அரோரா
பின்னவர்TBD
தலைவர், மத்திய நேரடி வரிகள் ஆணையம்[1]
பதவியில்
1 நவம்பர் 2016 – 14 பிப்ரவரி 2019
முன்னையவர்இராணி சிங் நாயர்
பின்னவர்பிரோமத் சந்திர மோதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுசில் சந்திரா

15 மே 1957 (1957-05-15) (அகவை 66)
முன்னாள் கல்லூரிஇந்திய_தொழில்நுட்பக்_கழகம்_ரூர்க்கி (பி. டெக்),
டிஏவி கல்லூரி, டேராடூன் (எல் எல் பி)
வேலைபணிநிறைவு. இந்திய வருவாய் பணி அலுவலர்

சுசில் சந்திரா (Sushil Chandra) 14 பிப்ரவரி 2019 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக 12 ஏப்ரல் 2021 வரை இருந்தார்[2] இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 12 ஏப்ரல் 2021 அன்று பணி ஒய்வு பெற்றதால், அடுத்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 13 ஏப்ரல் 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் சுசில் சந்திரா நியமிக்கப்பட்டார். சுசில் சந்திரா, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 13 ஏப்ரல் 2021 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.[3][4][5] மே 14, 2022 அன்று அகவை முதிர்வின் காரணமாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[6]

வரலாறு[தொகு]

சுசில் சந்திரா 1980ஆம் ஆண்டில் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி ஆனவர். இவர் 15 பிப்ரவரி 2019-இல் இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2016 முதல் இந்திய அரசின் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக பணியாற்றினார். இவர் இந்திய வருவாய் சேவையில் 38 ஆண்டுகள் பணியாற்றினார்.

மேலும் இவர் இணக்க மேலாண்மை மற்றும் சர்வதேச வரிவிதிப்பு ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். வரிகள் வருவாய் புலனாய்வுத் துறையில் மும்பை மற்றும் குஜராத் புலனாய்வு இயக்குநராகவும், புலனாய்வு பணிப்பாளர் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டத்தை இயற்ற காரணமாக இவர், பினாமி பரிவர்த்தனைகள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தீவிரமாக வலுப்படுத்தினார்.

இளமை[தொகு]

15 மே 1957 அன்று பிறந்த சுசில் சந்திரா ரூர்கி தொழில் நுட்ப நிறுவனத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பை முடித்தார். மேலும் டேராடூன் டி ஏ வி கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பை முடித்தார். இவர் இந்திய வருவாய்ப் பணியில் சேர்வதற்கு முன்னர் இந்தியப் பொறியியல் பணி அதிகாரியாக இருந்தார். சுசில் சந்திரா இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சிகள் எடுத்துள்ளார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pandey, Devesh K. (14 February 2019). "CBDT chief Sushil Chandra appointed as Election Commissioner" – via www.thehindu.com.
  2. Election Commission Website
  3. Sushil Chandra appointed Chief Election Commissioner
  4. தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்பு
  5. Sushil Chandra takes charge as 24th Chief Election Commissioner of India
  6. "இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ராஜீவ் குமார் நியமனம்". Dailythanthi.com. 2022-05-12. பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_சந்திரா&oldid=3632410" இலிருந்து மீள்விக்கப்பட்டது