த. சு. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. சு. கிருஷ்ணமூர்த்தி
T.S.Krishnamurthy
The Chief Election Commissioner Shri T. S. Krishna Murthy delivering the keynote address on "Media Coverage of Election in India towards Free and Fair Elections" at a function organised by Centre for Advocacy and Research (cropped).jpg
13வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்
பதவியில்
பிப்ரவரி 2004 – மே 2005
குடியரசுத் தலைவர் முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
மன்மோகன் சிங்
முன்னவர் ஜே. மை. லிங்டோ
பின்வந்தவர் பி. டாண்டன்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
பணி குடிமைப் பணி அதிகாரி

தருவை சுபையா கிருஷ்ணமூர்த்தி (T. S. Krishnamurthy)(பிறப்பு 1941) என்பவர் முன்னாள் இந்திய வருவாய் சேவையில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் (பிப்ரவரி 2004 முதல் மே 2005 வரை)[1] பணியாற்றியுள்ளார். இவரது முக்கிய பணியாக 2004 மக்களவைத் தேர்தல் இருந்தது.

முன்னதாக இவர் ஜனவரி 2000 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஆணையராக பணியாற்றினார்.

பின்னணி[தொகு]

கிருஷ்ணமூர்த்தி இந்திய வருவாய் சேவை அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நிறுவன விவகாரங்கள் துறை செயலாளர் உட்பட பல்வேறு மட்டங்களில் அரசுக்கு பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஆன முதல் இந்திய வருவாய் சேவை அதிகாரி இவராவார்.

நிறுவன விவகாரத் திணைக்களத்தின் செயலாளராக, நிறுவனங்களின் உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகளிலிருந்து அமைக்கப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை அமைத்த பெருமைக்குரியவர்.

கிருஷ்ணமூர்த்தி தனது 19 வயதில் இந்தியாவின் வங்கியில் (தேசியமயமாக்கலுக்கு முன்பு) ஒரு தகுதி காண் அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1963ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் சேர்ந்தார். இதன் பின்னர் இவர் சென்னையில் வருமான வரி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். புதுதில்லியில் உள்ள கப்பல் மற்றும் நிதி உட்பட ஏராளமான அமைச்சகங்களில் பணியாற்றிய பின், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் துணை பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பணியாற்றிய முக்கிய வேலைகளில் ஒன்று பம்பாயில் வருமான வரி தலைமை ஆணையர்.

இவர் எத்தியோப்பியா மற்றும் ஜார்ஜியாவில் சர்வதேச நாணய நிதிய ஆலோசகராகவும் பணியாற்றினார். தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலத்தில் 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல்களில் ஒரு பார்வையாளராக இருந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு மத்தியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தேர்தல்களை நடத்துவதற்காக 2005 ஆம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வரலாறு[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்தார் இவர் பரோடாவில் உயர்நிலை கல்வியினைக் கற்றார். பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார்.[சான்று தேவை] மைசூர் பல்கலைக்கழகத்தில் வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் கிருஷ்ணமூர்த்தி தங்கப் பதக்கங்களை வென்றார். இங்கிலாந்தின் பாத் பல்கலைக்கழகத்தில் நிதி ஆய்வில் முதுகலை முடித்தார்.

ஓய்வு பெற்ற பின்னர், இவர் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழு உறுப்பினராக உள்ளார், குறிப்பாக, இவர் பாரதிய வித்யா பவன் சென்னைப் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் ஆகஸ்ட் 2008இல் "ஜனநாயகத்தின் அதிசயங்கள்" என்ற புத்தகத்தினை எழுதி வெளியிட்டார்.

கிருஷ்ணமூர்த்தி சென்னையைச் சேர்ந்த வீணா கலைஞரான கீதாவினை மணந்தார். இவரது மகன் கார்த்திக் மற்றும் மருமகள் அனுசுயா இலண்டனில் வசித்து வருகிறார்கள். இவரது மகள் நந்திதா மற்றும் மருமகன் ஸ்ரீகாந்த் பர்மேஸ்வரன் அய்யர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Previous Chief Election Commissioners". Election Commission of India. 21 November 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]