அச்சல் குமார் ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சல் குமார் ஜோதி
இந்தியத் தேர்தல் ஆணையர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
13 மே 2015
தனிநபர் தகவல்
பிறப்பு 23 சனவரி 1953 (1953-01-23) (அகவை 67)
தேசியம் இந்தியர்
தொழில் அரசு பணியாளர்
சமயம் இந்து

அச்சல் குமார் ஜோதி (Achal Kumar Jyoti, பிறப்பு: 23 சனவரி 1953) என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் துவங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். 2015 மே 13 இல் இவர் மூன்று இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[1][2]

பணி விவரம்[தொகு]

அச்சல் குமார் ஜோதி குஜராத் தலைமைச் செயலாளராக 2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1] அவர் 1999 முதல் 2004 வரை, கண்ட்லா துறைமுக அறக்கட்டளை தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார். 2013-இல் தலைமைச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குஜராத் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகப் பதவி அமர்த்தப்பட்டார்.[2]

மேற்கோள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சல்_குமார்_ஜோதி&oldid=2715493" இருந்து மீள்விக்கப்பட்டது