சுனில் அரோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில் அரோரா
Shri Sunil Arora Secretary, Ministry of Information & Broadcasting in New Delhi (cropped).jpg
23rd இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
2 டிசம்பர் 2018 – 12 மார்ச் 2021
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
முன்னவர் ஓம் பிரகாஷ் ராவத்
பின்வந்தவர் சுசில் சந்திரா
இந்தியத் தேர்தல் ஆணையம்
பதவியில்
1 செப்டம்பர் 2017 – 2 டிசம்பர் 2018
கூட்டாண்மை நிறுவன விவகாரங்களுக்கான இந்திய நிறுவனத்தின் பொது இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர்
பதவியில்
19 டிசம்பர் 2016 – 31 ஆகத்து 2017
தனிநபர் தகவல்
பிறப்பு 13 ஏப்ரல் 1956 (1956-04-13) (அகவை 67)
ஓசியார்பூர், கிழக்கு பஞ்சாப், இந்தியா
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகம்[1]
பணி ஓய்வு பெற்ற ஆய்வு அலுவலர்

சுனில் அரோரா (Sunil Arora) (பிறப்பு13 ஏப்ரல் 1956) 23 ஆவது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். [2] இவர் 1980 ஆம் ஆண்டு பிரிவைச் சாரந்த, ஓய்வு பெற்ற, இராசத்தான் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் இந்திய அரசின் இரு அமைச்சகங்களில் இரண்டு முறை செயலராகப் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அரோராவின் தந்தையார் இந்திய இரயில்வேயில் பணி ஓய்வு பெற்ற கணக்கு அலுவலர் ஆவார். அரோராவின் தாயாரோ ஓசியார்பூர் டிஏவி கல்லூரியில் பணியாற்றினார். இவரது இரண்டு சகோதரர்களில் ஒருவரும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். மற்றுமொரு சகோதரர் இந்திய வெளியுறவுத் துறையில் தூதரும் ஆவார்.[3][4]

கல்வி[தொகு]

அரோரா ஆங்கிலத்தில் சிறப்பு நிலை இளங்களைப்பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர் ஆவார். சண்டிகர் யூனியன் பிரதேசத்திலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[5]

இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்கு முன்பாக[தொகு]

இந்திய ஆட்சிப்பணி அலுவலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, சுனில் அரோரா ஜலந்தரில் உள்ள டிஏவி கல்லூரியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஒரு இந்திய ஆட்சிப்பணி அலுவலராக[தொகு]

ஒரு இந்திய ஆட்சிப்பணி அலுவலராக, அரோரா, இந்திய அளவிலும், இராசத்தான் மாநில அளவிலும் கூடுதல் தலைமைச் செயலாளர்(உள்துறை), முதன்மைச் செயலாளர்(சிறுதொழிற்துறை), இராசத்தான் மாநில தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், இராசத்தான் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், ஜோத்பூர், நாகவுர், அல்வர் மற்றும் தோல்புர் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் [6][7][8][9] மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை செயலர், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலர், இந்திய உள்நாட்டுப் போக்குவரத்திற்கான வானூர்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், இந்திய குடிமை வான்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர்  உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

அரோரா தனது அரசுப் பணியிலிருந்து 30 ஏப்ரல் 2016 அன்று ஓய்வு பெற்றார்.  பணி நிறைவிற்குப் பிறகு, அரோரா கூட்டாண்மை நிறுவன விவகாரங்களுக்கான இந்திய நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இறுதியாக அவர் மீண்டும் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக மறு பணியமர்வு செய்யத்தக்க வகையில் கருதப்பட்டு அவ்வாறே செய்யப்பட்டார்.[10][11][12]

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்[தொகு]

அரோரா இந்தியாவின் இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவராக 31 ஆகத்து 2017 பொறுப்பேற்றுக் கொண்டார்.[13][14][15][16][17][18][19] அரோரா தேர்தல் ஆணையராக செப்டம்பர் 1, 2017 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[7][8][20][21]. ஓம் பிரகாஷ் ராவத்தைத் தொடர்ந்து, சுனில் அரோரா இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக டிசம்பரில் சுனில் அரோரா இருப்பார் என நவம்பர் 26, 2018 இல் அறிவிக்கப்பட்டது.[22] 2018 டிசம்பர் 2 ஆம் நாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இவர் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் அக்டோபர் 2021 வரையிலும் உள்ளது.[23]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Election Commissioner - Shri Sunil Arora". இந்தியத் தேர்தல் ஆணையம். 30 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 2. "President Kovind appoints Sunil Arora as new Chief Election Commissioner". 2018-11-26. 2018-11-27 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 3. "New Election Commissioner's Doaba connect". The Tribune. 7 September 2017. 7 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 4. "यहां पढ़े हैं चुनाव आयोग के कमिश्नर बने सुनील अरोड़ा,सरकारी कॉलेज से MA की" [New commissioner of the Election Commission studied here; did his MA from government college]. Dainik Bhaskar (இந்தி). Hoshiarpur. 7 September 2017. 7 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Sunil Arora - Executive Record Sheet". Department of Personnel and Training, Government of India. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 6. "Sunil Arora - Officer Service Histroy". Department of Personnel, Government of Rajasthan. 15 January 2018 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 7. 7.0 7.1 "Shri Sunil Arora takes over as new Election Commissioner on 1st September, 2017" (PDF). Election Commission of India. 1 September 2017. 5 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 8. 8.0 8.1 Parihar, Rohit (3 September 2017). Kumar, Ganesh; Udayakumar, Radha (eds.). "Why Rajiv Mehrishi's and Sunil Arora's appointments are Rajasthan's loss and the Centre's gain". India Today. 7 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 9. "Sunil Arora is the third Election Commissioner: Former bureaucrat has worked for finance ministry and Planning Commission". Firstpost. 1 September 2017. 30 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 10. "Govt appoints Sunil Arora as IICA Director General". The New Indian Express. 10 December 2017. 10 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 11. "Govt appoints Sunil Arora as IICA Director General". Business Standard. 15 December 2016. 10 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 12. "Sunil Arora appointed as Director General of IICA". Jagran Josh. Dainik Jagran. 17 December 2017. 10 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 13. "Shri Sunil Arora Appointed as New Election Commissioner". Press Information Bureau of India. 31 August 2017. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 14. Jain, Bharti (31 August 2017). "Sunil Arora appointed Election Commissioner". Times of India. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 15. Mohit (31 August 2017). "राजीव महर्षि होंगे देश के नए CAG, सुनील अरोड़ा बने चुनाव आयुक्त" [Rajiv Mehrishi will be the nation's next CAG; Sunil Arora appointed as Election Commissioner]. Amar Ujala (இந்தி). Amarujala.com. Amar Ujala Publications Ltd. November 9, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Sunil Arora appointed as Election Commissioner". The Economic Times. 1 September 2017. 1 செப்டம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Former Bureaucrat Sunil Arora Appointed Election Commissioner". NDTV. 1 September 2017. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 18. "Sunil Arora appointed Election Commissioner". The Indian Express. 1 September 2017. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 19. "Sunil Arora appointed Election Commissioner, Achal Kumar Joti is CEC". Business Standard. 1 September 2017. 7 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 20. "Raj cadre officer takes charge as EC". Daily News and Analysis. 2 September 2017. 7 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 21. "Sunil Arora assumes charge as new Election Commissioner". United News of India. 1 September 2017. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது. Invalid |url-status=No (உதவி)
 22. "Sunil Arora appointed as chief election commissioner, formal notification soon". 2018-11-26.
 23. https://www.dailythanthi.com/News/India/2018/12/03023542/Sunil-Arora-as-Chief-Electoral-Commissioner-Being.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_அரோரா&oldid=3575288" இருந்து மீள்விக்கப்பட்டது