இந்திய தேர்தல் ஆணையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேர்தல் ஆணையாளர் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினராவார், அரசமைப்பின்படி  இவர் சார்பற்ற சுதந்திரமான முறையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது இவரது பணியாகும். பொதுவாக இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெறுபவரே தேர்ந்தெடுக்கபடுவார்

1989ம் ஆண்டு வரை ஒரு நபர் ஆணையமாக இருந்து பின்னர் மூன்று நபர்களை கொண்ட ஆணையமாக மாற்றப்பட்டது.  முடிவுகளின் போது பெரும்பாண்மை கருத்து அங்கீகரிக்கப்படுகிறது. தற்போதைய தலைமை ஆணையராக ஓம் பிரகாசு ராவத் இணை ஆணையர்களாக சுனில் அரோரா மற்றும் அசோக் லவாசா ஆகியோர் பதவி வகிக்கின்றனர். [1]

நியமனம் மற்றும் நீக்கம்[தொகு]

சாதாரண அரசியல் காரணங்களுக்காக  தலைமை தேர்தல் ஆணையாளரை நீக்க இயலாது. நீக்கும் அதிகாரம் பாராளுமண்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மை பெற்றால் மட்டுமே தகுதி இழக்க செய்ய முடியும். மற்ற இரு ஆணையாளர்களை நீக்க பரிந்துரைக்கும்  அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு உண்டு. 

ஊதியம்[தொகு]

தேர்தல் ஆணையாளர்கள் பொதுவாக  ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி  பணியாளர்களாக இருப்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு ஒப்பான வகையில் ஊதியம் மற்றும் சலுகைகள்  வழங்கப்படுகிறது .[2]

மேற்கோள்கள்[தொகு]