ச. யா. குரேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
சகாபுதீன் யாகூப் குரேசி
17வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
30 ஜூலை 2010 – 10 ஜீன் 2012
குடியரசுத் தலைவர்பிரதீபா பாட்டீல்
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்நவீன் சாவ்லா
பின்னவர்வீ. சு. சம்பத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சூன் 1947 (1947-06-11) (அகவை 76)[1]
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
தொழில்குடிமைப் பணி

சகாபுதீன் யாகூப் குரேசி (Shahabuddin Yaqoob Quraishi)(பிறப்பு ஜூன் 1947 11) இந்திய குடைமைப் பணி அதிகாரி மற்றும் 17வது இந்தியத்தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார்.[2][3] இவர் ஜூலை 30, 2010 அன்று நவீன் சாவ்லா ஓய்விற்குப் பின் இப்பதவியில் நியமிக்கப்பட்டார். முன்னதாக குரேசி இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

தொழில்[தொகு]

குரோசி இந்திய ஆட்சிப் பணிக்கு 1971ஆம் ஆண்டு தேர்வான அரியானா அதிகாரி ஆவார். இவர் தொடர்பு மற்றும் சமூக சந்தைப்படுத்தலில் முனைவர் பட்டமும் பெற்றிருந்தார்.[5] குரைசி, இந்தியாவின் முதல் முஸ்லீம் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஆவார். ஆனால் இவர் 10 ஜூன் 2012 அன்று பதவியிலிருந்து விலகினார்.

நூல்கள்[தொகு]

குரைசி 'ஒரு ஆவணமற்ற அதிசயம் - சிறந்த இந்தியத் தேர்தலை உருவாக்குதல்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். [6] இந்தியத் தேர்தலின் மகத்துவத்தையும் சிக்கலையும் விவரிக்கும் ஒரு புத்தகம் இதுவாகும்.[7][8] பழைய தில்லி-வாழ்க்கை மரபுகள் பாரம்பரிய நகரம் மற்றும் அதன் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கை குறித்த அட்டவணை புத்தகத்தினையும் எழுதியுள்ளார்.[9][10]

விருதும் கவுரமும்[தொகு]

2011இல் 100 சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் குரைசியின் பெயரை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை பட்டியலிட்டது.[11] இவரது பெயர் மீண்டும் 2012 ஆண்டிலும் பட்டியலிடப்பட்டது.[12]

இவர் இப்போது தில்லி பல்கலைக்கழகத்தின்புதுமைத் தொகுப்பு மையத்தில் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் மூலம் கல்வியாளர்களுடன் தனது பணியினைத் தொடர்கிறார்.[13] இவர் சர்வதேச தேர்தல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

முனைவர் ச. யா. குரைசிக்கு 2016 மே மாதம் இங்கிலாந்தின், இந்தியத் தேசிய மாணவர் சங்கத்தின் கவுரவ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை முதலில் பெற்ற சபனா ஆசுமி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோருடன் இவரும் இணைந்தார்.[14]

கருத்துக்கள்[தொகு]

சிஎன்என்-ஐ.பி.என் என்ற தொலைக்காட்சி அலைவரிசையில் பிசாசின் வழக்கறிஞர் நிகழ்ச்சியான கரண் தாபாரில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது, அண்ணா அசாரே கூறிய திரும்ப அழைத்தல் மற்றும் நிராகரிக்கும் உரிமை என்ற கருத்துக்களை எதிர்த்து இந்தியாவில் இது சாத்தியமில்லை எனக் கூறினார்.[15] இருப்பினும், பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தேர்வான சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினரை நிராகரிக்கும் உரிமையைப் பரிசீலிக்க முடியும் என்று கூறினார்.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. Balaji, J. (28 July 2010). "Quraishi new Chief Election Commissioner". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100729032938/http://www.hindu.com/2010/07/28/stories/2010072862460100.htm. 
 2. "India is secular because most Hindus are secular: Former CEC SY Quraishi". Archived from the original on 2018-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
 3. http://eci.nic.in/eci_main1/previous-ces.aspx
 4. "Government of India appointed Youth Affairs and Sports Secretary S Y Quraishi as Election Commissioner for a five-year term from IndiaDaily". Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
 5. Dr. S. Y. Quraishi has also attended the prestigious Jamia Millia Islamia, a Central University in New Delhi for his later education.
 6. "It's time to take stock of the electoral process".
 7. http://www.goodreads.com/book/show/22119020-an-undocumented-wonder
 8. http://indiatoday.intoday.in/story/review-an-undocumented-wonder-the-making-of-the-great-indian-election-s.y.-quraishi-by-natwar-singh/1/356814.html
 9. http://www.thehindu.com/news/cities/Delhi/existing-and-forgotten-traditions-of-purani-dilli/article2677602.ece
 10. https://www.amazon.in/Old-Delhi-Living-Traditions-Quraishi/dp/8182902312
 11. http://archive.indianexpress.com/news/the-most-powerful-indians-in-2011-no.-4150/745639/3
 12. http://archive.indianexpress.com/news/the-most-powerful-indians-in-2012-no.-3140/916155/4
 13. "CIC gets a galaxy of honorary professors that include famous scientists, academicians, bureaucrats".
 14. "Former Chief Election Commissioner S Y Quraishi awarded honorary fellowship in UK". timesofindia-economictimes. பார்க்கப்பட்ட நாள் 2016-05-29.
 15. "CEC not for Right to Reject, Recall, suspects will destabilise country". Indiavision news. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
 16. http://zeenews.india.com/news/nation/right-to-reject-can-be-considered-sy-quraishi_755585.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._யா._குரேசி&oldid=3791446" இலிருந்து மீள்விக்கப்பட்டது