இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.

இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 அகவை (வயது) நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோ அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.

இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையரை நடத்தை விதி மீறலைக் (இம்பீச்மென்ட்) காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) தீர்மானம் வெற்றிபெற்றாலின்றி அவரை வேறு எவ்வகையிலும் பணியிலிருந்து நீக்கவியலாது.

இதன் அதிகாரக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இவ்வாணையத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இந்தியாவே முதன் முதலாக முழுவதும் மின்னணு எந்திரத்தின் மூலம் பொதுத்தேர்தலை நடத்திக்காட்டியது.

இவ்வாணையத்தின் மீது மக்கள் பார்வை விழக் காரணமாயிருந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷன். அவர் 1990 முதல் 1996ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அவரின் பணிக் காலத்தில் தான் அதுவரை தேர்தல்களில் ஊழல் மிகுந்திருந்த நிலை அவரின் கண்டிப்புமிக்க, நேர்மையான செயலால் சற்றுத் தணிக்கப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர்கள்[தொகு]

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்:[1]

வரிசை எண் தேர்தல் ஆணையர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899) மார்ச் 21, 1950 டிசம்பர் 19, 1958
2 கே.வி.கே. சுந்தரம் டிசம்பர் 20, 1958 செப்டம்பர் 30, 1967
3 எஸ்.பி. சென் வர்மா அக்டோபர் 1, 1967 செப்டம்பர் 30, 1972
4 நாகேந்திர சிங் அக்டோபர் 1, 1972 பெப்ரவரி 6, 1973
5 டி. சுவாமி நாதன் பெப்ரவரி 7, 1973 ஜூன் 17, 1977
6 எஸ்.எல். சக்தார் ஜூன் 18, 1977 ஜூன் 17, 1982
7 ஆர்.கே. திரிவேதி ஜூன் 18, 1982 டிசம்பர் 31, 1985
8 ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி ஜனவரி 1, 1986 நவம்பர் 25, 1990
9 வி.எஸ். ரமாதேவி நவம்பர் 26, 1990 டிசம்பர் 11, 1990
10 டி.என். சேசன் டிசம்பர் 12, 1990 டிசம்பர் 11, 1996
11 எம்.எஸ். கில் டிசம்பர் 12, 1996 ஜூன் 13, 2001
12 ஜே.எம். லிங்டோ ஜூன் 14, 2001 பெப்ரவரி 7, 2004
13 டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பெப்ரவரி 8, 2004 மே 15, 2005
14 பி.பி. தாண்டன் மே 16, 2005 ஜூன் 29, 2006
15 என். கோபாலசுவாமி ஜூன் 29, 2006 ஏப்ரல் 20, 2009
16 நவீன் சாவ்லா ஏப்ரல் 21, 2009 சூலை 29, 2010
17 எஸ். ஒய். குரேசி சூலை 30, 2010 சூன் 10, 2012
18 வி. எஸ். சம்பத் சூன் 11, 2012 ஆகஸ்ட் 7, 2012
19 டாக்டர் சையது நாசிம் அகமது சைதி ஆகஸ்ட் 7, 2012 தற்பொழுது பணியில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "முன்னாள் தலைமைத் தேர்தல்ஆணையர்கள்". இந்தியத் தேர்தல் ஆணையம்.

வெளி இணைப்புகள்[தொகு]