டி. என். சேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன்
10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
திசம்பர் 12, 1990 – திசம்பர் 11, 1996
பிரதமர் வி. பி. சிங்
முன்னவர் வி. எஸ். ரமாதேவி
பின்வந்தவர் எம். எஸ். கில்
18வது ஆய அவை செயலாளர்
இந்தியக் குடியியல் பணிகள்
பதவியில்
1989–1989
முன்னவர் பி.ஜி.தேஷ்முக்
பின்வந்தவர் வி. சி. பாண்டே
தனிநபர் தகவல்
பிறப்பு திருநெல்லை நாராயண அய்யர் சேஷன்
திசம்பர் 15, 1932(1932-12-15)
பாலக்காடு, கேரளம், இந்தியா
இறப்பு 10 நவம்பர் 2019(2019-11-10) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியாஇந்தியா
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னை கிருத்துவக் கல்லூரி
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
சமயம் இந்து சமயம்

திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் (Tirunellai Narayana Iyer Seshan) அல்லது டி. என். சேஷன் (15 டிசம்பர் 1932 - 10 நவம்பர் 2019) இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக திசம்பர் 12, 1990 முதல் திசம்பர் 11, 1996 வரை பொறுப்பேற்றவர்.[1] இந்த காலகட்டத்தில் அவர் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்படுகிறார்.[2][3]

வாழ்க்கை[தொகு]

சென்னை மாகாணம், பாலக்காட்டில் உள்ள திருநெல்லை எனும் சிற்றூரில் தந்தை டி. எஸ். நாராயணய்யர், தாயார் சீதாலட்சுமிக்கு பிறந்தவர் டி. என்.சேஷன்.

கல்வி[தொகு]

பள்ளிப்படிப்பு பாலக்காடு பி.இ.எம். உயர்நிலைப்பள்ளி. பாலக்காடு அரசினர் விக்டோரியா கல்லூரியில் இண்டர் மீடியட். சென்னை தாம்பரம் கிருத்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஹானர்ஸ்), அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (பொது நிர்வாகம்), இந்திய ஆட்சிப் பணி (1954) முடித்தார்.

பணிகள்[தொகு]

கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். 1990 திசம்பர் 12ஆம் தேதி முதல் 6 ஆண்டுகளுக்கு இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்[தொகு]

இறப்பு[தொகு]

அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நவம்பர் 10, 2019 அன்று 86 வயதில் காலமானார். அவரது மறைவை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். வை. குரைஷி அறிவித்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
வி. எஸ். ரமாதேவி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
12 திசம்பர் 1990 – 11 திசம்பர் 1996
பின்னர்
எம். எஸ். கில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._சேஷன்&oldid=3739927" இருந்து மீள்விக்கப்பட்டது