ரமோன் மக்சேசே விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரமோன் மக்சேசே விருது
விருதுக்கான
காரணம்
அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் மற்றும் வளரும் தலைமை ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.
வழங்கியவர் ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை
நாடு பிலிப்பைன்ஸ்
முதலாவது விருது 1958
அதிகாரபூர்வ தளம்
ரமன் மக்சேசே

ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது.[1][2][3]

ஒவ்வொரு ஆண்டும் ரமோன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது:

  • அரசுப்பணி
  • பொது சேவை
  • சமூக தலைமை
  • தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை
  • அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல்
  • வளரும் தலைமை

"வளரும் தலைமை" என்ற வகை 2000ஆம் ஆண்டு ஆறாவது பகுப்பாக தொடங்கப்பட்டது. இப்பரிசு "தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய, ஆனால் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களுக்கு" வழங்கப்படுகிறது.

2008 வரை வழங்கப்பட்டுள்ள 254 விருதுகளில், 47 இந்தியர்களுக்கும், 39 பிலிப்பைன் நாட்டவருக்கும், 23 ஜப்பானியருக்கும் மற்றவை ஆசியாவின் பிற நாட்டினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பரிசு பெற்றவர்கள் சிலர்[தொகு]

1958 வினோபா பாவே இந்தியா
1959 சிந்தாமன் துவாரகநாத் தேஷ்முக்
1961 அமிதாப சௌத்திரி
1962 அன்னை தெரேசா
1963 வர்கீஸ் குரியன்
1963 தாரா கரோடி
1963 திருபுவன்தாஜ் கேசுபாய் படேல்
1965 ஜெயபிரகாஷ் நாராயண்
1966 கமலாதேவி சட்டேபாத்யாய்
1967 சத்யஜித் ராய்
1971 எம். எஸ். சுவாமிநாதன் தமிழ்நாடு
1974 எம். எஸ். சுப்புலட்சுமி தமிழ்நாடு
1975 பூப்ளி ஜார்ஜ் வர்கிஸ்
1976 சோம்பு மித்ரா
1977 இலா பட்
1979 மாபெலே அரோலே
1979 ரஜனிகாந்த் அரோலே

குறிப்புகள்[தொகு]

  1. Clare Arthurs (2000-07-25). "Activists share 'Asian Nobel Prize'". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/851034.stm. பார்த்த நாள்: 2008-02-20. 
  2. "Arvind Kejriwal selected for Magsaysay Award". The Times of India. 2006-07-31. http://timesofindia.indiatimes.com/articleshow/1832474.cms. பார்த்த நாள்: 2008-02-21. 
  3. Ann Bernadette Corvera (2003-10-08). "'03 RAMON MAGSAYSAY AWARDEES: A LEAGUE OF EXTRAORDINARY MEN & WOMEN". Philippine Star. http://www.newsflash.org/2003/05/si/si001665.htm. பார்த்த நாள்: 2008-02-21. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமோன்_மக்சேசே_விருது&oldid=2044377" இருந்து மீள்விக்கப்பட்டது