தலைமைச் செயலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைமைச் செயலாளர் என்பவர் இந்தியாவில் ஒரு மாநிலத்தை நிர்வாக ரீதியாக ஆளும் அதிகாரியாவார். இவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருப்பார். இவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் மாநிலக் காவல் துறை, முழு மாநில அரசு நிர்வாகம், அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை போன்றவை இயங்கிவருகின்றன.

பொறுப்புகள்[தொகு]

மாநில சட்டப் பேரவையில் முதல்வர் அறிவிக்கும் புதிய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியப் பொறுப்பு தலைமைச் செயலாளருக்கு உண்டு. உள்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அந்தந்தத் துறைகளின் செயலாளர்களுக்கு உண்டு என்றாலும் அவர்கள் உரிய முறையில் திட்டங்களை நிறைவேற்றுகிறார்களா என்பதை தலைமைச் செயலாளர் துறைச் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி கண்காணித்து உறுதி செய்வார். இ.ஆ.ப. அதிகாரி தவறு செய்யும்போது முதல் கட்ட விசாரணை நடத்தி விசாரணையில் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமைச் செயலாளர்தான் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி.செல்வகுமார் (2016 திசம்பர் 25). "களம் புதிது: அரசு அதிகாரத்தின் பெண் முகம்!". கட்டுரை. தி இந்து. 25 திசம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமைச்_செயலாளர்&oldid=2444081" இருந்து மீள்விக்கப்பட்டது