பேச்சு:இந்தியத் தேர்தல் ஆணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுரையின் முன்னுரையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தை விவரிக்கும் முதல் சொற்றொடர் சற்று எளிமையற்றதாக உள்ளது என கருதுகிறேன். constitutional body என்பதற்கான தமிழாக்கம் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற அமைப்பு" என்பதாகும்.

இச்சொற்றொடரில் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால்" என்று வரிகளுக்கும் "நிறுவப்பெற்ற அமைப்பு" என்று வரிகளுக்கும் இடையில் வேறு செய்திகளும் வருவதால் constitutional body என்னும் பொருள் மங்கி விடுவதாக தோன்றுகிறது

முதலில் ஆங்கில கட்டுரையைத்தான் படித்தேன். அப்பொழுது constitutional body என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. தமிழ் கட்டுரையை படிக்கலானேன்.பதில் கிடைக்காதலால் Google-இலும் அகரமுதலிகளிலும் தேடினேன். "அரசியல் சாசனத்தால் உருவாக்கப்ட்ட அமைப்பு" என்று விளங்கிக் கொண்டேன் . இவ்விடயத்தை தமிழ் கட்டுரையில் சேர்க்க மறுபடியும் படிக்க நேர்கையில்தான் ஏற்கனவே எழுதபட்டிருப்பது தெரிந்தது

எனவே சொற்றொடர்களை பிரித்து எழுதினால் எளிமையாகவும் பொருள் தெளிவாகவும் விளங்கும் என்று எண்ணுகிறேன்.

பின்வருவதைப் போல:-

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஒரு தன்னாட்சி பெற்ற, பகுதியளவு நீதித்துறை போன்ற, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற அமைப்பாகும்.இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும்.−முன்நிற்கும் கருத்து Cangaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பிரித்து எழுதிவிட்டேன். இது போன்ற சர்ச்சையற்ற நல்ல மாற்றங்களை நீங்களே செய்துவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:40, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]