உள்ளடக்கத்துக்குச் செல்

இலத்தா ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலத்தா ஆணையம் (Laththa Commission) என்பது 2009ஆம் ஆண்டு அகமதாபாத்தில் 148 உயிர்களைப் பலிவாங்கிய கள்ளச்சாராய சோகத்தை விசாரிக்கக் குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் ஆகும்.[1][2]

இலத்தா (மெத்தனால் அடங்கிய போலி மதுபானம்) என்ற மதுபானத்தினை மக்கள் உட்கொண்டதால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. இதன் விளைவாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் மெத்தனால் எடுத்துச் செல்லுதல், வைத்திருத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான கடுமையான விதிகளை உருவாக்கவும், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்லும்போது திருட்டினைத் தடுக்க மின்னணு பூட்டு நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த ஆணையம் பரிந்துரைத்தது.[2]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • பம்பாய் தடை (குஜராத் திருத்தம்) 2009

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hooch tragedy Commission Report" (PDF). Archived from the original (PDF) on 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 2016-08-06.
  2. 2.0 2.1 "Hooch: Panel blames govt for laxity on methanol use". The Indian Express. 2012-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்தா_ஆணையம்&oldid=3811816" இலிருந்து மீள்விக்கப்பட்டது