ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஆங்கிலம்: The Pension Fund Regulatory and Development Authority (PFRDA). இந்திய அரசு, 23. 08. 2003-இல் இந்திய அறநிலைய சட்டம் , 1882-இன் கீழ் பதிவு செய்து நிறுவப்பட்டது. புதிய ஓய்வுதிய திட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை(PFRDA) அமைப்பதற்கும், ஓய்வூதிய நிதியை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4-ஆம் தேதி மக்களவையிலும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது இந்திய மைய அரசு. செப்டம்பர் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.[1].[2]

இவ்வமைப்பின் நோக்கம்[தொகு]

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme) சேர்ந்துள்ள 55 இலட்சம் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய திட்ட நிதியை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்திய அரசின் சார்பாக அறங்காவலராக இவ்வமைப்பு செயல்படுகிறது.

ஆணய நிர்வாகிகள்[தொகு]

இவ்வாணையம் ஒரு தலைவரும் ஐந்துக்கும் மேற்படாத உறுப்பினர்களும் கொண்டுள்ளது. ஆணைய நிர்வாகிகளை இந்திய ஒன்றிய அரசு நியமிக்கிறது. தற்போதைய ஆணைய நிர்வாகிகள் விவரம்:

  1. ஆர். வி. வர்மா, ஆணையத் தலைவர்
  2. டாக்டர். பி. எஸ். பண்டாரி, முழு நேர உறுப்பினர் (பொருளாதாரம்)
  3. டாக்டர். அனுப் வாத்தவான், பகுதி நேர உறுப்பினர்
  4. திருமதி. சுதா கிருஷ்ணன், பகுதி நேர உறுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pfrda.org.in ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்
  2. http://www.dailythanthi.com/LS%20passes%20Pension%20Billபுதிய ஓய்வூதிய வரைவு நகல் மற்றும் நிதி மேலாண்மை விரிவாக்க ஆணையம் வரைவு நகல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

வெளி இணைப்புகள்[தொகு]