உள்ளடக்கத்துக்குச் செல்

சர்க்காரியா ஆணைக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்காரியா ஆணைக்குழு (Sarkaria Commission, சர்க்காரியா கமிசன்) இந்தியாவின் நடுவண் அரசால் 1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாணக்குழுவிற்கு இடப்பட்ட பணி மாநிலங்களுக்கும் நடுவண் அரசிற்கும் இடையே உள்ள அதிகாரப் பகிர்வினை ஆய்ந்து இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாற்றங்களை பரிந்துரைப்பதாகும்.[1] இக்கமிசனின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் ரஞ்சித் சிங் சர்காரியா பணியாற்றியமையால் சர்காரியா கமிசன் என அறியப்பட்டது.[1] இக்கமிசனின் மற்ற இரு அங்கத்தினர்களாக பி.சிவராமன் மற்றும் முனைவர்.எஸ்.ஆர்.சென் இருந்தனர்.

1988ஆம் ஆண்டு கமிசன் 1600 பக்கங்கள் கொண்ட தனது இறுதி அறிக்கையை அளித்தது.அதனில் 247 பரிந்துரைகள் இருந்தன. அந்த அறிக்கை பெரியதாக இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக சட்டப்பேரவை அதிகாரங்கள்,ஆளுநர் அதிகாரங்கள் மற்றும் விதி 356 அதிகாரங்கள் போன்றவற்றில் இயங்குநிலையே நீடித்திருக்க பரிந்துரைத்திருந்தது.[2].

இருப்பினும் இக்கமிசனின் பரிந்துரைகளில் 180ஐ(180/247)தவிர மற்றவை அரசினால் நடைமுறைப்படுத்தப் படவில்லை.[2][3]

கமிசன் பல ஆய்வுகளை மேற்கொண்டு, பலரிடமிருந்து தகவல்களைத் திரட்டி, விவாதங்கள் நடத்தி பின்னர் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் சனவரி 1988ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. 19 அத்தியாயங்களில் 247 பரிந்துரைகள் வழங்கியிருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 The Tribune, Chandigarh, India - Nation
  2. 2.0 2.1 "India And The Challenges Of The Twenty First Century". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2010-01-13.
  3. "Inter-State Council: Some Progress For State's Rights". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2010-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்காரியா_ஆணைக்குழு&oldid=3553050" இலிருந்து மீள்விக்கப்பட்டது