இந்திய உச்ச நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய உச்சநீதி மன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய உச்ச நீதிமன்றம்
भारत का उच्चतम न्यायालय
Emblem of the Supreme Court of India.svg
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சின்னம். [1][2][3]
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1, 1937; 85 ஆண்டுகள் முன்னர் (1937-10-01)
(இந்தியாவின் கூட்டு நீதிமன்றம்)
28 சனவரி 1950; 73 ஆண்டுகள் முன்னர் (1950-01-28)
(இந்திய உச்ச நீதிமன்றம்)[4]
அமைவிடம்புது தில்லி
புவியியல் ஆள்கூற்று28°37′20″N 77°14′23″E / 28.622237°N 77.239584°E / 28.622237; 77.239584ஆள்கூறுகள்: 28°37′20″N 77°14′23″E / 28.622237°N 77.239584°E / 28.622237; 77.239584
குறிக்கோளுரைयतो धर्मस्ततो जयः॥
அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.
நியமன முறைநிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்தியக் குடியரசுத் தலைவர் (தூக்கு தண்டனை உட்பட தண்டனையை நீக்க மட்டும்)
நீதியரசர் பதவிக்காலம்65 அகவை
இருக்கைகள் எண்ணிக்கை34 (33+1)
வலைத்தளம்supremecourtofindia.nic.in
இந்தியத் தலைமை நீதிபதி
தற்போதையதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
பதவியில்9 நவம்பர் 2022 முதல்

இந்திய உச்ச நீதிமன்றம் (ஆங்கிலம்-Supreme Court of India') இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன.

இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950 துவங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது .

நீதிமன்ற கட்டமைவு[தொகு]

இந்திய உச்ச நீதிமன்றம்- மைய மண்டபம்

சனவரி 26, 1950, ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பு உச்சநீதிமன்றம் தன் செயல்பாட்டைத் துவங்கி, துவக்கவிழா நாடாளுமன்ற இளவரசு மாளிகையில் நடைபெற்றது.

1937 முதல் 1950 இடைபட்ட 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958 வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது.

துவக்கவிழாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. தற்பொழுதுள்ள கட்டடத்தில் 1958 ல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது. இதன் தற்பொழுதய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி. எச். பரேக்.

உச்ச நீதிமன்ற கட்டுமானம்[தொகு]

இதன் தற்பொழுதைய கட்டடத்திற்கு 1958 ல் இடம்பெயர்ந்தது. இதன் கட்டட ஒழுங்கமைவு படத்தில் காட்டியுள்ளபடி இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. 1979 ல் இதனோடு இரண்டு மண்டபங்கள் - ஒன்று கிழக்கு மண்டபம் மற்றொன்று மேற்கு மண்டபம். இணைக்கப்பட்டது. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மைய மண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை[தொகு]

1950 ல் உருவாக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியுடன் ஏழு கீழ் தகுதி பெற்ற நீதிபதிகளைக் கொண்டு இயங்கியது.

பாராளுமன்றத்தின்ஏற்படுத்தப்பெற்ற தீர்மானத்தின்படி ஆண்டுகளின் வரிசையில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை.

அமர்வு[தொகு]

சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது.

இந்திய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது.

தேர்வு குழு[தொகு]

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையை மத்திய அரசு பழைய முறையை விட்டு புதிதாக கொலீஜியம் என்ற ஒரு முறையை 13 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2014 ஆம் ஆண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் கொண்டு வந்தது. ஆனால் அந்த முறையை இந்திய உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது [5]

ஒய்வு[தொகு]

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்[தொகு]

இவர்களின் தகுதியாவன: இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.

பெண் நீதிபதிகள்[தொகு]

முதல் பெண் நீதிபதியாக எம். பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர். நீதிபதி பாத்திமா பீவி ஓய்வு பெற்ற பிறகு அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்

‘‘பெண்களுக்கு இதுநாள் வரை மூடப்பட்ட கதவை நான் திறந்தவளானேன்’’

என்று கூறியிருந்தார்.

2023 இல் உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில் மூவர் மட்டுமே பெண்கள். உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 256 பேரில் 11 பேர் மட்டுமே பெண்கள் (4.2%).[6]

முதல் தலித் நீதிபதி[தொகு]

மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்தான் 2000 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பதவி வகித்த முதல் தலித் சமூகத்தவர்.

முதல் தலித் தலைமை நீதிபதி[தொகு]

2007 முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன், முதல் தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையும் கொண்டவர்.

தலைமை நீதிபதி பதவி வகிக்காமல் சட்ட ஆணையத் தலைவர்களாக பதவி ஏற்றவர்கள்[தொகு]

முதன் முறையாக நீதியரசர் பி.பி. ஜூவன் ரெட்டி மற்றும் ஏ.ஆர்.இலட்சுமணன் இருவரும் தலைமை நீதிபதி பதவி வகிக்காமலேயே சட்ட ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்[தொகு]

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[7] இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

நடுவண் அரசு வழக்குரைஞர்[தொகு]

இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.

தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி [8]. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார்.

நீதிபரிபாலனம்[தொகு]

உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபரிபாலனங்களைக் கையாள்கின்றது. மூல நீதிபரிபாலனம், மேல்முறையீட்டு நீதிபரிபாலனம் மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலனம்.

மூல நீதிபரிபாலனம்[தொகு]

இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது.

அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) , தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலனத்தைக் கொண்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிபரிபாலனம்[தொகு]

உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துரைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலனத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது.

ஆலோசனைக்குழு நீதிபரிபாலனம்[தொகு]

இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலனத்தைப் பெற்றுள்ளது.

தன்னாட்சி பெற்ற நீதிமன்றம்[தொகு]

இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு பலவழிகளில் தன்னாட்சி செயல்திறனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டப்பின், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பெறும் பட்சத்தில், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றின் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து வெற்றிபெற்ற தீர்மானத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பெறும் ஆணையைத்தவிர , வேறு எவராலும் அவரை பதவியிலிருந்து நீக்கவியலாது. இது அவரின் நன்னடத்தையின்மை அல்லது செயலின்மையை நிருபிக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

அவரின் ஊதியமும், படிகளும் பதவி நியமனத்திற்குப்பின் எவ்வகையிலும் குறைக்கப்படாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டப்பின் அவர் வேறு எந்த நீதிமன்றத்திலும், எவ்வகையிலும் பணியாற்ற அனுமதியில்லை.

உச்ச நீதிமன்ற வரலாற்றுத் தீர்ப்புக்கள[தொகு]

நிலச்சீர்த்திருத்த சட்டம் 9 (முந்தைய அணுகுமுறை)[தொகு]

பல மாநில கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் உந்துதலால் உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலச்சுவான்தார்களின் (ஜமீன்தார்) நிலங்களைப் பங்கீடுவது தொடர்பான வழக்கு, நிலச்சுவான்தாரர்களின் (ஜமீன்தாரர்களின்) அடிப்படை உரிமைகளைப் பரிப்பதாகும் என்ற மேல்முறையீட்டீனால், நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்பில் , 1951 இல் மேற்கொண்ட தன் முதல் திருத்தச் சட்டத்தினைத் தொடர்ந்து 1955 இல் நான்காவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை உரிமைகளில் நிறைவேற்றி அமல் படுத்தியது.

இத்திருத்தச் சட்டத்தினை 1967 இல் உச்ச நீதிமன்றம் கோக்குல்நாத் எதிர் பஞ்சாப் பரணிடப்பட்டது 2012-07-18 at the வந்தவழி இயந்திரம் மாநிலம் என்ற வழக்கின் மூலம் எதிர் கொண்டு,

:
நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளை இரத்து செய்ய அதிகாரமில்லை, அது தனியார் உடமைகளுக்கும், உரிமையாளருக்கும், இந்தியக் குடியரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும்

என்ற வரலாற்றுத் தீர்ப்பீனை வழங்கியது.

அரசியலமைப்புக்கு எதிரானவையாக உச்ச நீதிமன்றம் கருதிய ஏனைய சட்டங்கள்[தொகு]

  • பிப்ரவரி 1, 1970, அன்று உச்ச நீதிமன்றம் செல்லாததாக்குகின்ற சட்டமாக, அரசு உதவி பெறும் வங்கிகளை தேசியமயமாக்குகின்ற சட்டம் நாடளுமன்றத்தால் ஆகஸ்டு, 1969, இல் நிறைவேற்றியபின் இத்தீர்ப்பினை வழங்கி செல்லாத சட்டமாக்கியது.
  • செப்டம்பர் 7, 1970, இல் வழங்கிய குடியரசுத் தலைவரின் பெயரில் வழங்கிய ஆணையான, இந்தியாவின் முந்தைய (பிரித்தானிய) ஆட்சியில் பேரரசு இளவரசரின் பெயரால் வழங்கப்பெற்ற பட்டயம், சலுகைகள், பரிசுகளை இரத்து செய்யும் ஆணையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த்து.

நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டணையளிக்கும் அதிகாரம்[தொகு]

அரசியல் விதி 129 மற்றும் 142 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி நீதிமன்றத்தை அவமதிப்பவர் எவராயினும் , அவரை தண்டிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக்[9] முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12, 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார்.

நீதிபதிகளின் நன்னடத்தையின்மை மற்றும் ஒழுக்கக்கேடு[தொகு]

இந்தியாவின் உயரிய நீதிமுறைமை ,[10][11][12][13][14][15][16][17][18][19][20][21][22][23][24][25][26][27] 2008,ஆம் ஆண்டு சந்திதித்த மிக முக்கிய சர்ச்சையாக நீதிபதிகளின் அதீத ஒழுக்கக்குறைபாடுகளை விடுமூறைக் காலங்களில் வரி செலுத்துவோருக்கு[28] இணையாக அவர்கள் செய்திடும் செலவீனங்கள் மூலம், வெளிப்படுத்தியதின் காரணமாகவும், இதன் காரணமாக நீதிபதிகளின் சொத்துக்கணக்கை பொதுமக்களின் பார்வைக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தும் கோரிக்கையை அது தகவல் அறியும் உரிமைச் சட்டமாக[29][30][31][32][33] இருப்பினும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த்தின் காரணமாக வெளிப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தன் பதவி குறித்து வெளிப்படுத்தியக் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன. அவர் வெளியிட்டக் கருத்துக்களாவன

:
நீதிபதி என்பவர் பொது ஊழியரல்லர் [34] அவர் ஒரு அரசியலமைப்பின் பொறுப்பாளர். பின்னர் தான் வெளிப்படுத்தியக் கருத்திலிருந்து விலகிக் கொண்டார்[35].

நீதிமுறைமை கடமைத் தவறியனவாக[36] தற்பொழுதய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலாலும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமினாலும் பலத்த விமர்சனத்துக்குள்ளானது.

பிரதமர் மன்மோகன் சிங் ஒழுக்கக்கேடுகளை (ஊழல்) எதிர் கொள்வதிலும், அவற்றை அடியோடு அழிக்க நீதிமுறைமைகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்[37]

பதவி இறக்க[தொகு]

உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

தேசிய நீதிபரிபாலன மன்றம்[தொகு]

இந்திய அமைச்சரவை நீதிபதிகளை விசாரணை செய்யும் மசோதா 2008 நாடாளுமன்றத்தின் மூலம் அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதியை தலமையாகக் கொண்டு தேசிய நீதித்துறைமை மன்றம் அ தேசிய நீதிபரிபாலன மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தது. இம்மன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முறைகேடுகள் மற்றும் நன்னடத்தையின்மையை விசாரிக்கும் பொருட்டு இம்மசோதா உருவாக்கப்பட்டது. இம்மசோதா மக்கள் நகைப்புக்குரியதாக இருப்பினும் மக்களின் அமைதியை உருவாக்கும் நோக்கில் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இம்மசோதாவின் படி அமைக்கப்பட்ட நீதிபதிகளின் குழு நீதிபதிகளின் செயல் குறித்து விசாரணை செய்யும். தலைமை நீதிபதியையோ அல்லது ஒய்வுபெற்ற நீதிபதியையோ, மற்றும் தண்டணைக்குள்ளானவரின் புகார்கள், அபராதம் விதிக்க பட்டோரரின் புகார்கள் இம்மன்றத்தை கட்டுபடுத்தாது. மேலும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அற்பத்தனமான மற்றும் அவரின் நேர்மையை களங்கப்படுத்தும் நோக்கில் தரப்படும் புகார்கள் ஏற்கபடமாட்டா.

மூத்த நீதிபதிகள்[தொகு]

உச்ச நீதிமன்ற அமர்வு , நீதியரசர் பி.என். அகர்வால், நீதியரசர் வீ.எஸ்.சிர்புர்கர் மற்றும் நீதியரசர் ஜி.சிங்வி
நாங்கள் எந்த நீதிபதியும் ஊழல் புரிவதில்லை, என்று சான்றளிக்கவில்லை. கருப்பு ஆடுகள் எங்கெங்கும் உள்ளன. இங்குள்ளப் படிநிலையில் எழுந்தது இக் கேள்வி
-உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்[38][39]

மூத்த அரசு அலுவலர்கள்[தொகு]

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்,ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
காலந்தாழ்ந்த வழக்குகளின் நீட்சியால், மக்கள், நீதித்துறைமைக்கு அப்பாற்பட்ட செயல்களை மேற்கொள்ள வழிவகுக்கும்
-ஏ.பி.ஜே.அப்துல்கலாம்[40]
* முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், பிரதீபா பாட்டீல்: நீதிமுறைமையின் சீர்திருத்தங்கள் என்றத் தலைப்புடைய கருத்தரங்கில்[36] :
காலந்தாழ்ந்த நீதியினால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுருத்தலையும், சட்டமுறைப்படா (சட்டத்திற்கு கட்டுப்படாத) குழுவினரை ஊக்குவிப்பதற்கு நீதிமன்றம் இடமளிக்கின்றது, என்கின்ற பழிச்சொல்லிருந்து நீதிமுறைமைகள் தப்பித்துக்கொள்ள முடியாது. நீதிமுறைமைகளின் இயந்திரங்கள் தங்களையே உள்ளாய்வு செய்வதினால் அனைவரும் எதிர்பார்க்கும் முழுமையான நீதியையும், உண்மை, பற்றுறுதி, நம்பிக்கை இவைகளை நிலைநிறுத்தும் விதமாக, மக்களுக்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்கமாக நீதிமன்றங்கள் திகழ்கின்ற காலம் வந்துவிடும். மறுப்புக்கிடமின்றி நீதிமறைமைகளின் செயல் திறம், தரம் குறைந்தனவாகவும் , கறைபடிந்தனவாகவும் உள்ளன.
-பிரதீபா பாட்டீல்

அமர்வு நீதிபதிகள்[தொகு]

SC Logo correct.png

[41][42]

எண். படம் பெயர் பாலினம் நியமனம் தேதி அன்று தலைமை நீதிபதி ஆகிறார் ஓய்வு பெறும் தேதி பதவிக்காலம் தலைமை நீதிபதியாக பதவிக்காலம் பெற்றோர் உயர் நீதிமன்றம்
1
தனஞ்சய ஒய்.சந்திரசூட் ஆண் 13 மே 2016(6 ஆண்டுகள், 312 நாட்கள்) 9 நவம்பர் 2022(0 ஆண்டுகள், 132 நாட்கள்) 10 நவம்பர் 2024(−1 ஆண்டுகள், 131 நாட்கள்) 8 ஆண்டுகள், 181 நாட்கள் 2 ஆண்டுகள், 1 நாள் பம்பாய்
2
சஞ்சய் கிஷன் கவுல் ஆண் 17 பெப்ரவரி 2017(6 ஆண்டுகள், 32 நாட்கள்) 25 திசம்பர் 2023(0 ஆண்டுகள், 86 நாட்கள்) 6 ஆண்டுகள், 311 நாட்கள் டெல்லி
3
எஸ்.அப்துல் நசீர் ஆண் 17 பெப்ரவரி 2017(6 ஆண்டுகள், 32 நாட்கள்) 4 சனவரி 2023(0 ஆண்டுகள், 76 நாட்கள்) 5 ஆண்டுகள், 321 நாட்கள் கர்நாடகா
4
கே.எம்.ஜோசப் ஆண் 7 ஆகத்து 2018(4 ஆண்டுகள், 226 நாட்கள்) 16 சூன் 2023(0 ஆண்டுகள், 278 நாட்கள்) 4 ஆண்டுகள், 313 நாட்கள் கேரளா
5
முகேஷ் ஷா ஆண் 2 நவம்பர் 2018(4 ஆண்டுகள், 139 நாட்கள்) 15 மே 2023(0 ஆண்டுகள், 310 நாட்கள்) 4 ஆண்டுகள், 194 நாட்கள் குஜராத்
6
அஜய் ரஸ்தோகி ஆண் 2 நவம்பர் 2018(4 ஆண்டுகள், 139 நாட்கள்) 17 சூன் 2023(0 ஆண்டுகள், 277 நாட்கள்) 4 ஆண்டுகள், 227 நாட்கள் ராஜஸ்தான்
7
தினேஷ் மகேஸ்வரி ஆண் 18 சனவரி 2019(4 ஆண்டுகள், 62 நாட்கள்) 14 மே 2023(0 ஆண்டுகள், 311 நாட்கள்) 4 ஆண்டுகள், 116 நாட்கள் ராஜஸ்தான்
8
சஞ்சீவ் கண்ணா ஆண் 18 சனவரி 2019(4 ஆண்டுகள், 62 நாட்கள்) 11 நவம்பர் 2024(−1 ஆண்டுகள், 130 நாட்கள்) 13 மே 2025(−2 ஆண்டுகள், 312 நாட்கள்) 6 ஆண்டுகள், 115 நாட்கள் 0 ஆண்டுகள், 183 நாட்கள் டெல்லி
9
பூஷன் ராமகிருஷ்ண கவாய் ஆண் 24 மே 2019(3 ஆண்டுகள், 301 நாட்கள்) 14 மே 2025(−2 ஆண்டுகள், 311 நாட்கள்) 23 நவம்பர் 2025(−2 ஆண்டுகள், 118 நாட்கள்) 6 ஆண்டுகள், 183 நாட்கள் 0 ஆண்டுகள், 193 நாட்கள் பம்பாய்
10
சூர்யா காந்த் ஆண் 24 மே 2019(3 ஆண்டுகள், 301 நாட்கள்) 24 நவம்பர் 2025(−2 ஆண்டுகள், 117 நாட்கள்) 9 பெப்ரவரி 2027(−3 ஆண்டுகள், 40 நாட்கள்) 7 ஆண்டுகள், 261 நாட்கள் 1 ஆண்டு, 77 நாட்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா
11
அனிருத்தா போஸ் ஆண் 24 மே 2019(3 ஆண்டுகள், 301 நாட்கள்) 10 ஏப்ரல் 2024(−1 ஆண்டுகள், 345 நாட்கள்) 4 ஆண்டுகள், 322 நாட்கள் கல்கத்தா
12
ஏ.எஸ்.போபண்ணா ஆண் 24 மே 2019(3 ஆண்டுகள், 301 நாட்கள்) 19 மே 2024(−1 ஆண்டுகள், 306 நாட்கள்) 4 ஆண்டுகள், 361 நாட்கள் கர்நாடகா
13
கிருஷ்ணா முராரி ஆண் 23 செப்டம்பர் 2019(3 ஆண்டுகள், 179 நாட்கள்) 8 சூலை 2023(0 ஆண்டுகள், 256 நாட்கள்) 3 ஆண்டுகள், 288 நாட்கள் அலகாபாத்
14
ஸ்ரீபதி ரவீந்திர பட் ஆண் 23 செப்டம்பர் 2019(3 ஆண்டுகள், 179 நாட்கள்) 20 அக்டோபர் 2023(0 ஆண்டுகள், 152 நாட்கள்) 4 ஆண்டுகள், 27 நாட்கள் டெல்லி
15
வி.ராமசுப்ரமணியன் ஆண் 23 செப்டம்பர் 2019(3 ஆண்டுகள், 179 நாட்கள்) 29 சூன் 2023(0 ஆண்டுகள், 265 நாட்கள்) 3 ஆண்டுகள், 279 நாட்கள் மெட்ராஸ்
16
ஹிருஷிகேஷ் ராய் ஆண் 23 செப்டம்பர் 2019(3 ஆண்டுகள், 179 நாட்கள்) 31 சனவரி 2025(−1 ஆண்டுகள், 49 நாட்கள்) 5 ஆண்டுகள், 130 நாட்கள் கௌஹாத்தி
17
எ.ஸ்.ஓகா ஆண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 24 மே 2025(−2 ஆண்டுகள், 301 நாட்கள்) 3 ஆண்டுகள், 266 நாட்கள் பம்பாய்
18
Hon'ble Justice Vikram Nath.jpg
விக்ரம் நாத் ஆண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 10 பெப்ரவரி 2027(−3 ஆண்டுகள், 39 நாட்கள்) 23 செப்டம்பர் 2027(−4 ஆண்டுகள், 179 நாட்கள்) 6 ஆண்டுகள், 23 நாட்கள் 0 ஆண்டுகள், 225 நாட்கள் அலகாபாத்
19
ஜிதேந்திர குமார் மகேஸ்வரி ஆண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 28 சூன் 2026(−3 ஆண்டுகள், 266 நாட்கள்) 4 ஆண்டுகள், 301 நாட்கள் மத்திய பிரதேசம்
20
ஹிமா கோஹ்லி பெண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 1 செப்டம்பர் 2024(−1 ஆண்டுகள், 201 நாட்கள்) 3 ஆண்டுகள், 1 நாள் டெல்லி
21
பி.வி.நாகரத்னா பெண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 24 செப்டம்பர் 2027(−4 ஆண்டுகள், 178 நாட்கள்) 29 அக்டோபர் 2027(−4 ஆண்டுகள், 143 நாட்கள்) 6 ஆண்டுகள், 59 நாட்கள் 0 ஆண்டுகள், 35 நாட்கள் கர்நாடகா
22
சி.டி.ரவிக்குமார் ஆண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 5 சனவரி 2025(−1 ஆண்டுகள், 75 நாட்கள்) 3 ஆண்டுகள், 127 நாட்கள் கேரளா
23
எம்.எம்.சுந்தரேஷ் ஆண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 20 சூலை 2027(−4 ஆண்டுகள், 244 நாட்கள்) 5 ஆண்டுகள், 323 நாட்கள் மெட்ராஸ்
24
பேலா திரிவேதி பெண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 9 சூன் 2025(−2 ஆண்டுகள், 285 நாட்கள்) 3 ஆண்டுகள், 282 நாட்கள் குஜராத்
25
பி.எஸ்.நரசிம்மா ஆண் 31 ஆகத்து 2021(1 ஆண்டு, 202 நாட்கள்) 30 அக்டோபர் 2027(−4 ஆண்டுகள், 142 நாட்கள்) 2 மே 2028(−5 ஆண்டுகள், 323 நாட்கள்) 6 ஆண்டுகள், 245 நாட்கள் 0 ஆண்டுகள், 185 நாட்கள் பார் கவுன்சில்
26
சுதன்ஷு துலியா ஆண் 9 மே 2022(0 ஆண்டுகள், 316 நாட்கள்) 9 ஆகத்து 2025(−2 ஆண்டுகள், 224 நாட்கள்) 3 ஆண்டுகள், 92 நாட்கள் உத்தரகாண்ட்
27
ஜாம்ஷெட் பர்ஜோர் பார்திவாலா ஆண் 9 மே 2022(0 ஆண்டுகள், 316 நாட்கள்) 3 மே 2028(−5 ஆண்டுகள், 322 நாட்கள்) 11 ஆகத்து 2030(−7 ஆண்டுகள், 222 நாட்கள்) 8 ஆண்டுகள், 94 நாட்கள் 2 ஆண்டுகள், 100 நாட்கள் குஜராத்

இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்[தொகு]

இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்[43]
வ.எண் படம் முன்னாள் தலைமை நீதிபதிகள்
1 Justice H. J. Kania.jpg நீதியரசர் எச். ஜே. கனியா
2 Justice M. Patanjali Sastri.jpg நீதியரசர் எம். பி. சாஸ்திரி
3 Justice Mehr Chand Mahajan.jpg நீதியரசர் மெர் சந்த் மகாஜன்
4 Justice Bijan Kumar Mukherjea.jpg நீதியரசர் பி. கே. முகர்ஜி
5 Justice Sudhi Ranjan Das.jpg நீதியரசர் சுதி இரஞ்சன் தாஸ்
6 Justice Bhuvneshwar Prasad Sinha.jpg நீதியரசர் புவனேஸ்வர் பிரசாத் சின்கா
7 Justice P.B. Gajendragadkar.jpg நீதியரசர் பி. பி. கஜேந்திரகட்கர்
8 Justice A.K. Sarkar.jpg நீதியரசர் ஏ. கே. சர்க்கார்
9 Justice K. Subba Rao.jpg நீதியரசர் கே. சுப்பா ராவ்
10 Justice K.N. Wanchoo.jpg நீதியரசர் கே. என. வான்சூ
11 Justice M. Hidayatullah.jpg நீதியரசர் எம். இதயத்துல்லா
12 Justice J.C. Shah.jpg நீதியரசர் ஜே. சி. ஷா
13 Justice S.M. Sikri.jpg நீதியரசர் எஸ். எம். சிக்ரி
14 Justice A.N. Ray.jpg நீதியரசர் ஏ. என். ராய்
15 Justice M. Hameedullah Beg.jpg நீதியரசர் மிர்சா எமதுல்லா பேக்
16 Justice Y.V. Chandrachud.jpg நீதியரசர் ஒய். வி. சந்திரகுட்
17 Justice P.N. Bhagwati.jpg நீதியரசர் பி. என். பகவதி
18 Justice R.S. Pathak.jpg நீதியரசர் ஆர். எஸ். பதக்
19 Justice E.S. Venkataramiah.jpg நீதியரசர் இ. எஸ். வெங்கட்டராமய்யா
20 Justice Sabyasachi Mukherjee.jpg நீதியரசர் எஸ். முகர்ஜி
21 Justice Ranganath Misra.jpg நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா
22 Justice K.N. Singh.jpg நீதியரசர் கே.என். சிங்
23 Justice M.H. Kania.jpg நீதியரசர் எம். எச். கனியா
24 Justice L.M. Sharma.jpg நீதியரசர் எல். எம். சர்மா
25 Justice M.N. Venkatachaliah.jpg நீதியரசர் எம். என். வெங்கட்டசலய்யா
26 Justice A.M. Ahmadi.jpg நீதியரசர் ஏ. எம். அகமதி
27 Justice J.S. Verma.jpg நீதியரசர் ஜே. எஸ். வர்மா
28 Justice M.M. Punchhi.jpg நீதியரசர் எம். எம். பன்சி
29 Justice A.S. Anand.jpg நீதியரசர் ஏ. எஸ். ஆனந்
30 Justice S.P. Bharucha.jpg நீதியரசர் எஸ். பி. பரூச்சா
31 Justice B.N. Kirpal.jpg நீதியரசர் பி. என். கிர்பால்
32 Justice G.B. Pattanaik.jpg நீதியரசர் ஜி. பி. பட்நாயக்
33 Justice V.N. Khare.jpg நீதியரசர் வி.என். கரே
34 Justice S. Rajendra Babu, Judge of the Supreme Court of India who will take over as Chief Justice of India on May 2, 2004 as the Chief Justice of India.jpg நீதியரசர் இராஜேந்திர பாபு
35 Chief Justice of India Justice Ramesh Chandra Lahoti at his swearing-in ceremony (cropped).jpg நீதியரசர் ஆர். சி. லகோட்டி
36 Justice Y.K. Sabharwal.jpg நீதியரசர் ஒய்.கே. சபர்வால்
37 K. G. Balakrishnan.jpg நீதியரசர் கொ. கோ. பாலகிருஷ்ணன்
38 Justice S.H. Kapadia.jpg நீதியரசர் எஸ். எச். கபாடியா
39 Justice Altamas Kabir.jpg நீதியரசர் அல்தமஸ் கபீர்
40 Justice P. Sathasivam.jpg நீதியரசர் ப. சதாசிவம்
41 Justice R. M. Lodha.jpg நீதியரசர் ஆர். எம். லோதா
42 Justice H. L. Dattu BNC.jpg நீதியரசர் எச். எல். தத்து
43 Justice T. S. Thakur.jpg நீதியரசர் தி. சி. தாக்கூர்
44 Justice Jagdish Singh Khehar (cropped).jpg நீதியரசர் சகதீசு சிங் கேகர்
45 The Chief Justice of India, Justice Shri Dipak Misra during the 24th Foundation Day Function of the National Human Rights Commission (NHRC), in New Delhi on October 12, 2017 (cropped).jpg நீதியரசர் தீபக் மிசுரா
46 Hon'ble Justice Ranjan Gogoi.jpg நீதியரசர் ரஞ்சன் கோகோய்
47 Hon'ble Justice Sharad Arvind Bobde.jpg நீதியரசர் எஸ். ஏ. பாப்டே
48 Justice N.V. Ramana.jpg நீதியரசர் என். வி. இரமணா
49 Justice Uday Umesh Lalit.jpg நீதியரசர் யு. யு. லலித்
50 Dhananjaya Chandrachud updated picture (cropped).jpg நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

'

வெளி இணைப்புக்கள்[தொகு]

'