உள்ளடக்கத்துக்குச் செல்

தன்னாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்னாட்சி (autonomy) என்பது ஒரு முடிவைத் தாமாகவே முன்வந்து எடுக்கும் உரிமையுள்ள நிலையாகும் [1]. தன்னாட்சி உரிமை கொண்ட அமைப்புகள், நிறுவனங்கள் விடுதலையாகவும் தம் விருப்பத்திற்கேற்ப தம் முடிவுகளை இருக்கும் இயல்பு கொண்டவையாகவும் இருப்பதை பார்க்கலாம்.

சமூகவியல்[தொகு]

சமூகவியல் போன்ற துறைகளில் தன்னாட்சி என்பது முழு அளவில் இல்லாமல், ஒன்றைச் சார்ந்த அளவில் முழுமையற்ற உரிமையுள்ளதாகவே வரையறுக்கப் பட்டுள்ளது.


அரசியல்[தொகு]

அரசியல் பொருளில், தன்னாட்சி என்பது ஓர் அமைப்பு தம்மைத்தாமே ஆண்டுகொள்கின்ற உரிமை உள்ளதைக் குறிக்கும்.

மெய்யியல்[தொகு]

மெய்யியல் (philosophy) துறையில், தன்னாட்சி என்பது மிக இன்றியமையாத, பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கோட்பாடாகப் பயன்படுத்தப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, ஒழுக்கவியல் மெய்யியல் (moral philosophy) துறையில், தன்னாட்சி என்பது ஒருவர் தன்னை நல்லொழுக்கக் கோட்பாடுகட்கு உட்படுத்திக் கொள்வதைக் குறிக்கும்.

சமயம்[தொகு]

கிறித்துவ சமயத்தில், தன்னாட்சி என்பது அரை-குறையான ஆட்சி முறையைக் குறிக்கும்.

பொறியனியல்[தொகு]

பொறியனியல் (robotics) துறையில், தன்னாட்சி என்பது ஒரு பொறியன் (robot) மனிதர் துணையின்றி தானே பல செயல்களை செய்து முடிக்கும் திறனைக் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ancient Greek: αὐτονομία autonomia from αὐτόνομος autonomos from αὐτο- auto- "self" and νόμος nomos, "law", hence when combined understood to mean "one who gives oneself one's own law"
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னாட்சி&oldid=2987075" இலிருந்து மீள்விக்கப்பட்டது