பேச்சு:இந்திய உச்ச நீதிமன்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய உச்ச நீதிமன்றம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திய உச்ச நீதிமன்றம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வழக்குரஞர் நண்பர்கள் இதன் சட்டப்பிரிவு மற்றும் தமிழ் சட்டப்பெயர்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்து தொகுக்கவும். மேலும் நீங்களும் தொகுப்பைத் தொடருங்கள் நானும் அவ்வப்பொழுது தொடர்கின்றேன்.--செல்வம் தமிழ் 08:54, 5 மார்ச் 2009 (UTC)

நல்ல கட்டுரை செல்வம். நன்றி.மயூரநாதன் 05:25, 6 மார்ச் 2009 (UTC)

தவறான தகவலை நீக்கியுள்ளேன்[தொகு]

நீதியரசர் பி பி ஜீவன் ரெட்டி மற்றும் நீதியரசர் ஏ ஆர் லட்சுமணன், இவர்களை சட்ட ஆணையம் பரிந்துரைத்தும் தலைமை நீதிபதி பதவி கிட்டவில்லை. இத்தகவல் தவறானது. மேலும் இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் தலித் தலைமை நீதிபதிகள் என்ற தலைப்பின் கீழிருந்து நீக்கியுள்ளேன். ஆங்கில விக்கியில் இவர்கள் மட்டுமே தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமலேயே சட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் என்று கூறுகிறது. -- சுந்தர் \பேச்சு 03:28, 21 ஏப்ரல் 2009 (UTC)

அதை அங்கேயே மாற்றிக் கொடுத்திருக்கலாமே. இங்கு கொடுப்பதால் என்ன பயன்.--செல்வம் தமிழ் 10:28, 22 ஏப்ரல் 2009 (UTC)
அங்கே மாற்றியுள்ளேன் தமிழ் செல்வம். இதுபோன்ற பெரிய மாற்றங்கள் செய்யும்போது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுவதுண்டு. இதனால் மாற்றத்துக்கான காரணம் தெளிவாகும். எவரேனும் தவறான மாற்றம் என்று கருதினால் இந்த விளக்கத்தைப் பார்த்து தெளிவடைவர். -- சுந்தர் \பேச்சு 11:19, 22 ஏப்ரல் 2009 (UTC)

பார்த்தேன் , மிக்க நன்றி.--செல்வம் தமிழ் 04:08, 28 ஏப்ரல் 2009 (UTC)

பகுதிகள் நீக்கப் பரிந்துரை[தொகு]

அமர்வு நீதிபதிகள் பகுதியையும் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பகுதியையும் நீக்கிவிடலாமா? இந்தத் தகவல்கள் தனிக்கட்டுரையாக உள்ளன. அக்கட்டுரைகள் இவற்றையும் பார்க்கவும் பகுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. --சத்தியராஜ் (பேச்சு) 05:46, 24 மே 2023 (UTC)[பதிலளி]

தனியாக உள்ள கட்டுரைகளை சான்றுகளுடன் இற்றைப்படுத்த வேண்டும். அதன் பிறகு அங்குள்ள கட்டுரைகளின் முதல் பத்தியை இங்கிட்டு, இங்குள்ள அட்டவணையை ஒப்பிட்டு சரிபார்த்து நீக்க பரிந்துரை செய்கிறேன். உழவன் (உரை) 03:29, 25 மே 2023 (UTC)[பதிலளி]