ரூமா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதிபதி ரூமா பால் (Ruma Pal) (பிறப்பு 3 ஜூன் 1941) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக 3 ஜூன் 2006 வரை பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆக்சுபோர்டில் உள்ள புனித அன்னாள் கல்லூரியில் பி.சி.எல் பட்டப்படிப்பைப் படித்த அவர், 1968 இல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிவில், வருவாய், தொழிலாளர் மற்றும் அரசியலமைப்பு விசயங்களுக்கான வழக்குரைஞர் பயிற்சியைத் தொடங்கினார். அவரது கணவர் சமராதித்யா பால் கொல்கத்தாவின் புகழ் பெற்ற வழக்குரைஞர் ஆவார்.

தொழில்[தொகு]

புகழ்பெற்ற வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியப் பிறகு, 1990 ஆகஸ்ட் 6 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தின் பொன்விழாவின் நாளான ஜனவரி 28, 2000 அன்று அவர் இந்திய உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். நீதிபதி பால் பிரபலமான வழக்குகளில் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவர் பல மனித உரிமை பிரச்சினைகள் குறித்து எழுதியுள்ளார். அவர் சர்வதேச பெண்கள் நீதிபதிகள் மன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

பால் அவர்கள் சட்ட படிப்புக்கான பல பாட புத்தகங்களைத் திருத்தியுள்ளார், அதில் மிக முக்கியமானது பேராசிரியர் எம். பி ஜெயின் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த புகழ்பெற்ற புத்தகமும் ஒன்றாகும், இது, பால் அவர்களுக்கு ஒரு அங்கிகாரமாகக் கருதப்படுகிறது. அவர் சிக்கிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், சட்ட வேறுபாட்டின் இலாப நோக்கற்ற அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவராகவும் ஆனார்,[1] இத்தகைய அணுகு முறைகளை அவர் அதிகரித்ததின் மூலம் அவரின்  பன்முகத்தன்மையை அதிகரிப்பதாக அமைந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூமா_பால்&oldid=3841971" இருந்து மீள்விக்கப்பட்டது