நீதிபதிகள் தேர்வுக் குழு
நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே.
தேர்வுக் குழுவின் அதிகாரம்
[தொகு]இந்திய உச்சநீதிமன்றத்திற்கு ஒரு புதிய நீதிபதியை தேர்ந்தெடுக்கும்போது, அந்த நீதிபதி பணியாற்றிய உயர்நீதிமன்றத்தைச் சார்ந்தவரும் மற்றும் தன்னுடன் பணியாற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தைத் தலைமை நீதிபதி கேட்டறிவதுடன், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோரின் கருத்துகளையும் கேட்டறிவார்.
நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் நபரை நீதிபதியாக நியமிக்கும்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கு (அரசுக்கு) தெரிவிப்பார். உச்சநீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைக்கும் யாரையாவது அரசு ஏற்கவில்லை எனில், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம்தான் உள்ளது என "நீதிபதிகள் தேர்வுக் குழு” எடுத்துரைக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்
[தொகு]"நீதிபதிகள் தேர்வுக் குழு” முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும், தேர்வு ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது என்பதால், அதில் உள்ள குறைகளை களையவே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்ட வரைவு, 2014 தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது, இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 13-08-2014 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.[1]. [2]
தடை
[தொகு]மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத் திட்டத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் 2015 அக்டோபர் மாதம் தடைவிதித்தது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dinamani.com/india/2014/08/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article2379155.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
- ↑ [1] தி இந்து தமிழ் பார்த்த நாள் 19 அக்டோபர் 2015
வெளி இணைப்புகள்
[தொகு]- நீதிபதிகள் நியமன ஆணையம் – III
- நீதிபதிகள் நியமன ஆணையம் - IV
- நீதிபதிகள் தேர்வு முறை ரத்துக்கு எதிர்ப்பு:சுப்ரீம் கோர்ட்டில் 25-ல் விசாரணை
- நீதிபதிகள் நியமன மசோதா எதிர்ப்பு மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு