குறிக்கோளுரை

குறிக்கோளுரை (இத்தாலியம் :motto) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும்.[1][2] இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை வாய்மையே வெல்லும் என்பதாகும்.[3]
இலக்கியம்[தொகு]
இலக்கிய உலகில், ஒவ்வொரு அத்தியாயம் அல்லது பகுதியின் முன்பும் அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கொப்ப ஒருவரி அல்லது கவிதையில் குறிக்கோளுரை இடும் வழக்கம் உண்டு.[4] காட்டாக, இராபர்ட் லூயி ஸடீவன்சன் எழுதிய Travels with a Donkey in the Cévennes நாவலில் ஒவ்வொரு அதிகாரத்தின் முன்னரும் குறிக்கோளுரை இடப்பட்டிருக்கும்.[5]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Motto". Merriam-Webster. http://www.merriam-webster.com/dictionary/motto. பார்த்த நாள்: 31 January 2011.
- ↑ "Motto". Oxford University Press இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110319015532/http://oxforddictionaries.com/view/entry/m_en_gb0537100. பார்த்த நாள்: 31 January 2011.
- ↑ இணையத்தில் தமிழ்நாடு அரசின் குறிக்கோளுரை குறித்த கட்டுரை
- ↑ "Webster's Revised Unabridged Dictionary (1913)". The ARTFL Project (The University of Chicago) இம் மூலத்தில் இருந்து 6 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131206194436/http://machaut.uchicago.edu/?resource=Webster%27s. பார்த்த நாள்: 20 December 2013.
- ↑ Stevenson, Robert Louis (1907). Travels with a Donkey in the Cevennes. London: Chatto & Windus. http://www.gutenberg.org/files/535/535-h/535-h.htm.