அயோத்தி மசூதி, தன்னிபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்தி மசூதி, தன்னிபூர்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தன்னிபூர், சோகாவல் வட்டம், அயோத்தி மாவட்டம், உத்தரப் பிரதேசம்
சமயம்இசுலாம்
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுடிசம்பர் 2023

அயோத்தி மசூதி (Ayodhya Mosque) என்பது உத்தரபிரதேசத்தின் அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் மசூதியாகும். மசூதி மற்றும் அதனுடன் தொடர்புடைய வளாகத்தின் கட்டுமானப் பணியானது இந்தோ-இசுலாமிய கலாச்சார அறக்கட்டளை (ஐ.ஐ.சி.எஃப்) நிறுவனத்தின் கீழ் உள்ளது. [1] [2] தன்னிபூர் மசூதிக்கான இடமானது அயோத்தியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் சோகாவல் வட்டத்திலுள்ள தன்னிபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. [3]

இதன் கட்டுமானம் 26 ஜனவரி 2021 இல் தொடங்கியது. மசூதிக்கு 1857 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போரில் கலந்து கொண்ட தலைவர்களில் ஒருவரான மவுலவி அகமதுல்லா ஷாவிற்கு கெளரவப்படுத்தும் விதத்தில் அகமதுல்லா ஷா மசூதி என்று அதிகார பூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. [4]

அமைவிடம்[தொகு]

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் சோகாவல் வட்டத்தில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் இப்புதிய மசூதி டிசம்பர் 2020 ஆண்டு முதல் மசூதி கட்டப்பட்டு வருகிறது. கட்டப்படும் இப்புதிய மசூதி அயோத்தியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கட்டுமானம்[தொகு]

இந்த திட்டத்தின் கட்டுமானமானது உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தால் 2021 குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு முறையாக தொடங்கியது. மசூதி வளாகத்தில் 2000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை செய்யும் அரங்கம், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, நூலகம், 2000 பேர் உணவருந்தும் உணவுக்கூடம் மற்றும் இந்தோ-இசுலாமிய கலாச்சார ஆராய்ச்சி மையம் மற்றும் நூல் வெளியீட்டு மாளிகை ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. [5]இப்புதிய கட்டுமானம் டிசம்பர் 2023ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[6][7]

சர்ச்சை[தொகு]

மசூதி கட்டுவது வக்ஃப் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஷரியத் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. [8] இசுலாமிய கொள்கைகளின்படி மசூதியில் கட்டுமானம் மற்றும் பிரார்த்தனைக்கு பணம் நன்கொடை அளிப்பது ஹராம் (தடைசெய்யப்பட்டுள்ளது) என்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார், அதற்கு மசூதி அறக்கட்டளை "மனிதகுலத்திற்கு சேவை செய்வது ஹராம் அல்ல" என்று பதிலளித்தது. [9]

உரிமையாளர் தகராறு[தொகு]

டெல்லியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மசூதி கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 28 ஏக்கர் இடம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த இடம் பாகப்பிரிவினையின் போது தங்கள் தந்தைக்கு வழங்கப்பட்ட இடம் என்று உரிமை கோரியுள்ளனர். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Razak, Hanie Abdul (2021-01-19). "Construction of Ayodhya mosque to begin with flag-hoisting on Republic Day". The Siasat Daily (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  2. "Ayodhya Mosque Work Starts On Republic Day With Tricolour Hoisting". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  3. "Dhannipur near Ayodhya already has 15 mosques, local Muslims want hospital and college too".
  4. "Ahmadullah Shah: Ayodhya Mosque to be named after the maulana who died for India's Independence". The Times of India (in ஆங்கிலம்). 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  5. "Ayodhya's Dhannipur mosque project launched with unfurling of tricolour on Republic day". https://www.hindustantimes.com/india-news/ayodhyas-dhannipur-mosque-project-launched-with-unfurling-of-tricolour-on-rday-101611667926019.html. 
  6. Construction of Ayodhya mosque likely to be completed by December 2023
  7. அயோத்தி மசூதி கட்டுமான பணி 2023ல் முடிவடையும்
  8. "Ayodhya mosque against Waqf Act, illegal under Shariyat law: AIMPLB". https://www.hindustantimes.com/india-news/ayodhya-mosque-against-waqf-act-illegal-under-shariyat-law-aimplb/story-0QrFb4aJkLrQA8HwjzkceJ.html. 
  9. "Contributing for construction and prayers at masjid in Ayodhya is haraam: Owaisi". https://www.deccanchronicle.com/nation/politics/270121/contributing-for-construction-and-prayers-at-masjid-in-ayodhya-is-h.html. 
  10. "Delhi siblings claim ownership of land offered for Ayodhya mosque, move court". https://www.thehindu.com/news/national/delhi-siblings-claim-ownership-of-land-offered-for-ayodhya-mosque-move-court/article33746388.ece/amp/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_மசூதி,_தன்னிபூர்&oldid=3616653" இலிருந்து மீள்விக்கப்பட்டது