2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு | |
---|---|
வார்ப்புரு:Infobox court case/images | |
நீதிமன்றம் | இந்திய உச்ச நீதிமன்றம் |
வழக்கின் முழுப்பெயர் | எம். சித்திக் எதிர் மகந்த் சுரேஷ் தாஸ் & பிறர் |
தீர்ப்பு நாள் | நவம்பர் 9, 2019 |
Citation(s) | [1][2] |
Case history | |
Appealed from | அலகாபாத் உயர் நீதிமன்றம் |
Appealed to | இந்திய உச்ச நீதிமன்றம் |
Court membership | |
Judges sitting | ரஞ்சன் கோகோய், தனஞ்செயன் ஒய். சந்திரசூட், சரத் அரவிந்த் போப்டே, எஸ், அப்துல் நசீர், அசோக் பூசன் |
Concurrence | 5 |
Dissent | இல்லை; ஒருமனதான தீர்ப்பு |
2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்லாண்டுகளாக நிலவி வந்த இந்து - முஸ்லீம்களிடையே நடைபெற்ற அயோத்தி சிக்கல் வழக்கினை, 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு ஒருமனதாக தீர்ப்பு வழங்கி முடித்து வைத்தனர்.[3] இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, இந்திய அரசால் புதிதாக நிறுவப்படும் அறக்கட்டளையிடம் வழங்கியும், அந்நிலத்தில் (ராம ஜென்ம பூமியில்) குழந்தை இராமர் கோயில் கட்டவும் உத்தரவு இட்டுள்ளது. மேலும் அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு கட்டிடங்கள் கட்டிக் கொள்ள, ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு விலையின்றி உத்தரப் பிரதேச வக்ப் வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது.
பின்னணி[தொகு]
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு[தொகு]
6 டிசம்பர் 1992 அன்று சங்பரிவார் அமைப்புகள் ஒன்று கூடி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி மீது எழுப்பியதாக கருதப்பட்ட பாபர் மசூதியை இடித்தனர். பின்னர் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சீல் வைத்தனர். சர்ச்சைக்குரிய இந்நிலத்திற்கு உரிமை கோரி இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அலகாபாத் உயர் நீதிமன்றம் 30 செப்டம் 2010 அன்று, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சரிபகுதிகளாகப் பிரித்தனர். ஒரு பகுதி குழந்தை இராமருக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாராவிற்கும், மூன்றாவது பகுதி சன்னி வக்பு குழுவுக்கும், பிரித்து வழங்கித் தீர்ப்பளித்தனர்.
மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தில், இந்துக்களில் சமய நம்பிக்கைகளின் படி, குழந்தை இராமர் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் குழந்தை இராமர் கோயிலை இடித்து விட்டு பின்னர் அதன் மீது, பாபர் மசூதி கட்டப்பட்டது என்றும், மேலும் பாபர் மசூதி, இசுலாமிய மசூதிக் கட்டிடக் கலை விதிகளின் கட்டப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.[4][5]
வழக்கின் தலைப்புகள்[தொகு]
1950-இல் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபட உத்தரவைக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கோபால் சிங் விசாரத் என்பவர் வழக்கு தொடுத்தார். 1953-இல் நிர்மோகி அகாரா என்ற இந்துத் துறவியர் அமைப்பு[6] சர்ச்சைக்குரிய நிலதிற்கு தங்களிடம் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மூன்றாதவாக உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம், சர்ச்சைக்குரிய நிலத்தை தங்களிடம் ஒப்படைகக் கோரி வழக்கு தொடுத்தனர்.
அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கை 2002 முதல் 2010 வரை விசாரித்தனர். 30 செப்டம்பர் 2010-இல் முன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, வழக்கு தொடுத்த அமைப்புகளுக்கு மூன்றில் ஒரு பங்கு வீதம் பிரித்து வழங்கினர்.
சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை குழந்தை இராமர் கோயிலுக்கும், ஒரு பகுதியை நிர்மோகி அகாராவிற்கும், மற்றொரு பகுதியை சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்கித் தீர்ப்பளித்தனர்.[7][8] அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேற்படி மூன்று குழுக்குளும் உச்ச நீதிமனறத்தில் மேல் முறையீடு செய்தனர்.[9][10]
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலச் சிக்கலுக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று தொடர்ந்து நாற்பது நாட்கள் விசாரனை செய்து, 6 ஆகஸ்டு 2019 அன்று இறுதி விசாரணையை முடித்துக் கொண்டு, தீர்ப்பை ஒத்து வைத்தது.[11] to 16 October 2019.[12] 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் அயோத்தி பிரச்சினைக்கு இறுதித் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் படி, சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில், இந்திய அரசு ஒரு அறக்கட்டளை நிறுவி, அதன் மூலம் அயோத்தியில் குழந்தை இராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு அரசு ஒதுக்கித் தர வேண்டும் என தீர்ப்பு கூறியது.[13]
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முந்தைய தடைகள்[தொகு]
அயோத்தி வழக்கில் 9 நவம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னரே, கலவரங்கள் நிகழாமல் இருக்க அயோத்தி முழுவதும் காவல் துறை தடையுத்தரவு அமல் படுத்தியது. துணை இராணுவப் படையினர் அயோத்தி முழுவதும் கண்காணித்தனர்.[14]
உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.[15][16] மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் கலவரம் ஏற்படும் என கணிக்கப்பட்ட 31 மாவட்டங்களையும், 673 தனிநபர்களையும் காவல் துறையினர் நெருக்கமாகக் கண்காணித்தனர்.[17] உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.[18]
மேலும் முக்கிய நகரங்களான பெங்களூர்,[19] போபால்[20] செய்ப்பூர்,[17] லக்னௌ, மற்றும் மும்பையிலும் காவல் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டது.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாளன்று ஜம்மு காஷ்மீர் ஒன்றியம் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் பொது விடுமுறை வழங்கப்பட்டது.[21]
தீர்ப்பின் சுருக்கம்[தொகு]
- 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, அயோத்தி வழக்கில் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினர்.[22][23] The judgement can be summarised as follows:[24][25][26][27]
- மூன்று மாத காலத்திற்குள் இந்திய அரசு ஒரு அறக்கட்டளையை நிறுவி, அவ்வமைப்பு மூலமாக குழந்தை இராமர் கோயில் கட்ட வேண்டும். மேலும் இந்திய அரசு சர்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.
- அயோத்தியில் இசுலாமியர்கள் தொழுகை நடத்த மசூதி கட்டுக் கொள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை இந்திய அரசு அயோத்தியில் ஒதுக்கி சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்க வேண்டும்
- அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 2010-இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியன்று என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
- பாபர் மசூதி இடிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும் தீர்ப்பு வழங்கியது.
- இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சர்ச்சைக்குரிய நிலத்தில் நடத்திய அகழாய்வுகளில் கண்டெடுத்த தொல் பொருட்கள் மூலம், இசுலாமியர் அல்லாத சமயத்தவரின் கட்டிட அமைப்பு மீது பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்ற கூற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
- ஏற்கனவே உள்ள ஒரு கட்டிடத்தின் கீழிருந்த ஒரு பண்டைய மத கட்டமைப்புகளை, நட்பற்ற சக்திகளால் இடிக்கப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதை தனது 1,045 பக்க தீர்ப்பில் விளக்கியுள்ளது. குறிக்கவில்லை.[28]
- சீக்கிய குருமார்களில் முதல் குருவான குருநானக், கிபி 1510 மற்றும் 1511 ஆண்டுகளில் அயோத்தி சென்று குழந்தை இராமரை வழிபட்டதை நீதிமன்றம் சுட்டிக்க்காட்டியது.
மேலும் 1857-இல் நிகாங் சீக்கியப் பிரிவினர் அயோத்தி பாபர் மசூதியில் உள்ள குழந்தை இராமரை வழிபட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.[29]
- சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தங்கள் முழு ஆதிக்கத்தை நிலைநாட்ட சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகள் தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
சர்சைக்குரிய பாபர் மசூதி வளாகத்தில், இராமர் பிறந்தார் என்ற மாறாத நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்துக்கள் குழந்தை இராமர் சிலையை நிறுவி வழிபட்டது முக்கிய ஆதாராமாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. பாபர் மசூதி வளாகத்தின், வெளிமுற்றப் பகுதியில் இராமர் சிலையை வைத்து வழிப்பட்ட பகுதிக்கும், உள்முற்றத்தில் தொழுகை நடத்தும் பகுதிக்கும் இடையே 1856-1857 ஆண்டுகளில் முஸ்லீம்கள் இரும்புத் தடுப்புகள் அமைத்து பிரித்தன் மூலம், பாபர் மசூதியின் உள்முற்றம் வரை இந்துக்கள் புழங்கியதாக விளங்குகிறது.
- இவ்வழக்கில் ஒரு மனுதாராரான நிர்மோகி அகாரா அமைப்பிற்கு, சர்ச்சைக்குரிய நிலத்தில் பங்கு உரிமை ஏதும் கிடையாது.[30] இருப்பினும், நிர்மோகி அகாரா அமைப்பினர் இராமர் கோயில் அறக்கட்டளையிடம் தனது முறையீட்டை எடுத்துரைக்கலாம்.
- சியா வக்பு வாரியத்தினர் பாபர் மசூதி வளாகத்தின் உரிமையை, சன்னி வக்பு வாரியத்திடமிருந்து தங்களிடம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்ப்பட்டது.
இத்தீர்ப்பின் மேல் முறையீடு குறித்த பதினெட்டு மனுக்கள் அனைத்தையும் 12 டிசம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[31]
உள்நாட்டில் எதிர்வினைகள்[தொகு]
ஆதரவு[தொகு]
சன்னி மத்திய வக்பு வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பை ஏற்பதாகவும், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை எனக்கூறிவிட்டனர்.[32] தில்லி ஜும்மா மசூதி இமாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது குறித்து வருங்காலங்களில் சர்ச்சைகள் நடைபெறக் கூடாது என்றார்.[33]
அரசியல் கட்சிகளின் ஆதரவுகள்[தொகு]
இந்தியாவில் பல பெரிய அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.[34] உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இந்தியாவின் பெரிய இரு சமயத்தினரிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமை நிலவும் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.[35] இத்தீர்ப்புக்கு ஆதரவளித்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி, நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் எனக்கேட்டுக் கொண்டது.[36] தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜரிவால், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்தியப் பிரதேச முதல் கமல்நாத், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.[37][38]
எதிர்ப்புகள்[தொகு]
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஊடகமாக நேசனல் ஹெரால்டு இதழ், தீர்ப்பை விமர்சனம் செய்து இரண்டு கட்டுரைகள் எழுதியது.[39][40][41] இவ்விமர்சனக் கட்டுரைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், ஹெரால்டு இதழின் நிர்வாகி மன்னிப்புக் கோரியதுடன், இதழிலிருந்து தீர்ப்பின் விமர்சனக் கட்டுரைகள் நீக்கப்பட்டது.[41][42]
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தீர்ப்பு தனக்கு திருப்தி தரவில்லை என்றும், உண்மையை விட, நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.[43]
பன்னாட்டு எதிர்விளைவுகள்[தொகு]
இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மூலம் பன்னாட்டு அரசுகளுக்கு தீர்ப்பு குறித்து விளக்கப்பட்டது.[44]
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சா முகமது குறைசி கர்த்தார்பூர் வழித்தடம் திறக்கப்படும் நாளில் தீர்ப்பு வெளியிட்டது குறித்து விமர்சனம் செய்தார்.[45]
இதனையும் காண்க[தொகு]
- காசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு
- பெருபாரி வழக்கு
- கோலக் நாத் வழக்கு
- கேசவாநந்த பாரதி வழக்கு
- ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
- அயோத்தி
- ராம ஜென்ம பூமி
- பாபர் மசூதி
- பாபர் மசூதி இடிப்பு
- குழந்தை இராமர் கோயில்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Archived copy" (PDF). 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 9 November 2019 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "Meet the five judges who delivered the Ayodhya verdict". The Economic Times. 2019-11-09. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/meet-the-five-judges-who-will-deliver-the-ayodhya-verdict-today/articleshow/71979670.cms.
- ↑ "Ayodhya verdict live updates: Supreme Court delivers judgement on Ram Mandir-Babri Masjid case". The Times of India (ஆங்கிலம்). 10 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ayodhya dispute: The complex legal history of India's holy site". BBC News. 16 October 2019. https://www.bbc.com/news/world-asia-india-50065277. பார்த்த நாள்: 16 October 2019.
- ↑ Gist of Judgements பரணிடப்பட்டது 17 ஆகத்து 2019 at the வந்தவழி இயந்திரம் by Justices S. U. Khan, Sudhir Agarwal and Dharam Veer Sharma, Allahabad High Court, 6 October 2010
- ↑ Muralidharan, Sukumar (12 April 2002). "Temple Interrupted". Frontline. Archived from the original on 30 September 2010. https://web.archive.org/web/20100930141742/http://www.hinduonnet.com/fline/fl1907/19070040.htm.
- ↑ "India holy site 'split between Hindus and Muslims'". BBC News. 30 September 2010. Archived from the original on 1 October 2010. https://web.archive.org/web/20101001042438/http://www.bbc.co.uk/news/world-south-asia-11441890.
- ↑ S. U. Khan; S. Agarwal; D. V. Sharma. "Decision of the hon'ble special full bench hearing Ayodhya matters". 27 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Court orders 3-way division of disputed Ayodhya land". The Hindu (Chennai, India). 30 September 2010. Archived from the original on 3 October 2010. https://web.archive.org/web/20101003104001/http://www.thehindu.com/news/national/article804632.ece?homepage=true.
- ↑ "Ayodhya Dispute Case Background". Supreme Court Observer. 6 January 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Ayodhya dispute: Supreme Court to commence day-to-day hearing today". Press Trust of India. 6 August 2019. https://www.indiatoday.in/india/story/ayodhya-dispute-supreme-court-hearing-ram-janmabhoomi-babri-masjid-1577628-2019-08-06.
- ↑ "Supreme Court hearing ends in Ayodhya dispute; orders reserved". The Hindu Business Line. Press Trust of India. 2019-10-16. 23 October 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-10-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ram Mandir verdict: Supreme Court verdict on Ram Janmabhoomi-Babri Masjid case". The Times of India. 2019-11-09. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ayodhya turned into a fortress ahead of Supreme Court Verdict". Asian News International (ஆங்கிலம்). 2019-11-09. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://timesofindia.indiatimes.com/city/lucknow/ahead-of-ayodhya-verdict-internet-shuts-down-in-uttar-pradesh-cities/articleshow/71979981.cms
- ↑ "Archived copy". 15 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 15 November 2019 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ 17.0 17.1 "Ayodhya Verdict: Internet Services Shutdown in Agra, Aligarh; 29 Districts Monitored". News18. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ayodhya verdict: Section 144 imposed across UP, all educational institutions ordered shut till Nov 11". DNA India (ஆங்கிலம்). 2019-11-08. 2019-11-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Prohibitory orders in Bengaluru; holiday for schools, colleges across Karnataka on Saturday". The Hindu. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kritika Bansal (2019-11-03). "Section 144 imposed in Bhopal ahead of Ayodhya verdict – India News". Indiatoday.in. 5 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ayodhya verdict: Schools, colleges shut in UP, MP, K'taka, J-K, Delhi; Sec 144 imposed – india news". Hindustan Times. 2019-10-21. 10 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Desk, The Hindu Net (2019-11-09). "Ayodhya verdict: as it happened | Temple at disputed site, alternative land for mosque, says Supreme Court" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/ayodhya-verdict-live-updates/article29929219.ece.
- ↑ "Indian top court gives Ayodhya holy site to Hindus" (in en-GB). British Broadcasting Corporation. 2019-11-09. https://www.bbc.com/news/world-asia-india-50355775.
- ↑ "Supreme Court's verdict on Ayodhya land dispute: 10 Key takeaways". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 November 2019. https://timesofindia.indiatimes.com/india/scs-verdict-on-ayodhya-land-dispute-key-takeaways/articleshow/71980491.cms.
- ↑ Desk, The Hindu Net (2019-11-09). "Highlights of the Ayodhya verdict" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/highlights-of-the-ayodhya-verdict/article29929685.ece.
- ↑ "Damage, desecration & demolition of Babri Masjid illegal acts, says SC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2019-11-10. 10 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Hindus made a better case, Waqf Board couldn't prove exclusive possession of Ayodhya site: SC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2019-11-10. 10 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Archived copy". 12 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 12 November 2019 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "How Guru Nanak played a 'role' in Ayodhya verdict", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11 November 2019, 11 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது, 12 November 2019 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "No regret over SC saying Nirmohi Akhara not 'shebait' of deity Ram Lalla: Outfit". The Times of India. 9 November 2019. https://timesofindia.indiatimes.com/india/no-regret-over-sc-saying-nirmohi-akhara-not-shebait-of-deity-ram-lalla-outfit/articleshow/71981069.cms.
- ↑ "Supreme Court Dismisses All Petitions Seeking Review Of Its Ayodhya Verdict". NDTV. 12 December 2019. 2019-12-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Humbly accept Ayodhya verdict, won't file any review petition: UP Sunni Central Waqf Board". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 November 2019. https://timesofindia.indiatimes.com/india/humbly-accept-ayodhya-verdict-wont-file-any-review-petition-up-sunni-central-waqf-board/articleshow/71984497.cms.
- ↑ "Supreme Court verdict on Ayodhya: Jama Masjid Shahi Imam says matter shouldn't be stretched further". The Economic Times. 2019-11-09. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/supreme-court-verdict-on-ayodhya-jama-masjid-shahi-imam-says-matter-shouldnt-be-stretched-further/articleshow/71984503.cms.
- ↑ Varma, Gyan (2019-11-09). "Ayodhya Verdict: Political Fallout". Mint (newspaper) (ஆங்கிலம்). 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "BJP hails Ayodhya verdict; says it will set the tone for peace and unity". The Hindu Business Line (ஆங்கிலம்). 9 November 2019. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Congress welcomes Ayodhya verdict, appeals for peace". Press Trust of India. 9 November 2019. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 November 2019 அன்று பார்க்கப்பட்டது – India Today வழியாக.
- ↑ "Ayodhya Verdict: Politicians Appeal For Peace After Big Judgement". NDTV. 2019-11-09. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SC Ayodhya verdict should be looked at without disagreement: MK Stalin". Asian News International (ஆங்கிலம்). 2019-11-09. 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Congress faces flak for National Herald article on Ayodhya judgement". The New Indian Express. 10 November 2019. 12 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Managed by Cong Leaders, Newspaper Compares Ayodhya Ruling to 'Actions of Pak SC'; Draws BJP's Ire". Press Trust of India. 2019-11-10. 11 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-17 அன்று பார்க்கப்பட்டது – News18 வழியாக.
- ↑ 41.0 41.1 "National Herald takes down controversial Ayodhya opinion after Congress faces backlash". The Print. 2019-11-10. https://theprint.in/india/national-herald-takes-down-controversial-ayodhya-opinion-after-congress-faces-backlash/319032/.
- ↑ "BJP slams Congress over National Herald article on Ayodhya verdict". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2019-11-10. https://timesofindia.indiatimes.com/india/bjp-slams-congress-over-national-herald-article-on-ayodhya-verdict/articleshow/71995925.cms.
- ↑ Mohammed, Syed (2019-11-09). "Supreme Court is supreme, not infallible: Owaisi" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/ayodhya-verdict-a-victory-of-faith-over-facts-owaisi/article29930772.ece.
- ↑ "MEA briefs diplomats of various countries on SC's Ayodhya verdict". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 November 2019. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "After 370, Foreign Minister of Islamic Republic of Pakistan whines about Ayodhya verdict". The Free Press Journal (ஆங்கிலம்). 9 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-11-09 அன்று பார்க்கப்பட்டது.