அயோத்தி இராமர் கோயில்

ஆள்கூறுகள்: 26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்தி இராமர் கோயில்
இராம ஜென்ம பூமி கோயில்
அயோத்தி இராமர் கோயில் is located in உத்தரப் பிரதேசம்
அயோத்தி இராமர் கோயில்
உத்தரப் பிரதேசம்-இல் உள்ள இடம்
அயோத்தி இராமர் கோயில் is located in இந்தியா
அயோத்தி இராமர் கோயில்
அயோத்தி இராமர் கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
அமைவு:ராம ஜென்ம பூமி, அயோத்தி
ஆள்கூறுகள்:26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
கட்டடக் கலைஞர்:சோமபுரா குடும்பம்[a]
கோயில் அறக்கட்டளை:ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
இணையதளம்:Shri Ram Janmbhoomi Teerth Kshetra

இராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமர், அயோத்தியில் பிறந்த இடமான ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயில் ஆகும்.[3] இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை நிர்வாகத்தில், 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தால் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 ஆகத்து 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் நிகழ்த்தப்பட்டது. கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் கருவறை மற்றும் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகள் இருக்கும்.[4]

வரலாறு[தொகு]

பின்னணி[தொகு]

இராமாயண காவியத்தின்படி, இராமர் அயோத்தியில் பிறந்தார். பொ.ஊ. 16ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி, இராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் இராம ஜென்ம பூமியின் தளத்தில் இருந்த குழந்தை இராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது.[5] இராம ஜென்ம பூமி தொடர்பாக 1850களில் ஒரு வன்முறை சர்ச்சை எழுந்தது.

1980-களில் சங்கப் பரிவாரைச் சேர்ந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர், இந்துக்களுக்காக ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை இராமருக்கு (ராம் லல்லா) கோயிலைக் கட்டவும் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியது. நவம்பர் 1989-இல், சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் விசுவ இந்து பரிசத் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று, விசுவ இந்து பரிசத் மற்றும் பாரதிய ஜனதா கட்சி 1,50,000 தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. பேரணி வன்முறையாக மாறியது, மேலும் கூட்டம் பாதுகாப்புப் படையினரை முற்றுகையிட்டு பாபர் மசூதியை இடித்தது.[6]

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் கலவரங்கள் தூண்டப்பட்டன.[7] மசூதி இடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, 7 டிசம்பர் 1992 அன்று, த நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள், பாகிஸ்தான் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டன, சில தீவைக்கப்பட்டன, ஒன்று இடிக்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டது. பாக்கிஸ்தான் அரசாங்கம் ஒரு நாள் போராட்டத்தின் போது பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடியது.[8] வங்காளதேசத்திலுள்ள இந்துக் கோவில்களும் தாக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கலின் போது பகுதியளவு அழிக்கப்பட்ட இந்த இந்துக் கோவில்களில் சில பின்னர் அப்படியே உள்ளன.[9]

5 சூலை 2005 அன்று அயோத்தியில் பாபர் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் உள்ள தற்காலிக கூடாரத்தில் அமைக்கப்பட்ட குழந்தை ராமர் கோவிலை ஐந்து பயங்கரவாதிகள் தாக்கினர். மத்திய சேமக் காவல் படையுடன் (CRPF) நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே சமயம் சுற்றி வளைக்கப்பட்ட சுவரை உடைப்பதற்காக தாக்குதல் நடத்தியவர்கள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் இறந்தார். மத்திய சேமக் காவல் படையினர் மூவர் பலியாகினர். இருவர் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் படுகாயமடைந்தனர்.[10][11]

இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) 1978 மற்றும் 2003ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளில், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் கட்டிட எச்சங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.[12][13]

தொல்பொருள் ஆய்வாளர் கே. கே. முகம்மது பல வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.[14] பல ஆண்டுகளாக, அயோத்தி ஆணைச் சட்டம், 1993ல் குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு உரிமை மற்றும் சட்ட மோதல்களும் நடந்தன. 2019-ஆம் ஆண்டு அயோத்தி பிரச்சினை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகுதான், சர்ச்சைக்குரிய நிலமானது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

முஸ்லீம்களுக்கு புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலிருந்த 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.[15] 5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

கோயில் மூலவர்[தொகு]

பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா விரஜ்மன் கோயிலின் மூலவர் ஆவார்.[16] ராம் லல்லாவின் ஆடை தையல் கலைஞர்களான பகவத் பிரசாத் மற்றும் ஷங்கர் லால் ஆகியோரால் தைக்கப்பட்டது; சங்கர் லால் நான்காவது தலைமுறையாக குழந்தை இராமருக்கு ஆடை தைப்பவர் ஆவார்.[17][18]

ராம் லல்லா 1989ம் ஆண்டு முதல் சர்ச்சைக்குரிய இடத்தின் மீதான நீதிமன்ற வழக்கில் ஒரு வாதியாக இருந்தார். சட்டத்தால் "நீதிசார்ந்த நபராக" கருதப்படுகிறார். அவர் ராம் லல்லாவின் அடுத்த 'மனித' நண்பராகக் கருதப்பட்ட விசுவ இந்து பரிசத்த்தின் மூத்த தலைவரான திரிலோகி நாத் பாண்டே அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.[2]

கட்டிடக்கலை[தொகு]

அயோத்தி இராமர் கோயிலுக்கான அசல் வடிவமைப்பு 1988ம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த சோம்புரா குடும்பத்தின் சந்திரகாந்த் சோம்புராவால் தயாரிக்கப்பட்டது.[2] கோயில் கட்டிடக் கலைஞர்களான அவரது மகன்கள் நிகில் சோம்புரா மற்றும் ஆசிஷ் சோம்புரா உதவியாக உள்ளனர். சோம்புரா குடும்பத்தினர் 15 தலைமுறையாக கோயில் கட்டுமானத் தொழிலைச் செய்பவர்கள். சோம்புரா குடும்பத்தினர் இந்திய விடுதலைக்குப் பின்னர் சோம்நாதர் கோயிலை கட்டியவர்கள்.[19] இக்குடும்பத்தினர் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கட்டியுள்ளனர். அதில் புகழ் பெற்றது தில்லி அக்சர்தாம் கோயில் ஆகும்.

அசல் கட்டுமான வரைபடத்திலிருந்து சில மாற்றங்களுடன் புதிய வடிவமைப்பு, வாஸ்து சாத்திரம் மற்றும் சிற்ப சாத்திரங்களின்படி, 2020 இல்,[20] சோம்புரா குடும்பத்தினரால் கோயில் கட்டிட வரைபடம் தயாரிக்கப்பட்டது.[21]புதிய அயோத்தி இராமர் கோயில் 235 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்டதாக அமையும். கோயில் கட்டுமானப் பணி முழுமையடைந்தவுடன் இராமர் கோயில் வளாகம் உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும்.[20] இது வட இந்தியக் கோவில் கட்டிடக்கலையின் சாளுக்கிய-குஜராத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[19]

கோவிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும். இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்களைக் கொண்டிருக்கும். கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் இருக்கும். கட்டிடத்தில் மொத்தம் 366 நெடுவரிசைகள் இருக்கும். சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் 10 தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் அடங்கிய பத்திகளில் தலா 16 சிலைகள் இருக்கும். படிக்கட்டுகளின் அகலம் 16 அடியாக இருக்கும். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களின் வடிவமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேதங்களின்படி, கருவறை எண்கோண வடிவில் இருக்கும். கோவில் 10 ஏக்கரில் கட்டப்பட்டு 57 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம், கல்வி வசதி மற்றும் அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக்கப்படும்.[22]

கட்டுமானம்[தொகு]

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ராமர் கோயிலின் முதல் கட்ட கட்டுமானத்தை தொடங்கியது.[23][24] கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.[25][26] கோயிலுக்கு அஸ்திவாரம் தோண்டும் போது ஒரு சிவலிங்கம், தூண்கள் மற்றும் உடைந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.[27] 25 மார்ச் 2020ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் குழந்தை ராமர் சிலை தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்டது.[28] லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கோயில் கட்டுமானத்திற்கு பொறுப்பேற்றது.

இராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்திலுள்ள பன்சி[29] கிராமத்தின் மலையைக் குடைந்து 600 ஆயிரம் கன அடி மணற்கற்களைக் கொண்டு கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்படும்.[22][30] முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மொழிகளில் ஸ்ரீராமர் பெயர் பொறிக்கப்பட்ட இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட செங்கற்கள் வந்துள்ளன; இவை அடித்தளத்தில் பயன்படுத்தப்படும். கோயிலை உருவாக்க பாரம்பரிய நுட்பங்கள் பயன்படுத்தப்படும். பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் அளவுக்கு அது வலுவாக இருக்கும் என்பது உறுதி செய்யப்படும். கோவில் கட்டும் பணியில் சிமெண்ட், இரும்பின் உபயோகம் இருக்காது. கல் தொகுதிகளை இணைக்க பத்தாயிரம் செப்பு தகடுகள் தேவைப்படும்.[31]

இக்கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தேவைப்படும் 12 ஆலயமணிகளும் 36 பிடிமணிகளும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.[32] தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து இக்கோவிலுக்கு 650 கிலோ கொண்ட வெண்கலமணி அனுப்பப்பட்டது.[33]

அடிக்கல் நாட்டு விழா[தொகு]

அயோத்தி இராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அருகில் மோகன் பாகவத் மற்றும் உ பி ஆளுநர் ஆனந்திபென் படேல்

5 ஆகஸ்ட் 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலுக்கான பூமி பூஜையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மோகன் பாகவத் செய்தனர்.[34] பிறகு அதிகாரப்பூர்வமாக கோவில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னதாக மூன்று நாள் நீண்ட வேத சடங்குகள் நடைபெற்றன, இது 40 கிலோ (88 பவுண்டுகள்) வெள்ளி செங்கல்லை அடித்தளமாக நிறுவப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 4 ஆம் தேதி, ஸ்ரீராமரின் பாத பூஜை செய்யப்பட்டது மற்றும் அனைத்து முக்கிய கடவுள் மற்றும் தேவியை அழைக்கும் பூஜை செய்யப்பட்டது.

பிரபல கலாச்சாரத்தில்[தொகு]

2021ல் 72வது குடியரசு நாள் விழா ஊர்வலத்தின் போது வால்மீகி மற்றும் அயோத்தி இராமர் கோயில் மாதிரி வாகனம்
2020 தீபாவளி நாளன்று தில்லியில் காட்சிப்படுத்தப்பட்ட அயோத்தி இராமர் கோயில் மாதிரி அமைப்பு [35][36]

குறிப்புகள்[தொகு]

 1. Chandrakant Sompura[1]
  Nikhil Sompura and Ashish Sompura[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. Umarji, Vinay (15 November 2019). "Chandrakant Sompura, the man who designed a Ram temple for Ayodhya". Business Standard இம் மூலத்தில் இருந்து 30 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200530024929/https://www.business-standard.com/article/current-affairs/chandrakant-sompura-the-man-who-designed-a-ram-temple-for-ayodhya-119111501801_1.html. 
 2. 2.0 2.1 2.2 Pandey, Alok (23 July 2020). "Ayodhya's Ram Temple Will Be 161-Foot Tall, An Increase Of 20 Feet". NDTV. https://web.archive.org/web/20210825071325/https://www.ndtv.com/india-news/ayodhya-ram-temple-will-be-161-feet-tall-an-increase-by-20-feet-2267315 from the original on 25 August 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 3. Bajpai, Namita (7 May 2020). "Land levelling for Ayodhya Ram temple soon, says mandir trust after video conference". The New Indian Express. https://web.archive.org/web/20210308122919/https://www.newindianexpress.com/nation/2020/may/07/land-levelling-for-ayodhya-ram-temple-soon-says-mandir-trust-after-video-conference-2140354.html from the original on 8 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 4. "Six temples of different deities in Ayodhya Ram temple's final blueprint" (in en-IN). The Hindu. 2021-09-13 இம் மூலத்தில் இருந்து 22 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211122054459/https://www.thehindu.com/news/national/six-temples-of-different-deities-in-ayodhya-ram-temples-final-blueprint/article36425034.ece. 
 5. Jain, Meenakshi (2017), The Battle for Rama – Case of the Temple at Ayodhya, Aryan Books International, ISBN 978-8-173-05579-9[page needed]
 6. Anderson, John Ward; Moore, Molly (8 December 1992). "200 Indians killed in riots following mosque destruction". Washington Post இம் மூலத்தில் இருந்து 14 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200714030046/https://www.washingtonpost.com/archive/politics/1992/12/08/200-indians-killed-in-riots-following-mosque-destruction/7ce3e7cf-354d-439c-8c69-b7db290dea3c/. 
 7. Kidangoor, Abhishyant (August 4, 2020). "India's Narendra Modi Broke Ground on a Controversial Temple of Ram. Here's Why It Matters". TIME. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020. For Muslims in India, it is the site of a 16th century mosque that was demolished by a mob in 1992, sparking sectarian riots that led to some 2,000 deaths.
 8. "As a reaction to Babri Masjid demolition, What had happened in Pakistan and Bangladesh on 6 December, 1992". The New York Times. Reuters. 8 December 1992 [1992]. https://web.archive.org/web/20210203234625/http://www.themorningchronicle.in/as-a-reaction-to-babri-masjid-demolition-what-had-happened-in-pakistan-and-bangladesh-on-6-december-1992/ from the original on 3 February 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020 – via The Morning Chronicle. {{cite web}}: |archive-url= missing title (help)CS1 maint: others (link)
 9. Khalid, Haroon (14 November 2019). "How the Babri Masjid Demolition Upended Tenuous Inter-Religious Ties in Pakistan". The Wire. https://web.archive.org/web/20200815205948/https://thewire.in/south-asia/pakistan-babri-majid-ayodhya-hindus from the original on 15 August 2020. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 10. PTI, UNI (6 July 2005). "Front Page: Armed storm Ayodhya complex". தி இந்து. Archived from the original on 2005-07-08.{{cite web}}: CS1 maint: uses authors parameter (link)
 11. "Indian PM condemns the attack in Ayodhya". people.com.cn. Xinhua. People's Daily Online. 6 July 2005. https://web.archive.org/web/20121011151654/http://english.people.com.cn/200507/06/eng20050706_194315.html from the original on 11 October 2012. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021. {{cite web}}: |archive-url= missing title (help)CS1 maint: others (link)
 12. Bhattacharya, Santwana (6 March 2003). "I found pillar bases back in mid-seventies: Prof Lal". The Indian Express Archive. https://web.archive.org/web/20160116055005/http://archive.indianexpress.com/oldStory/19644/ from the original on 16 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07. {{cite web}}: |archive-url= missing title (help)
 13. "Proof of temple found at Ayodhya: ASI report". Rediff (in ஆங்கிலம்). PTI. 25 August 2020. https://web.archive.org/web/20201008082504/https://www.rediff.com/news/2003/aug/25ayo1.htm from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07. {{cite web}}: |archive-url= missing title (help)CS1 maint: others (link)
 14. Shekhar, Kumar Shakti (1 October 2019). "Ram Mandir existed before Babri mosque in Ayodhya: Archaeologist KK Muhammed". The Times of India (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20230118221506/https://timesofindia.indiatimes.com/india/ram-temple-existed-before-babri-mosque-in-ayodhya-archaeologist-kk-muhammed/articleshow/71391712.cms from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2020-09-21. {{cite web}}: |archive-url= missing title (help)
 15. "Dhannipur near Ayodhya already has 15 mosques, local Muslims want hospital and college too". 7 February 2020. https://web.archive.org/web/20210202103401/https://theprint.in/india/dhannipur-near-ayodhya-already-has-15-mosques-local-muslims-want-hospital-and-college-too/361492/ from the original on 2 February 2021. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
 16. "Ayodhya Case Verdict: Who is Ram Lalla Virajman, the 'Divine Infant' Given the Possession of Disputed Ayodhya Land". News18. 9 November 2019. https://web.archive.org/web/20200928112944/https://www.news18.com/news/india/ayodhya-case-verdict-who-is-ram-lalla-virajman-the-divine-infant-given-the-possession-of-disputed-ayodhya-land-2379679.html from the original on 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 17. "अयोध्या: 5 अगस्त को इस टेलर का सिला पोशाक पहनेंगे रामलला" [On 5 August Ram will wear clothes stitched by this tailor]. News18 India (in இந்தி). 27 July 2020. https://web.archive.org/web/20200727043827/https://hindi.news18.com/news/uttar-pradesh/ayodhya-ayodhya-tailor-bhagwat-prasad-and-shyam-lal-preparing-cloths-for-ramlala-upat-3187451.html from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 18. "What the idol of Ram Lalla will don for the Ayodhya temple 'bhoomi pujan' – Divine Couture". The Economic Times. 4 August 2020. https://web.archive.org/web/20220305194049/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/what-the-idol-of-ram-lalla-will-don-for-the-ayodhya-temple-bhoomi-pujan/divine-couture/slideshow/77348088.cms from the original on 5 March 2022. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 19. 19.0 19.1 Sampal, Rahul (28 July 2020). "Somnath, Akshardham & now Ram Mandir – Gujarat family designing temples for 15 generations". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). https://web.archive.org/web/20200729110356/https://theprint.in/india/somnath-akshardham-now-ram-mandir-gujarat-family-designing-temples-for-15-generations/469120/ from the original on 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 29 July 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 20. 20.0 20.1 Bajpai, Namita (21 July 2020). "280-feet wide, 300-feet long and 161-feet tall: Ayodhya Ram temple complex to be world's third-largest Hindu shrine". The New Indian Express. https://web.archive.org/web/20200722221129/https://www.newindianexpress.com/nation/2020/jul/21/280-feet-wide-300-feet-long-and-161-feet-tall-ayodhya-ram-temple-complex-to-be-worlds-third-largest-hindu-shrine-2172847.html from the original on 22 July 2020. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 21. Misra, Leena (6 August 2020). "Meet the Sompuras, master architects who are building the Ram Temple in Ayodhya". The Indian Express. https://web.archive.org/web/20200806211703/https://indianexpress.com/article/explained/meet-the-sompuras-master-architects-who-are-building-the-ram-temple-in-ayodhya-6540155/ from the original on 6 August 2020. பார்க்கப்பட்ட நாள் 14 August 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 22. 22.0 22.1 Husain, Yusra (31 July 2020). "Ram Mandir design: Nagara style of architecture for Ayodhya's Ram temple". The Times of India. Lucknow. https://web.archive.org/web/20200801120046/https://timesofindia.indiatimes.com/city/lucknow/nagara-style-of-architecture-for-ayodhyas-ram-temple/articleshow/77272513.cms from the original on 1 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11. {{cite web}}: |archive-url= missing title (help)
 23. Sharma, Pratul (23 March 2020). "1st phase of Ram temple construction begins in Ayodhya". The Week (in ஆங்கிலம்). https://web.archive.org/web/20230330175900/https://www.theweek.in/news/india/2020/03/23/1st-phase-of-ram-temple-construction-begins-in-ayodhya.html from the original on 30 March 2023. பார்க்கப்பட்ட நாள் 9 May 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 24. "Ram Mandir Construction: राम मंदिर निर्मितीच्या पहिल्या टप्प्यातील काम सुरू" (in mr). Times Now Marathi. 8 May 2020 இம் மூலத்தில் இருந்து 18 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211018015943/https://www.timesnowmarathi.com/india-news-international/article/ram-mandir-foundation-first-phase-of-work-starts-cleaning-of-site-starts/292477. 
 25. Bajpai, Namita (9 April 2020). "Ram Mandir plans continue during COVID-19 lockdown, temple trust releases its official Logo". The New Indian Express. https://web.archive.org/web/20200414021852/https://www.newindianexpress.com/nation/2020/apr/09/ram-mandir-plans-continue-during-covid-19-lockdown-temple-trust-releases-its-official-logo-2127639.html from the original on 14 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 26. "COVID-19: लॉकडाउन खत्म होते ही अयोध्या में शुरू होगा भव्य राम मंदिर निर्माण" [COVID-19: The Ram Temple construction will begin in Ayodhya after the end of lockdown]. News18 India (in இந்தி). 1 January 1970. https://web.archive.org/web/20200509073923/https://hindi.news18.com/news/uttar-pradesh/ayodhya-after-lockdown-ram-mandir-construction-work-will-start-in-ayodhya-upnga-upns-3094651.html from the original on 9 May 2020. பார்க்கப்பட்ட நாள் 8 May 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 27. "Shivling, carvings on sandstone found at Ram Janmabhoomi site: Temple trust". ANI. 21 May 2020 இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524201609/https://timesofindia.indiatimes.com/india/shivling-carvings-on-sandstone-found-at-ram-janmabhoomi-site-temple-trust/articleshow/75868990.cms. 
 28. Rashid, Omar (25 March 2020). "U.P. Chief Minister Adityanath shifts Ram idol amid lockdown" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 14 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200414223226/https://www.thehindu.com/news/national/other-states/up-chief-minister-adityanath-shifts-ram-idol-amid-lockdown/article31160225.ece. 
 29. Bansi
 30. "Ram temple to be built from..." ஹிந்துஸ்தான் டைம்ஸ்.{{cite web}}: CS1 maint: url-status (link)
 31. "Construction of Ram Mandir in Ayodhya begins". ANI News (in ஆங்கிலம்). 20 August 2020. https://web.archive.org/web/20210122124219/https://www.aninews.in/news/national/general-news/construction-of-ram-mandir-in-ayodhya-begins20200820133647/ from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 32. "அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் தயாரிப்பு @ நாமக்கல்: 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/spirituals/1167438-bells-for-ayodhya-ramar-temple-sent-from-namakkal.html. பார்த்த நாள்: 14 December 2023. 
 33. "அயோத்தி ராமர் கோவிலில் விரைவில் ஒலிக்கப்போகும் ஏரல் வெண்கல மணி". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/bronze-bell-will-soon-ringing-at-the-ayodhya-ram-temple-534080. பார்த்த நாள்: 14 December 2023. 
 34. PM performs ‘bhoomi pujan’ for Ram temple in Ayodhya
 35. "Delhi's Pacific Mall installs 32-foot-tall replica of Ayodhya's Ram temple ahead of Diwali". India Today (in ஆங்கிலம்). 25 October 2020. https://web.archive.org/web/20210109093017/https://www.indiatoday.in/india/story/delhi-s-pacific-mall-installs-32-foot-tall-replica-of-ayodhya-s-ram-temple-ahead-of-diwali-1734891-2020-10-25 from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-09. {{cite web}}: |archive-url= missing title (help)
 36. "With replica of Ayodhya's Ram Temple, West Delhi's Pacific Mall mall showcases faith". The New Indian Express. 24 October 2020. https://web.archive.org/web/20210111142231/https://www.newindianexpress.com/cities/delhi/2020/oct/24/with-replica-of-ayodhyas-ram-temple-west-delhispacific-mall-mall-showcases-faith-2214428.html from the original on 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-09. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_இராமர்_கோயில்&oldid=3875870" இலிருந்து மீள்விக்கப்பட்டது