அன்னபூரணி (கடவுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னபூரணி, நலவாழ்வைத் தரும் இந்துக் கடவுளாக கருதப்படுகிறார். அன்னம் என்பது உணவையும் பூரணம் என்பது முழுமையையும் குறிக்கும். இவர் பார்வதியின் அம்சமாவார்.

அன்னபூரணி
Annapurna devi.jpg
வகைதேவி, பார்வதி ன் வடிவங்கள்
இடம்இமயமலை
அன்னபூரணியின் சுடுமட்சிலை

காசி நகரம்[தொகு]

காசி (வாரணாசி) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறார். கா என்பது காரணத்தையும், ச என்பது அமைதியையும், இ என்பது உடலையும் குறிக்கும். எனவே இந்நகரம் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.

பார்வதியின் அம்சம்[தொகு]

இந்து சமய மரபுக் கதைகளின்படி:

சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், உலகம் மாயை எனவும் இம்மாயையில் உணவும் ஒரு பகுதி எனவும் கூற, உணவு உட்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார். இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி) உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார். பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது, உலகமே வெறுமையானது. எங்குமே உணவின்றி எல்லாரும் பசியால் வாடினர். மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி, மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார்.

உடனே தன் உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன், “இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் மாயையல்ல என்றும் அறிந்து கொண்டேன்” என்று கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, தன் கையால் உணவு வழங்கி மகிழ்ந்தார். அப்போதிலிருந்து பார்வதி, நலவாழ்வுக்கான கடவுளாக வணங்கப்படுகிறார்.

பெயர்கள்[தொகு]

அன்னபூரணிக்கு பல்வேறு பெயர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்னபூரணி சகசிரநாமத்தில் ஆயிரம் பெயர்களாலும், அன்னம்பூரணி சதநாம அட்டோத்திரத்தில் 108 பெயர்களாலும் வணங்கப்படுகிறார். கீழ்க்கண்டவாறு போற்றப்படுகிறார்.

எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவள்
நலவாழ்வு அருளும் தாயாய் இருப்பவள்
சிவனுக்கே ஆற்றல் வழங்குபவள்
அறிவை வழங்கக் கூடியவள்
பயத்தைப் போக்கி அருள்பவள்
மாயைகளைத் தாண்டியவள்
உலக தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமானவள்

உருவம்[தொகு]

உருவ வழிபாட்டில், அன்னபூரணி கையில் தங்கக் கரண்டியும் உணவுப் பாத்திரமும் கொண்டுள்ளவராக வர்ணிக்கப்படுகிறார். நிறைய நகைகளை அணிந்து, அரியணையில் அமர்ந்து தோற்றமளிக்கிறார். சிவபெருமான் உணவு வழங்குமாறு வேண்டி, பாத்திரத்துடன் கையேந்தி நிற்கிறார். பார்வதி, தன் பக்தர்கள் அனைவரும் உண்ணும் வரை தான் உண்பதில்லை எனக் கூறப்படுகிறது.

வழிபாடு[தொகு]

இவரது ஆயிரம் பெயர்களை சொல்லிப் போற்றி வழிபடப்படுகிறார். உலகின் பல இடங்களில், சங்கராச்சாரியர் வழங்கிய சிறீ அன்னபூரண அட்டகத்தினை படித்து போற்றுகின்றனர். பெரும்பான்மையினர் இந்த பாடல்களை படித்துவிட்டே உண்கின்றனர்.

இவற்றையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூரணி_(கடவுள்)&oldid=3394652" இருந்து மீள்விக்கப்பட்டது