கோவிட்-19 பெருந்தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிட்-19 பெருந்தொற்று
COVID-19 pandemic
COVID-19 Outbreak World Map per Capita.svg
100,000 மக்கள்தொகைக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)

     >1000
     300–1000
     100–300
     30–100
     10–30
     0–10
     தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை

உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம்
COVID-19 Outbreak World Map.svg
உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)
  1,000,000+ உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  100,000–999,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  10,000–99,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  1,000–9,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  100–999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  1–99 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம்
COVID-19 Outbreak World Map Total Deaths per Capita.svg
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)
  ஒரு மில்லியனுக்கு, 100+ இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 10–100 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 1–10 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 0.1–1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, >0–0.1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் இல்லை அல்லது தரவு இல்லை
COVID-19 Nurse (cropped).jpg
2020 coronavirus task force.jpg
蔡總統視導33化學兵群 02.jpg
Emergenza coronavirus (49501382461).jpg
Dried pasta shelves empty in an Australian supermarket.jpg
(மேலே இருந்து கடிகாரம் சுழலும் திசையில்)
 • தீவிர சிகிச்சை பிரிவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை அளிக்கும் ஒரு செவிலியர்
 • தாய்பெய்யில் வாகனங்கள் மூலம் வைரசை அழிக்க செலுத்தப்படும் மருந்துகள்
 • ஆத்திரேலிய பல்பொருள் அங்காடியில் பீதியின் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
 • மிலன் லினேட் வானூர்தி நிலையத்தில் சுகாதார சோதனைகள்
 • இத்தாலிய அரசாங்கத்தின் அவசர கூட்டம்
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுகடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS-CoV-2)[a]
அமைவிடம்உலகளவில்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா[2]
நோயாளி சுழியம்ஊகான், ஊபேய், சீனா
30°37′11″N 114°15′28″E / 30.61972°N 114.25778°E / 30.61972; 114.25778
நாள்1 திசம்பர் 2019–present[3]
(3 ஆண்டு-கள் and 6 மாதம்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்24,77,40,899[4][5]
சிகிச்சை பெறுவோர்15,589,513
குணமடைந்த நோயாளிகள்{{{recovered}}}[4][5]
இறப்புகள்
50,17,139[4][5]
பிராந்தியங்கள்
188[5]

கோவிட்-19 பெருந்தொற்று[6] என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS‑ CoV‑ 2) என்ற தீநுண்மி காரணமாக ஏற்படும் கொரோனாவைரஸ் நோயின் (கோவிட்‑19) பெருந்தொற்றாகும்.[1] இது கொரோனாவைரஸ் பெருந்தொற்று என்றும் அறியப்படுகிறது. இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் வூகானில் 2019 திசம்பரில் அடையாளம் காணப்பட்டது.[7] சனவரி 30 அன்று கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.[8][9] 2 சூன் 2023 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 24,77,40,899[4] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 50,17,139[4] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[4] பேர் மீண்டு வந்துள்ளனர்.

இந்த வைரஸ் பெரும்பாலும் மக்களிடையே நெருக்கமான தொடர்பின்போது[b] இருமல்,[c] தும்மல் மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும் சிறிய நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது.[13][11][14] இந்த நீர்த்துளிகள் வழக்கமாக நீண்ட தூரம் காற்று வழியாக பயணிப்பதை விட தரையில் அல்லது மேற்பரப்பில் விழுகின்றன.[13] சில நேரங்களில், தொற்றுள்ள மேற்பரப்பைத் தொட்டுவிட்டு, பின்னர் தங்களின் முகத்தைத் தொடுவதன் மூலமாகவும் மக்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும். .[13][11] அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று நாட்களில் தொற்றுப் பரவல் வீரியமாக இருக்கும்,எனினும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், அறிகுறிகளைக் காட்டாத மக்களிடமிருந்தும் தொற்று பரவ சாத்தியமுள்ளது.[13][11]

பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை அடங்கும்.[10][15][16] நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்.[17] அறிகுறிகள் வெளிப்படும் கால இடைவெளியானது முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்; சிலநேரங்களில் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரைக்கூட இருக்கலாம்.[18][19] இத்தொற்றுநோய்க்கு அறியப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை.[10] அறிகுறி குறைப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன.[20]

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும்போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[21][22] இதனால் உலகெங்கிலும் உள்ள அரசுத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு, பணியிட முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளை மூடல் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளனர். சோதனை திறனை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறியவும் பலர் பணியாற்றியுள்ளனர்.

இத்தொற்றுநோய் உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.[23] இதனால் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் உலகளவில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது.[24] இது விளையாட்டு, மத, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய வழிவகுத்தது. அச்சம் காரணமாக முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அதிக நபர்கள் வாங்கியதால் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டது.[25][26][27] ஊரடங்கால் மாசுபடுத்திகள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்கள் ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்தது.[28][29] 177 நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் அல்லது உள்ளூர் அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. இது உலக மாணவர் தொகையில் சுமார் 98.6 விழுக்காட்டினரை பாதித்துள்ளது.[30] சமூக ஊடகங்கள் மற்றும் பொது ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.[31] சீன மக்களுக்கு எதிராகவும், சீனர்கள் அல்லது அதிக நோய்த்தொற்று விகிதங்கள் உள்ள பகுதிகளிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுபவர்களுக்கும் எதிராக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.[32][33][34]

கோவிட்-19 ஆரம்ப நிலை[தொகு]

SwissCheese Respiratory Virus Interventions TAMIL.jpg

சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை.[35] இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்)[36] 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.[37] ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுகளைப் பதிவு செய்தன.[38] இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். மேலும் இந்த நோயின் அறிகுறியில்லாதவர்களும் நோய்ப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான தற்காலிகச் சான்றுகளும் அறிவிக்கப்பட்டன.[39][40][41] இத்தீநுண்மிக்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, மூச்சுத் திணறல் போன்றவையும், மேலும் இறப்புகளும் ஏற்படலாம்.[40]

2020 பிப்ரவரி 15 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 67,100 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன[42] கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[43] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.[42] இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[44] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[3][45][46][47] சீனாவிற்கு வெளியே இத்தீநுண்மியின் முதல் பரவல் வியட்நாமில் நோயாளியின் மகனுக்குத் தொற்றியது.[48] அதே சமயம் குடும்பத்துடன் சம்பந்தப்படாத முதல் உள்ளூர் பரவல் செருமனியில் நிகழ்ந்தது, 2020 சனவரி 22 அன்று பவேரியாவிற்கு வந்திருந்த ஒரு சீன வணிகப் பார்வையாளரிடமிருந்து ஒரு செருமேனியர் இந்த நோயைப் பெற்றுக்கொண்டார்.[49] சீனாவிற்கு வெளியே முதலாவது இறப்பு பிலிப்பீன்சில் பதிவானது. 44-அகவையுடையவர் இத்தீநுண்மியால் பாதிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 1 இல் உயிரிழந்தார்.[50][51]

கோவிட்-19 பெருந்தொற்று[52]
இடங்கள் தொற்றுகள் இறப்புகள்
World[d] 623,740,571 6,564,701
ஐரோப்பிய ஒன்றியம் European Union[e] 170,956,841 1,153,374
ஐக்கிய அமெரிக்கா United States 96,911,257 1,064,798
இந்தியா India 44,623,997 528,857
பிரான்சு France 36,164,814 155,806
பிரேசில் Brazil 34,739,865 687,069
செருமனி Germany 34,517,327 151,260
தென் கொரியா South Korea 25,076,239 28,783
ஐக்கிய இராச்சியம் United Kingdom 23,798,797 207,948
இத்தாலி Italy 22,990,201 177,785
சப்பான் Japan 21,684,899 45,799
உருசியா Russia 20,960,802 380,757
துருக்கி Turkey 16,919,638 101,203
எசுப்பானியா Spain 13,441,941 114,468
வியட்நாம் Vietnam 11,490,951 43,155
ஆத்திரேலியா Australia 10,308,233 15,446
அர்கெந்தீனா Argentina 9,713,594 129,958
நெதர்லாந்து Netherlands 8,475,771 22,789
ஈரான் Iran 7,553,454 144,506
மெக்சிக்கோ Mexico 7,100,886 330,254
சீனக் குடியரசு Taiwan 7,050,750 11,686
இந்தோனேசியா Indonesia 6,452,078 158,263
போலந்து Poland 6,323,108 117,847
கொலம்பியா Colombia 6,308,558 141,820
போர்த்துகல் Portugal 5,508,231 25,119
உக்ரைன் Ukraine 5,480,495 117,059
ஆஸ்திரியா Austria 5,306,372 20,895
கிரேக்க நாடு Greece 5,026,494 33,313
மலேசியா Malaysia 4,861,226 36,410
தாய்லாந்து Thailand 4,713,909 32,923
இசுரேல் Israel 4,671,334 11,712
சிலி Chile 4,664,095 61,355
பெல்ஜியம் Belgium 4,586,564 32,776
கனடா Canada 4,319,103 45,833
சுவிட்சர்லாந்து Switzerland 4,164,685 14,022
பெரு Peru 4,149,440 216,830
செக் குடியரசு Czech Republic 4,138,561 41,354
தென்னாப்பிரிக்கா South Africa 4,022,577 102,246
பிலிப்பீன்சு Philippines 3,975,884 63,403
டென்மார்க் Denmark 3,316,465 7,165
உருமேனியா Romania 3,278,510 67,110
சிலோவாக்கியா Slovakia 2,635,303 20,496
சுவீடன் Sweden 2,604,866 20,438
ஈராக் Iraq 2,460,868 25,356
செர்பியா Serbia 2,385,062 17,117
அங்கேரி Hungary 2,120,543 47,680
வங்காளதேசம் Bangladesh 2,031,451 29,389
சிங்கப்பூர் Singapore 1,988,760 1,639
ஆங்காங் Hong Kong 1,821,754 10,254
நியூசிலாந்து New Zealand 1,800,685 2,055
சியார்சியா Georgia 1,780,691 16,900
யோர்தான் Jordan 1,746,997 14,122
அயர்லாந்து குடியரசு Republic of Ireland 1,668,301 7,988
பாக்கித்தான் Pakistan 1,572,778 30,619
கசக்கஸ்தான் Kazakhstan 1,484,126 19,052
நோர்வே Norway 1,463,324 4,153
பின்லாந்து Finland 1,323,455 6,242
பல்காரியா Bulgaria 1,268,814 37,773
மொரோக்கோ Morocco 1,265,162 16,278
லித்துவேனியா Lithuania 1,260,161 9,355
குரோவாசியா Croatia 1,240,232 16,999
லெபனான் Lebanon 1,216,999 10,688
சுலோவீனியா Slovenia 1,211,499 6,848
தூனிசியா Tunisia 1,145,930 29,254
குவாத்தமாலா Guatemala 1,131,666 19,846
கோஸ்ட்டா ரிக்கா Costa Rica 1,127,602 8,974
கூபா Cuba 1,111,242 8,530
பொலிவியா Bolivia 1,108,865 22,237
ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates 1,032,177 2,346
சீனா China[f] 1,009,732 5,226
எக்குவடோர் Ecuador 1,006,922 35,904
நேபாளம் Nepal 1,000,036 12,018
பெலருஸ் Belarus 994,037 7,118
பனாமா Panama 988,280 8,505
உருகுவை Uruguay 987,563 7,501
மங்கோலியா Mongolia 983,896 2,131
லாத்வியா Latvia 942,091 6,026
அசர்பைஜான் Azerbaijan 822,427 9,931
சவூதி அரேபியா Saudi Arabia 818,427 9,376
பரகுவை Paraguay 717,039 19,595
பலத்தீன் நாடு Palestine 702,804 5,707
பகுரைன் Bahrain 684,832 1,521
இலங்கை Sri Lanka 670,899 16,768
குவைத் Kuwait 660,667 2,564
டொமினிக்கன் குடியரசு Dominican Republic 646,209 4,384
மியான்மர் Myanmar 627,638 19,469
எசுத்தோனியா Estonia 604,552 2,713
மல்தோவா Moldova 591,912 11,870
சைப்பிரசு Cyprus 590,783 1,187
வெனிசுவேலா Venezuela 545,159 5,818
எகிப்து Egypt 515,645 24,797
லிபியா Libya 507,012 6,437
எதியோப்பியா Ethiopia 493,738 7,572
கத்தார் Qatar 460,449 682
ஒண்டுராசு Honduras 456,664 10,996
ஆர்மீனியா Armenia 444,482 8,700
பொசுனியா எர்செகோவினா Bosnia and Herzegovina 399,346 16,156
ஓமான் Oman 398,424 4,628
மாக்கடோனியக் குடியரசு North Macedonia 343,515 9,551
கென்யா Kenya 338,538 5,678
சாம்பியா Zambia 333,624 4,017
அல்பேனியா Albania 332,579 3,591
போட்சுவானா Botswana 326,344 2,790
லக்சம்பர்க் Luxembourg 296,941 1,136
மொண்டெனேகுரோ Montenegro 281,599 2,782
கொசோவோ Kosovo 272,113 3,200
அல்ஜீரியா Algeria 270,722 6,881
நைஜீரியா Nigeria 265,816 3,155
மொரிசியசு Mauritius 263,177 1,028
சிம்பாப்வே Zimbabwe 257,827 5,605
உஸ்பெகிஸ்தான் Uzbekistan 244,361 1,637
புரூணை Brunei 231,833 225
மொசாம்பிக் Mozambique 230,370 2,224
லாவோஸ் Laos 216,068 758
கிர்கிசுத்தான் Kyrgyzstan 206,250 2,991
ஐசுலாந்து Iceland 205,963 213
எல் சல்வடோர் El Salvador 201,785 4,230
ஆப்கானித்தான் Afghanistan 200,846 7,809
மாலைத்தீவுகள் Maldives 185,125 308
டிரினிடாட் மற்றும் டொபாகோ Trinidad and Tobago 184,261 4,235
கானா Ghana 170,177 1,460
உகாண்டா Uganda 169,396 3,630
நமீபியா Namibia 169,253 4,080
ஜமேக்கா Jamaica 151,931 3,320
கம்போடியா Cambodia 137,952 3,056
ருவாண்டா Rwanda 132,525 1,467
கமரூன் Cameroon 121,652 1,935
மால்ட்டா Malta 114,941 806
அங்கோலா Angola 103,131 1,917
பார்படோசு Barbados 102,609 560
காங்கோ மக்களாட்சிக் குடியரசு Democratic Republic of the Congo 92,934 1,443
செனிகல் Senegal 88,555 1,968
மலாவி Malawi 88,055 2,682
ஐவரி கோஸ்ட் Ivory Coast 87,509 826
சுரிநாம் Suriname 81,131 1,385
பிரெஞ்சு பொலினீசியா French Polynesia 76,706 649
நியூ கலிடோனியா New Caledonia 74,346 314
எசுவாத்தினி Eswatini 73,436 1,422
கயானா Guyana 71,397 1,281
பெலீசு Belize 68,909 686
பிஜி Fiji 68,248 878
மடகாசுகர் Madagascar 66,687 1,410
சூடான் Sudan 63,375 4,963
மூரித்தானியா Mauritania 63,041 995
கேப் வர்டி Cabo Verde 62,394 410
பூட்டான் Bhutan 62,200 21
சிரியா Syria 57,331 3,163
புருண்டி Burundi 50,289 38
காபொன் Gabon 48,810 306
சீசெல்சு Seychelles 47,141 169
அந்தோரா Andorra 46,366 155
குராசோ Curaçao 45,406 289
பப்புவா நியூ கினி Papua New Guinea 45,170 668
அரூபா Aruba 44,145 232
தன்சானியா Tanzania 39,679 845
டோகோ Togo 39,230 287
மாண் தீவு Isle of Man 38,008 116
கினியா Guinea 37,950 455
பகாமாசு Bahamas 37,318 833
பரோயே தீவுகள் Faroe Islands 34,658 28
லெசோத்தோ Lesotho 34,490 706
எயிட்டி Haiti 33,764 857
மாலி Mali 32,701 742
கேமன் தீவுகள் Cayman Islands 30,809 34
செயிண்ட். லூசியா Saint Lucia 29,550 405
பெனின் Benin 27,782 163
சோமாலியா Somalia 27,223 1,361
காங்கோ குடியரசு Republic of the Congo 24,837 386
கிழக்குத் திமோர் Timor-Leste 23,275 138
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் Federated States of Micronesia 21,673 51
புர்க்கினா பாசோ Burkina Faso 21,631 387
சொலமன் தீவுகள் Solomon Islands 21,544 153
சான் மரீனோ San Marino 21,201 118
லீக்கின்ஸ்டைன் Liechtenstein 20,266 86
கிப்ரல்டார் Gibraltar 20,121 108
கிரெனடா Grenada 19,574 237
பெர்முடா Bermuda 18,220 148
தெற்கு சூடான் South Sudan 17,823 138
தாஜிக்ஸ்தான் Tajikistan 17,786 125
எக்குவடோரியல் கினி Equatorial Guinea 17,046 183
தொங்கா Tonga 16,182 12
சமோவா Samoa 15,942 29
டொமினிக்கா Dominica 15,760 74
சீபூத்தீ Djibouti 15,690 189
மார்சல் தீவுகள் Marshall Islands 15,375 17
நிக்கராகுவா Nicaragua 15,120 245
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு Central African Republic 14,957 113
மொனாகோ Monaco 14,782 63
கம்பியா Gambia 12,508 372
வனுவாட்டு Vanuatu 11,976 14
கிறீன்லாந்து Greenland 11,971 21
யேமன் Yemen 11,939 2,158
கரிபிய நெதர்லாந்து Caribbean Netherlands 11,395 38
எரித்திரியா Eritrea 10,182 103
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் Saint Vincent and the Grenadines 9,448 116
நைஜர் Niger 9,415 314
அன்டிகுவா பர்புடா Antigua and Barbuda 9,106 146
கினி-பிசாவு Guinea-Bissau 8,831 176
கொமொரோசு Comoros 8,481 161
லைபீரியா Liberia 7,985 294
சியேரா லியோனி Sierra Leone 7,752 126
சாட் Chad 7,605 193
பிரித்தானிய கன்னித் தீவுகள் British Virgin Islands 7,305 64
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் Saint Kitts and Nevis 6,546 46
குக் தீவுகள் Cook Islands 6,389 1
துர்கசு கைகோசு தீவுகள் Turks and Caicos Islands 6,380 36
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி Sao Tome and Principe 6,252 77
பலாவு Palau 5,481 6
நவூரு Nauru 4,611 1
அங்கியுலா Anguilla 3,866 12
கிரிபட்டி Kiribati 3,430 13
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் Saint Pierre and Miquelon 3,231 1
செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா Saint Helena, Ascension and Tristan da Cunha 1,973
போக்லாந்து தீவுகள் Falkland Islands 1,930
மொன்செராட் Montserrat 1,403 8
மக்காவு Macau 793 6
வலிசும் புட்டூனாவும் Wallis and Futuna 761 7
வத்திக்கான் நகர் Vatican City 29 0
துவாலு Tuvalu 20
வட கொரியா North Korea 1 6
 1. இது SARS‑CoV‑2 என்ற வைரஸால் ஏற்படும் கோவிட்-19 என்ற நோயின் பெருந்தொற்றைப் பற்றிய கட்டுரையாகும் .[1]
 2. நெருக்கமான தொடர்பு என்பது WHOஆல் ஒரு மீட்டர் (~ 3.3 அடி)[10] என்றும் CDCஆல் 8 1.8 மீட்டர் (ஆறு அடி) என்றும் வரையறுக்கப்படுகிறது.[11]
 3. முகத்தை மூடாமல் இருமுவதன் மூலம் வெளிப்படும் வைரஸானது 8.2 மீட்டர்கள் (27 அடிகள்) தூரம் பயணிக்கும்.[12]
 4. Countries which do not report data for a column are not included in that column's world total.
 5. Data on member states of the European Union are individually listed, but are also summed here for convenience. They are not double-counted in world totals.
 6. Does not include special administrative regions (Hong Kong and Macau) or Taiwan.

இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஊகான் உட்பட 57 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள், மற்றும் சுற்றியுள்ள ஊபேய் மாகாணத்தில் 15 நகரங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டன, அனைத்து நகர்ப்புற பொதுப் போக்குவரத்து, தொடருந்து, வானூர்தி மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மூலம் வெளிப்புறப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.[53][54][55] பெய்ஜிங்கில் தடைசெய்யப்பட்ட நகர், பாரம்பரியக் கோயில் கண்காட்சிகள் மற்றும் பிற கொண்டாட்டக் கூட்டங்கள் உள்ளிட்ட பல சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன, சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.[56] ஆங்காங்கும் அதன் தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, அவசரநிலையை அறிவித்தது, 2020 பிப்ரவரி நடுப்பகுதி வரை அதன் பள்ளிகளை மூடிப் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்தது.[57][58]

ஊகான் மற்றும் ஊபேய் மாகாணத்திற்கான பயணங்களுக்கு எதிராக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.[59]

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும், தீநுண்மியின் அறிகுறிகளைப் பற்றியும் அறிவிக்க மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[60] கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கும் எவரும் ஒரு பாதுகாப்பு முகமூடியை அணிந்துகொண்டு மருத்துவரை நேரில் சென்று பார்வையிடுவதை விட மருத்துவரை தொலைத்தொடர்பு சாதனத்தின் உதவியால் மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.[[61] சீனாவில் வானூர்தி நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் தீநுண்மியைக் காவுபவர்களை அடையாளம் காணும் முயற்சியாக மனித வெப்பநிலை சோதனைகள், சுகாதார அறிவிப்புகள் மற்றும் தகவல் கையொப்பங்களை செயல்படுத்தியுள்ளன.[62]

சீன அறிவியலாளர்கள் தீநுண்மியின் மரபணு வரிசையை விரைவாகத் தனிமைப்படுத்தித் தீர்மானித்தனர். அத்துடன் ஏனைய நாடுகள் இந்நோயைக் கண்டறிவதற்கான பிசிஆர் சோதனைகளைத் தாமாகக் கண்டறிவதற்காக சீனா தான் கண்டுபிடித்த மரபணு வரிசையை மற்ற நாடுகளுக்குக் கொடுத்தது.[63][64][65][66] 2019-nCoV தீநுண்மியின் மரபணு வரிசை 75 முதல் 80 சதவிகிதம் SARS-CoV உடன் ஒத்ததாகவும், 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக பல்வேறு வௌவால் கொரோனாவைரசுகளைப் போலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[67] ஆனாலும், இந்த வைரசு சார்சைப் போலவே ஆபத்தானதா என்பது தெளிவாக இல்லை.[63][64][65][66]

உலக சுகாதார அமைப்பு[தொகு]

2020 சனவரி 30 அன்று, இத்தொற்றுப் பரவலை ஒரு பொது சுகாதாரப் பன்னாட்டு அவசரநிலையாக (PHEIC) என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இது 2009 ஆம் ஆண்டில் H1N1 தொற்றுநோய்க்குப் பின்னர் அறிவிக்கப்படுவது ஆறாவது முறையாகும்.[68][69][70][71]

2020 மார்ச் 12 அன்று, கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவைரசு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.[72]

நாடுகள் வாரியாக தொற்றுகள்[தொகு]

2 சூன் 2023 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 24,77,40,899[4] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 50,17,139[4] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[4] பேர் மீண்டு வந்துள்ளனர். இதில் ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி[தொகு]

13 சூலை, 2020 நிலவரப்படி, இத்தாலியில் 243,061 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 34,954 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 194,928 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மார்ச் 21, அன்று மட்டும் 793 பேர் வைரசால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட நாடு இது. மார்ச் 19 அன்று, தொற்றுநோயால் 3,405 இறப்புகள் ஏற்பட்டதாக அறியப்பட்டபிறகு, உலகிலேயே அதிக கொரோனாவைரசு தொடர்பான இறப்புகளைக் கொண்ட நாடாக இத்தாலி இருந்தது.[73]

ஐக்கிய அமெரிக்கா[தொகு]

13 சூலை, 2020 நிலவரப்படி, ஐக்கிய அமெரிக்காவில் 3,366,515 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 137,191 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 988,656 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நாட்டின் வர்த்தக தலைநகரான நியூயார்க் நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியா[தொகு]

23 மே , 2021 நிலவரப்படி, இந்தியாவில் 26,530,132 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 22,674 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 534,620 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இலங்கை[தொகு]

13 சூலை, 2020 நிலவரப்படி, இலங்கையில் 2,454 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 11 பேர் உயிரிழந்துள்ளார் மற்றும் 1,980 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

பாக்கித்தான்[தொகு]

13 சூலை, 2020 நிலவரப்படி, பாக்கித்தானில் 248,872 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 5,197 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 156,700 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

தாய்லாந்து[தொகு]

13 சூலை, 2020 நிலவரப்படி, தாய்லாந்தில் 3,217 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,088 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

ஈரான்[தொகு]

13 சூலை, 2020 நிலவரப்படி, ஈரானில் 257,303 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 12,829 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 219,993 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

மறைவு[தொகு]

கொரோனா நுண்நச்சுயிரி நோய் பற்றி முதலில் அறிவித்து சீன அரசை எச்சரித்த சீன மருத்துவர், 34 அகவை நிரம்பிய, இலீ வென்லியாங்கு (Dr. Li Wenliang) கொரோனா நுண்நச்சுயிரி பாதிப்பால் இறந்துவிட்டார். [74]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Naming the coronavirus disease (COVID-19) and the virus that causes it". World Health Organization (WHO).
 2. "Wuhan virus: Seafood market may not be only source of novel coronavirus, says expert". The Straits Times. 31 January 2020.
 3. 3.0 3.1 Huang, Chaolin; Wang, Yeming; Li, Xingwang; Ren, Lili; Zhao, Jianping; Hu, Yi; Zhang, Li; Fan, Guohui et al. (24 January 2020). "Clinical features of patients infected with 2019 novel coronavirus in Wuhan, China". Lancet. doi:10.1016/S0140-6736(20)30183-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:31986264. 
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 "COVID-19 Dashboard by the Center for Systems Science and Engineering (CSSE) at Johns Hopkins University (JHU)". ArcGIS. Johns Hopkins University. 3 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 5.3 "Coronavirus Update (Live)". Worldometer. 2020. 22 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. https://www.bbc.com/tamil/global-51470389
 7. "Clinical features of patients infected with 2019 novel coronavirus in Wuhan, China". Lancet 395 (10223): 497–506. February 2020. doi:10.1016/s0140-6736(20)30183-5. பப்மெட்:31986264. 
 8. "Statement on the second meeting of the International Health Regulations (2005) Emergency Committee regarding the outbreak of novel coronavirus (2019-nCoV)". World Health Organization (WHO). 30 January 2020. 31 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 9. "WHO Director-General's opening remarks at the media briefing on COVID-19—11 March 2020". World Health Organization. 11 March 2020. 11 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. 10.0 10.1 10.2 "Q&A on coronaviruses (COVID-19)". World Health Organization. 17 April 2020. 14 May 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
 11. 11.0 11.1 11.2 11.3 "How COVID-19 Spreads". Centers for Disease Control and Prevention (CDC). 2 April 2020. 3 April 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Turbulent Gas Clouds and Respiratory Pathogen Emissions: Potential Implications for Reducing Transmission of COVID-19". JAMA. March 2020. doi:10.1001/jama.2020.4756. பப்மெட்:32215590. 
 13. 13.0 13.1 13.2 13.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; WHO2020QA2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 14. "Q & A on COVID-19". European Centre for Disease Prevention and Control. 30 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 15. Hopkins C. "Loss of sense of smell as marker of COVID-19 infection" (PDF). Ear, Nose and Throat surgery body of United Kingdom. 27 மே 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Coronavirus Disease 2019 (COVID-19)—Symptoms". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 20 March 2020. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Interim Clinical Guidance for Management of Patients with Confirmed Coronavirus Disease (COVID-19)". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 4 April 2020. 11 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Symptoms of Novel Coronavirus (2019-nCoV)". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 10 February 2020. 11 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
 19. "The COVID-19 epidemic". Tropical Medicine & International Health 25 (3): 278–280. March 2020. doi:10.1111/tmi.13383. பப்மெட்:32052514. 
 20. "Caring for Yourself at Home". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 11 February 2020. 23 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 21. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; WHO2020QA3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 22. "Unite against COVID-19". Unite against COVID-19. Government of New Zealand. 11 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 23. "Here Comes the Coronavirus Pandemic: Now, after many fire drills, the world may be facing a real fire". த நியூயார்க் டைம்ஸ். 29 February 2020. https://www.nytimes.com/2020/02/29/opinion/sunday/corona-virus-usa.html. 
 24. "The Great Lockdown: Worst Economic Downturn Since the Great Depression". IMF Blog. 23 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 25. Yuen, Kum Fai; Wang, Xueqin; Ma, Fei; Li, Kevin X. (2020). "The psychological causes of panic buying following a health crisis". International Journal of Environmental Research and Public Health 17 (10): 3513. doi:10.3390/ijerph17103513. பப்மெட்:32443427. https://www.mdpi.com/1660-4601/17/10/3513. 
 26. Scipioni, Jade (18 March 2020). "Why there will soon be tons of toilet paper, and what food may be scarce, according to supply chain experts". CNBC. 19 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 27. "The Coronavirus Outbreak Could Disrupt the U.S. Drug Supply". Council on Foreign Relations. 19 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 28. Watts, Jonathan; Kommenda, Niko (23 March 2020). "Coronavirus pandemic leading to huge drop in air pollution". The Guardian. https://www.theguardian.com/environment/2020/mar/23/coronavirus-pandemic-leading-to-huge-drop-in-air-pollution. 
 29. "Analysis: Coronavirus temporarily reduced China's CO2 emissions by a quarter". Carbon Brief. 19 February 2020. 8 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
 30. "COVID-19 Educational Disruption and Response". UNESCO. 4 March 2020. 28 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 31. Clamp R (5 March 2020). "Coronavirus and the Black Death: spread of misinformation and xenophobia shows we haven't learned from our past". The Conversation. 14 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 32. Sui C. "China's Racism Is Wrecking Its Success in Africa".
 33. Tavernise, Sabrina; Oppel Jr, Richard A. (23 March 2020). "Spit On, Yelled At, Attacked: Chinese-Americans Fear for Their Safety". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/03/23/us/chinese-coronavirus-racist-attacks.html. 
 34. Kuo, Lily; Davidson, Helen (29 March 2020). "'They see my blue eyes then jump back'—China sees a new wave of xenophobia". The Guardian. https://www.theguardian.com/world/2020/mar/29/china-coronavirus-anti-foreigner-feeling-imported-cases. 
 35. "Is the World Ready for the Coronavirus?". த நியூயார்க் டைம்ஸ். 29 January 2020. https://www.nytimes.com/2020/01/29/opinion/coronavirus-outbreak.html. பார்த்த நாள்: 30 January 2020. 
 36. "China virus death toll rises to 41, more than 1,300 infected worldwide". CNBC. 24 January 2020. 26 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 37. Shih, Gerry; Lynch, David J.; Denyer, Simon. "Fifth coronavirus case confirmed in U.S., 1,000 more cases expected in China". https://www.washingtonpost.com/world/asia_pacific/coronavirus-china-latest-updates/2020/01/26/4603266c-3fa8-11ea-afe2-090eb37b60b1_story.html. 
 38. "Confirmed 2019-nCoV Cases Globally | CDC". www.cdc.gov (ஆங்கிலம்). 30 January 2020. 31 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 39. "Novel Coronavirus(2019-nCoV)" (PDF). உலக சுகாதார அமைப்பு (WHO).
 40. 40.0 40.1 Hessen, Margaret Trexler (27 January 2020). "Novel Coronavirus Information Center: Expert guidance and commentary". Elsevier Connect (ஆங்கிலம்). 31 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 41. Rothe, Camilla; Schunk, Mirjam; Sothmann, Peter; Bretzel, Gisela; Froeschl, Guenter; Wallrauch, Claudia; Zimmer, Thorbjörn; Thiel, Verena et al. (30 January 2020). "Transmission of 2019-nCoV Infection from an Asymptomatic Contact in Germany". New England Journal of Medicine. doi:10.1056/NEJMc2001468. 
 42. 42.0 42.1 "Tracking coronavirus: Map, data and timeline". BNO News. 10 February 2020. 28 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 10 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
 43. Qin, Amy; Hernández, Javier C. (10 January 2020). "China Reports First Death From New Virus". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/01/10/world/asia/china-virus-wuhan-death.html. 
 44. "HKUMed WHO Collaborating Centre for Infectious Disease Epidemiology and Control releases real-time nowcast on the likely extent of the Wuhan coronavirus outbreak, domestic and international spread with the forecast for chunyun". HKUMed School of Public Health. 25 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 23 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 45. Joseph, Andrew (24 January 2020). "New coronavirus can cause infections with no symptoms and sicken otherwise healthy people, studies show". STAT. https://www.statnews.com/2020/01/24/coronavirus-infections-no-symptoms-lancet-studies/. 
 46. Chan, Jasper Fuk-Woo; Yuan, Shuofeng; Kok, Kin-Hang; To, Kelvin Kai-Wang; Chu, Hin; Yang, Jin; Xing, Fanfan; Liu, Jieling et al. (24 January 2020). "A familial cluster of pneumonia associated with the 2019 novel coronavirus indicating person-to-person transmission: a study of a family cluster". The Lancet 0. doi:10.1016/S0140-6736(20)30154-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:31986261. 
 47. Schnirring, Lisa (25 January 2020). "Doubts rise about China's ability to contain new coronavirus". CIDRAP. 26 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 48. "China coronavirus: 'family cluster' in Vietnam fuels concerns over human transmission". South China Morning Post. 29 January 2020. 29 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 49. "Germany confirms human transmission of coronavirus". Deutsche Welle. 28 January 2020. 28 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 50. "Philippines reports first coronavirus death outside China after travel ban". South China Morning Post. 2 February 2020. 2 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
 51. Wang, Christine (2 February 2020). "Philippines reports first death outside of China in coronavirus outbreak". CNBC. 2 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
 52. ரிட்சீ, ஆன்னா; மாத்தியு, எடவுர்டு; ரோட்சு-குயிரோ, லூகசு; அப்பெல், கேமரன்; கியாட்டினோ, சார்லி; ஒர்டிசு-ஒசுபினா, எசுடபான்; ஆசெல், ஜோ; மெக்டானல்டு, பாப்பி; பெல்ட்கியன், டையானா; டட்டானி, சலொனி; ரோசர், மாக்சு (2020–22). "கொரோனாவைரசு பெருந்தொற்று (கோவிட்-19)". அவர் வேர்ல்டு இன் டேட்டா (ஆங்கிலம்). 2022-10-14 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: date format (link)
 53. James Griffiths; Amy Woodyatt. "Wuhan coronavirus: Thousands of cases confirmed as China goes into emergency mode". CNN. 28 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 54. Hui, Jane Li, Mary. "China has locked down Wuhan, the epicenter of the coronavirus outbreak". Quartz. 23 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 55. Hamblin, James (24 January 2020). "A Historic Quarantine – China's attempt to curb a viral outbreak is a radical experiment in authoritarian medicine". The Atlantic. 28 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
 56. "China cancels Lunar New Year events over deadly virus fears". Deutsche Welle. 23 January 2020. 24 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 57. "Hong Kong Chinese New Year | Hong Kong Tourism Board". www.discoverhongkong.com. 29 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 58. Lum, Alvin; Sum, Lok-kei (25 January 2020). "China coronavirus: Hong Kong leader hits back at delay criticism as she suspends school classes, cancels marathon and declares city at highest level of emergency". South China Morning Post (South China Morning Post). https://www.scmp.com/news/hong-kong/health-environment/article/3047645/china-coronavirus-hong-kong-students-get-two-more. பார்த்த நாள்: 26 January 2020. 
 59. Gilbertson, Jayme Deerwester and Dawn. "Coronavirus: US says 'do not travel' to Wuhan, China, as airlines issue waivers, add safeguards". USA TODAY-US. 27 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 60. bw_mark-US. "Travelers from China asked to check for flu-like symptoms | BusinessWorld". 26 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 61. "MOH | Updates on Novel Coronavirus". www.moh.gov.sg. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 62. "Coronavirus Update: Masks And Temperature Checks In Hong Kong". Nevada Public Radio. 2 ஜூன் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 63. 63.0 63.1 Hui, David S.; Azhar, Esam EI; Madani, Tariq A.; Ntoumi, Francine; Kock, Richard; Dar, Osman; Ippolito, Giuseppe; Mchugh, Timothy D. et al. (14 January 2020). "The continuing epidemic threat of novel coronaviruses to global health – the latest novel coronavirus outbreak in Wuhan, China". International Journal of Infectious Diseases 91: 264–266. doi:10.1016/j.ijid.2020.01.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:1201-9712. பப்மெட்:31953166. https://www.ijidonline.com/article/S1201-9712(20)30011-4/pdf. பார்த்த நாள்: 16 January 2020. 
 64. 64.0 64.1 "Undiagnosed pneumonia – China (HU) (01): wildlife sales, market closed, RFI Archive Number: 20200102.6866757". Pro-MED-mail. International Society for Infectious Diseases. 22 January 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 65. 65.0 65.1 Cohen, Jon; Normile, Dennis (17 January 2020). "New SARS-like virus in China triggers alarm". Science 367 (6475): 234–235. doi:10.1126/science.367.6475.234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:31949058. 
 66. 66.0 66.1 Parry, Jane (January 2020). "China coronavirus: cases surge as official admits human to human transmission". British Medical Journal 368: m236. doi:10.1136/bmj.m236. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-1833. பப்மெட்:31959587. 
 67. Perlman, Stanley (24 January 2020). "Another Decade, Another Coronavirus". New England Journal of Medicine 0: null. doi:10.1056/NEJMe2001126. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:31978944. 
 68. "Coronavirus declared global health emergency". பிபிசி. 30 January 2020. https://www.bbc.com/news/world-51318246. 
 69. Joseph, Andrew (30 January 2020). "WHO declares coronavirus outbreak a global health emergency". Stat News. https://www.statnews.com/2020/01/30/who-declares-coronavirus-outbreak-a-global-health-emergency/. 
 70. Wee, Sui-Lee; McNeil Jr., Donald G.; Hernández, Javier C. (30 January 2020). "W.H.O. Declares Global Emergency as Wuhan Coronavirus Spreads". https://www.nytimes.com/2020/01/30/health/coronavirus-world-health-organization.html. 
 71. "Statement on the second meeting of the International Health Regulations (2005) Emergency Committee regarding the outbreak of novel coronavirus (2019-nCoV)". உலக சுகாதார அமைப்பு (WHO). 30 January 2020. 30 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 72. "Coronavirus: what the WHO pandemic declaration means".
 73. "Coronavirus: Italy death toll reaches 3,405, overtaking China".
 74. "Chinese Doctor, Silenced After Warning of Outbreak, Dies From Coronavirus".

வெளி இணைப்புகள்[தொகு]