அனுமார் கோயில், அயோத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமார் கோயில், அயோத்தி
அமைவிடம்
நாடு:அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா
கோயில் தகவல்கள்

அனுமார் கர்ஹி அல்லது அனுமார் இல்லம் (Hanuman Garhi) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அயோத்தி நகரத்தில் உள்ள 10-ஆம் நூற்றான்டுக் கோயில் ஆகும்.[1] அயோத்தி நகரத்தின் நடுவில் அமைந்த இந்த அனுமார் கோயில் 76 படிக்கட்டுகள் கொண்டது. இக்கோயிலில் அனுமார் குழந்தை வடிவில், தன் அன்னை அஞ்சனையின் மடியில் அமர்ந்து காட்சி தருகிறார்.[2]

ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை இராமர் கோயிலுக்குச் செல்பவர்கள், முதலில் இந்த கோயிலில் குடிகொண்டுள்ள அனுமாரை வழிபட்ட பிறகே இராமரை வழிபடச் செல்லவேன்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை ஆகும்.[3][4][5]5 ஆகஸ்டு 2020 அன்று ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு சென்ற போது, முதலில் இந்த அனுமார் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.[6][7]

தொன்ம வரலாறு[தொகு]

இராவணனை வென்று இராமர், சீதையுடன் திரும்பிய பின்னர் அனுமான் அயோத்திலேயே வாழ்ந்து வந்தார். அனுமார் வாழ்ந்த இந்த இடத்தில் கிபி 10-ஆம் நூற்றாண்டில் கோயில் எழுப்பப்பட்டது. எனவே இக்கோயிலுக்கு அனுமார் இல்லம் பொருள் படியாக, இந்தியில் அனுமன் கர்கி அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இக்கோயில் வாயு மைந்தன் அனுமார், தன் அன்னை அஞ்சனையின் மடியில் அமர்ந்தவாறு காட்சி அளிக்கிறார். இந்த அனுமார் கோயில் ராம ஜென்ம பூமி அருகில் உள்ளது. 1855-இல் இக்கோயிலை இசுலாமியர்கள் இடிக்க முயற்சி செய்த போது அயோத்தி நவாப் தலையிட்டு காத்தார்.[8][9]

இதனையும் காண்க[தொகு]

விழாக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Philip Lutgendorf (2007-01-11) (in en). Hanuman's Tale: The Messages of a Divine Monkey. Oxford University Press. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-804220-4. https://books.google.co.in/books?id=fVFC2Nx-LP8C&pg=PA244&dq=Hanuman+garhi,+Ayodhya&hl=en&sa=X&ved=2ahUKEwjXjLupkPrqAhUQb30KHYTPCbUQ6AEwAXoECAMQAg#v=onepage&q=Hanuman%20garhi,%20Ayodhya&f=false. 
  2. "Hanuman Garhi | Ayodhya | UP Tourism" இம் மூலத்தில் இருந்து 2020-07-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200705080425/http://ayodhya.gov.in/en/details/hanuman-garhi/32003200. 
  3. "Hanuman Garhi". https://timesofindia.indiatimes.com/travel/ayodhya/hanuman-garhi/ps60794858.cms. 
  4. "Hanuman Garhi" இம் மூலத்தில் இருந்து 2020-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200728155251/http://www.uptourism.gov.in/post/hanuman-garhi. 
  5. "Incredible India | The Hanuman Garhi" இம் மூலத்தில் இருந்து 2020-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200728142104/https://www.incredibleindia.org/content/incredibleindia/en/destinations/ayodhya/the-hanuman-garhi.html. 
  6. 500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
  7. Ayodhya Ram Mandir Updates : ராமர் கோவில் பூமி பூஜை முக்கிய நிகழ்வுகள்
  8. Dutta, Prabhash K (7 December 2017). "Ayodhya: When Wajid Ali Shah saved Hanuman temple from Muslims near Babri Masjid" (in en). https://www.indiatoday.in/india/story/ayodhya-when-wajid-ali-shah-saved-hanuman-temple-from-muslims-near-babri-masjid-1102365-2017-12-07. 
  9. Pillai, Manu S. (2017-12-06). "When a temple was besieged in Ayodhya" (in en). https://www.livemint.com/Leisure/ONcV79E5E1fcHflqwdcnUM/When-a-temple-was-besieged-in-Ayodhya.html. 

வெளி இணைப்புகள்[தொகு]