சரயு ஆற்றின் படித்துறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபாவளி நாளில் சரயு ஆற்றின் படித்துறைகளின் காட்சி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பகுதியில் அமைந்த அயோத்தி நகரத்தில் பாயும் சரயு ஆற்றின் கரையில் அமைந்த பல படித்துறைகளை இராமரின் படித்துறைகள் (Ram ki Paidi) என்பர். அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் அமைந்த குழந்தை இராமரை தர்சனம் செய்ய இந்தியா முழுவதிலிருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள அனைவரும் சரயு ஆற்றில் குளிப்பதற்கு வசதியாக பல படித்துறைகள் நிறுவப்பட்டுள்ளது. தீபாவளி நாளன்று சரயு ஆற்றின் படித்துறைகள் முழுவதும் அகல் விளக்குகள் பொறித்து வைப்பர். 2019-ஆம் ஆண்டில் தீபாவளி நாளில் சரயு படித்துறைகளில் பக்தர்கள் 4.5 இலட்சம் அகல்விளக்குகள் எரிய விட்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]