ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
உருவாக்கம் | இந்திய அரசு |
---|---|
வகை | அறக்கட்டளை |
நோக்கம் | அயோத்தியில் இராமர் கோயில் வளாகம் கட்டும் பணி மற்றும் மேலாண்மை |
தலைமையகம் | R-20, கிரேட்டர் கைலாஷ், பகுதி -1, புது தில்லி |
தலைமையகம் | |
சேவை | அயோத்தி, உத்தரப் பிரதேசம் |
உறுப்பினர் | 15[1] |
தலைவர் | மகந்த் நிருத்தியகோபால் தாஸ் |
வலைத்தளம் | srjbtkshetra |
அயோத்தி பிரச்சினை |
---|
Organizations |
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை (Shri Ram Janmbhoomi Teerth Kshetra) என்பது 2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க 5 பிப்ரவரி 2020 அன்று நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு பட்டியல் சமூக உறுப்பினர் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கொண்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை நிறுவப்படுவதாக அறிவித்தார்.[3][4] இந்த அறக்கட்டளையின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லம் அமைந்த ஆர்- 20, கிரேட்டர் கைலாஷ், புது தில்லி 110048 என்ற முகவரியில் செயல்படும்.[5] இந்த அறக்கட்டளையின் தலைவராக மகந்த் நிருத்திய கோபால் தாஸ், பொதுச் செயலராக சம்பத் ராய் மற்றும் பொருளாராக சுவாமி கோவிந்த்தேவ் கிரி, புனே உள்ளனர்.[6][7] மேலும் இராமர் கோயில் கட்ட ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கர் நிலம் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களும்
[தொகு]அறக்கட்டளைக்கு 9 நிரந்தர உறுப்பினர்களையும், 6 நியமன உறுப்பினர்களையும் இந்திய அரசு நியமித்துள்ளது.[8]
நிரந்தர உறுப்பினர்கள்
[தொகு]மடாதிபதிகள்
[தொகு]- ஜெகத்குரு சங்கராச்சாரியார் ஜோதிஷ் பீடாபதி, சுவாமி வாசுதேவானந்தர், பிரயாக்ராஜ்
- ஜெகத்குரு மாதவாச்சாரிய சுவாமி விஷ்வ பிரசன்னதீர்த்த சுவாமி, உடுப்பி
- யோகபுருஷர் பரமானந்தர், அரித்துவார்
- சுவாமி கோவிந்ததேவ் கிரி, புனே
பொது மக்கள்
[தொகு]- விம்லேன்டு மோகன் பிரதாம் மிஸ்ரா, அயோத்தி அரச குடும்ப உறுப்பினர், அயோத்தி
- ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, அயோத்தி
- காமேஷ்வர் சௌபால் பட்டியல் சமூகத்தவர், பாட்னா
- மகந்த் தீரேந்திர தாஸ், நிர்மோகி அகாரா, அயோத்தி
நியமன உறுப்பினர்கள்
[தொகு]- இந்திய அரசின் பிரதியாக, இந்திய அரசில் இணைச்செயலாளர் பதவியில் உள்ள ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. (பதவி வழி-Ex-officio)
- உத்தரப் பிரதேச அரசுப் பிரதிநிதியாக ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. (பதவி வழி)
- அயோத்தி மாவட்ட இந்து சமய நீதிபதி (பதவி வழி)
- இந்த அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் வளாகம் கட்டுவதற்கு தலைவராக ஒருவர் (பதவி வழி) தேர்ந்தேடுக்கப்படுவார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members – Shri Ram Janmabhoomi Teerth Kshetra".
- ↑ "Official website of Shri Ram Janmabhoomi Tirtha Kshetra Trust starts operating". news.abplive.com. 18 June 2020.
- ↑ PM announces setting up of ‘Shri Ram Janma Bhoomi Tirtha Kshetra’ trust
- ↑ Shri Ram Janmabhoomi Teerth Kshetra: PM Modi announces Trust for Ram Mandir in Ayodhya
- ↑ Shri Ram Janmabhoomi Teerth Kshetra will have office in Delhi's Greater Kailash
- ↑ அயோத்தி ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமா் மோடி
- ↑ அயோத்தியில் ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடக்கணும்...
- ↑ Ram Temple Trust: God's advocate, Nirmohi Akhara, Dalit get seat on board